• India
```

தாமரை விதைக்கு இவ்வளவு பெரிய மார்க்கெட்டா...அதுவும் இந்தியால தான்...அதிகம் விளையுதாமே...!

Lotus Seeds Future Business

By Ramesh

Published on:  2025-02-15 12:45:26  |    63

Makahana Seeds Market Value - தாமரை விதைக்கு உலகளாவிய அளவில் இருக்கும் மார்க்கெட் குறித்து இந்த தொகுப்பில் முழுமையாக பார்க்கலாம்.

மக்கானா என்று உலகளாவிய அளவில் அழைக்கப்படும் தாமரை விதை ஆனது இன்று உலகளாவிய அளவில் ஒரு மிகப்பெரிய சந்தையை தொழில் முனைவோர்களுக்கு உருவாக்கி இருக்கிறது, சரி இந்த தாமரை விதையில் அப்படி என்ன தான் இருக்கிறது என்றால், பல முக்கிய மருத்துவ பலன்கள் இருப்பதாக ஆயுர்வேத மருத்துவர்களும் சித்த மருத்துவர்களும் கூறுகின்றனர், 

கல்லீரல் நச்சுத்தன்மையை நிக்குவது, நீரிழிவு நோயை கட்டுப்படுத்துவது, எடை குறைப்பு உள்ளிட்ட பல மருத்துவ விடயங்களுக்காக தாமரை விதையை பயன்படுத்துகிறார்களாம், இது ஒரு சிறந்த உணவு பொருளாகவும் தற்போது சந்தைகளில் வலம் வந்து கொண்டு இருக்கிறது, தாமரை விதையை குழம்பாகவும், வெறுமனையாகவும், நட்ஸ் போல நெய் போட்டு வறுத்தும் சாப்பிடுகின்றனர்.



அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் தாமரை விதைகளில் செய்யப்படும் உணவு வகைகள் அதிகமாக விரும்பப்பட்டு வருகின்றன, இத்தகைய தாமரை விதை இந்தியாவில் தான் 80% அளவில் விளைகிறது, அதாவது தாமரை விதைக்கான மேஜர் தயாரிப்பு என்பது இந்தியாவில் தான் இருக்கிறது, அந்த வகையில் கொள்முதல் மட்டும் செய்தால் ஏற்றுமதியில் கலக்கலாம்.

இந்தியாவில் தாமரை விதைக்கான மார்க்கெட் மதிப்பு 15 பில்லியன் ரூபாயாக இருக்கிறது, 2032 க்குள் 18.9 பில்லியனாக மாறுமாம். உலகளாவிய அளவில் தாமரை விதைக்கான மார்க்கெட் மதிப்பு 43.56 மில்லியன் டாலராக இருக்கிறது, இன்னும் 8 வருடத்தில் 100 மில்லியன் டாலரை தொடுமாம், அந்த வகையில் எதிர்கால தொழில் முனைவோர்களுக்கு ஒரு பெரிய மார்க்கெட் ஓபன் ஆகி இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.