Industrialist Ratan Tata Dies At 86 - பிரபல இந்திய தொழில் அதிபரும், டாடா குழுமத்தின் முன்னாள் தலைவருமான ரத்தன் டாடா உடல்நலக்குறைவால் காலமானார்.
Industrialist Ratan Tata Dies At 86 - இந்தியாவின்
மிகப்பெரும் வணிக முன்னோடியாக அனைவராலும் அறியப்படும் ரத்தன் டாடா (86) உடல் நலக்குறைவால் காலமாகி இருக்கிறார், இந்தியா, தொழில் துறையில் ஒரு மிகப்பெரிய தலைமையை இழந்து இருக்கிறது, இந்தியாவை மையமாக கொண்டு இயங்கும் டாடா குழுமம் இன்று உலகளாவிய அளவில் மிகப்பெரிய நிறுவனமாக உருவெடுத்து இருக்கிறது என்றால் அதற்கு ரத்தன் டாடாவின் பங்கு என்பது அளப்பரியது.
டாடா குழுமத்தின் பல்வேறு நிறுவனங்களில் சிறிய சிறிய பணிகளில் ஈடுபட்டு வந்து, அடித்தளத்தில் இருந்து அனைத்தையும் கற்று தேர்ந்தார் ரத்தன் டாடா. ரத்தன் ஜி டாட்டாவின் ஒய்விற்கு பின்னர், டாடா மோட்டார்ஸ், டாடா கன்சல்டன்ஸி, டாடா பவர், டாடா கெமிக்கல்ஸ் உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களுக்கு ரத்தன் டாடா தலைமை ஏற்றார், ரத்தன் டாடாவின் பதவி காலத்தில் தான் டாடா எப்போதும் இல்லாத அளவிற்கு உயர்வை சந்தித்தது.
ரத்தன்
டாடாவின் தலைமையில் டாடா நிறுவனம் ஜாகுவார், லேண்ட்ரோவர், கோரஸ் போன்ற முக்கிய நிறுவனங்களை எல்லாம் கையகப்படுத்தியது தொழில் துறையில் ஒரு மிகப்பெரிய மூவ் ஆக பார்க்கப்பட்டது. டாடா நினைத்து
இருந்தால் இந்தியாவில் உள்ள அனைத்து போட்டி நிறுவனங்களையும் வீழ்த்தி இந்தியாவின் மிகப்பெரும் பணக்கார அசைக்க முடியாத சக்தியாக உருவெடுத்து இருக்க முடியும்.
ஆனால் ரத்தன் டாடா அதை விரும்பவில்லை, அவர் தான் சம்பாதித்த ஒட்டு மொத்த வருவாயில் 60 முதல் 65 சதவிகிதம் வரை பொதுச் சேவைக்காக தான் பயன்படுத்தினார், இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூசன், பத்ம விபூசன் போன்ற பட்டங்களை எல்லாம் பெற்ற ரத்தன் டாடா, 1990 முதல் 2012 வரை டாடா குழுமத்தின் தலைவராக செயல்பட்டு வந்தார், டாடா நிறுவனத்தின் கீழ் ஒரு அறக்கட்டளை ஆரம்பித்து பலருக்கும் பல உதவிகள் புரிந்து வந்தார்.