• India
```

இந்தியா – கென்யா தேயிலை இறக்குமதி உயர்வு.. பாதிப்படைந்த உள்நாட்டு வர்த்தகர்கள்!!

India becomes largest importer of Tea

By Dhiviyaraj

Published on:  2025-01-25 13:47:38  |    67

இந்தியா, கென்யாவில் இருந்து அதிக அளவில் தேயிலை இறக்குமதி செய்யும் முன்னணி நாடாக திகழ்கிறது

இந்தியா, கென்யாவில் இருந்து அதிக அளவில் தேயிலை இறக்குமதி செய்யும் முன்னணி நாடாக திகழ்கிறது. 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, 2024 ஆம் ஆண்டில் கென்யா தேயிலை இறக்குமதி 288% அதிகரித்துள்ளது.

2023 ஜனவரி முதல் அக்டோபர் வரை 35.3 லட்சம் கிலோ தேயிலை இறக்குமதி செய்யப்பட்ட நிலையில், 2024 ஆம் ஆண்டின் இதே காலக்கட்டத்தில் இது 1.37 கோடி கிலோ ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம், சீனாவிற்கு அடுத்தபடியாக இந்தியா, கென்யா தேயிலை இறக்குமதியில் முன்னிலை வகிக்கிறது.


உள்ளூர் தேயிலை சந்தை:

இந்த இறக்குமதியால் அசாம் மற்றும் மேற்கு வங்கத்தில் உள்ள தேயிலை உற்பத்தியாளர்கள் கவலையடைந்துள்ளனர். இந்திய தேயிலையின் உயர்ந்த விலையால் விற்பனை சவாலாக உள்ளது.

கென்யா தேயிலை சராசரி விலை – ரூ. 156.73/கிலோ

அசாம் தேயிலை (2023 அக்டோபர் விலை) – ரூ. 252.83/கிலோ

இந்த விலை வேறுபாடு, உள்ளூர் தேயிலை வணிகர்களுக்கு புதிய சவால்களை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.