Indian Railways VS Reliance - மிகப்பெரிய மற்றும் பணக்கார இந்திய நிறுவனம் ஆன ரிலையன்ஸ் நிறுவனத்தை விட இந்திய ரயில்வே துறை அதிக வருமானம் பார்ப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.
Indian Railways VS Reliance - உலகளாவிய அளவில் அதிக ஊழியர்களை கொண்டு இயங்கும் இரண்டு இந்திய நிறுவனங்கள் எது என்று கேட்டால் ஒன்று பொதுத்துறை நிறுவனம் ஆன இந்திய ரயில்வேயை சொல்லலாம், இன்னொன்று அம்பானி அவர்களின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்சை சொல்லலாம், பொதுவாக பொதுத்துறை நிறுவனம் ஆன இந்திய ரயில்வேயில் மட்டும் 12 இலட்சம் ஊழியர்கள் பணி புரிந்து வருவதாக தகவல்.
அதே சமயத்தில் ரிலையன்ஸ் நிறுவனத்தில் 3.48 இலட்சம் ஊழியர்கள் பணி புரிந்து வருவதாக தகவல், பொதுவாக இந்தியாவின் பணக்கார நிறுவனம் எது என்றால் கேட்டால் அனைவரும் ரிலையன்ஸ்சை சொல்வார்கள், டாடா நிறுவனத்தை சொல்வார்கள், ஆனால் இந்தியன் ரயில்வே என்ற ஒரு மிகப்பெரிய வருமான சக்தி இந்தியாவில் இருக்கிறது என்பதை மறந்து விடுவார்கள்,
ரிலையன்ஸ் நிறுவனம் கடந்த நிதி ஆண்டில் மட்டும் 1 இலட்சம் கோடிக்கு மேல் வருமானம் ஈட்டி இருப்பதாக கூறப்படுகிறது, அதே சமயத்தில் இந்திய ரயில்வே துறை கடந்த ஆண்டில் ஈட்டிய வருமானம் கிட்டத்தட்ட 2.78 இலட்சம் கோடி என கூறப்படுகிறது, கிட்டத்தட்ட 3 இலட்சம், அதாவது இந்தியாவின் மிகப்பெரிய பணக்கார நிறுவனம் ஆக அறியப்படும் ரிலையன்ஸ் நிறுவனத்தை விட 3 மடங்கு வருமானம் ஈட்டுகிறது,
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனம் ஆக அறியப்படும் இந்திய ரயில்வே துறை ஆனது, உலகின் பல வலிமை மிக்க நிறுவனங்களின் வருமானத்தையும் வலிமையையும் மிஞ்சி நிற்கிறது, இது போக கடந்த 2023-24 நிதி ஆண்டைக் காட்டிலும், 2024-25 காலக்கட்டத்தில் இந்திய ரயில்வே துறையின் வருமானமும் 8% அளவில் அதிகரித்து இருப்பதாக ஒரு தகவல் இருக்கிறது.