• India
```

சரிவை சந்தித்த இண்டிகோ நிறுவனம்!! காலாண்டு வருமானம் மட்டும் எவ்ளோ தெரியுமா?

IndiGo Q3 Results In Tamil

By Dhiviyaraj

Published on:  2025-01-25 13:36:21  |    74

தற்போது இண்டிகோ நிறுவனத்தின் மூன்றாவது காலாண்டு வருமானம் – 2024 தொடர்பான தகவல் வெளியாகி இருக்கிறது.


நாட்டின் முன்னணி விமான நிறுவனமாக இண்டிகோ செயல்படுகிறது. இந்நிலையில் தற்போது இந்த நிறுவனத்தின்  மூன்றாவது காலாண்டு வருமானம் – 2024 தொடர்பான தகவல் வெளியாகி இருக்கிறது. 

அதன்படி, கடந்த 2024 ஆம் ஆண்டின் டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த மூன்றாவது காலாண்டில் ரூ. 2,450.1 கோடி ஒருங்கிணைந்த லாபம் ஈட்டியுள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 18% குறைவு ஆகும். 2023 ஆம் ஆண்டின் இதே காலாண்டில், நிறுவனம் ரூ. 2,986.3 கோடி லாபத்தைப் பதிவு செய்திருந்தது.


என்றாலும், 2024-25 மூன்றாவது காலாண்டில், நிறுவனத்தின் மொத்த வருமானம் ரூ. 20,062.3 கோடியில் இருந்து ரூ. 22,992.8 கோடி ஆக உயர்ந்து, முக்கியமான வளர்ச்சியைக் காண்பிக்கிறது.