Overview of the Indian Snacks Industry - இந்தியச் சந்தைகளில் தின்பண்டங்களுக்கான மார்க்கெட் அளவு குறித்து இந்த தொகுப்பில் முழுமையாக பார்க்கலாம்.
இந்த உலகம் எதன் பின்னால் செல்லாவிட்டாலும் சுவை என்பதன் பின்னால் போகாமல் இருக்கவே இருக்காது, சுவை பல நாடுகளில் ஒரு அங்கமாகவே இருக்கிறது, இந்தியாவில் கூட ஒரு சில நகரங்கள் சுவையால் அலங்கரிக்கப்படும், தின்பண்டங்களின் பெயரால் அலங்கரிக்கப்படும், உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால் ஹல்வான்னா திருநெல்வேலி, பால்கோவான்னா ஸ்ரீவில்லிபுத்தூர்.
இவ்வாறாக பல நகரங்களின் குறியீடாகவே தின்பண்டங்கள் இருக்கின்றன, சரி இந்தியாவின் தின்பண்டங்கள் மார்க்கெட் மதிப்பு என்ன இருக்கும் என்று யோசித்து பாருங்களேன், அது நினைக்க முடியாத ஒரு அளவாகவே இருக்கிறது, கிட்டத்தட்ட 700 முதல் 900 பில்லியன் ரூபாயாக தற்போதைக்கு இருப்பதாக தகவல், இந்த ஆண்டு முடிவிற்குள் அது ட்ரில்லியனை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலகளாவிய அளவில் ஸ்நாக்ஸ்க்கான மார்க்கெட் என்ன என்று கேட்டால் அது எலான் மஸ்க் அவர்களின் சொத்துமதிப்பை தாண்டும் என கூறப்படுகிறது, கடந்த 2023 யில் இந்த சர்வதேச ஸ்நாக்ஸ் மார்க்கெட்டின் மதிப்பு 692.52 பில்லியன் அமெரிக்க டாலர்களை தொட்டு இருப்பதாக தகவல், 2030 காலக்கட்டங்களில் இந்த மார்க்கெட் வளர்ச்சி தற்போதில் இருந்து 5% வரை இருக்கலாம் என கூறப்படுகிறது.
அந்த அவ்கையில் ஒரு நல்ல தொழில் துவங்க வேண்டும் என நினைப்பவர்கள் உங்கள் கைகளில் ஏதாவது ஸ்நாக்ஸ் வித்தைகள் வைத்து இருந்தால் அதை பலம் என நினைத்துக் கொண்டு களத்தில் தாராளமாக இறங்கலாம், இறக்கமே இல்லாத மார்க்கெட்டாக இந்த ஸ்நாக்ஸ் மார்க்கெட் இருக்கிறது, அதே சமயத்தில் பல தொழில் முனைவோர்களையும் இந்த ஸ்நாக்ஸ் மார்க்கெட் உருவாக்கி கொண்டு இருக்கிறது.