Essential Steps for Building a Thriving Business - இங்கு தொழில் என்பது பலரின் ஆசை, அந்த வகையில் ஒரு நல்ல தொழில் துவங்க என்ன என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
பொதுவாகவே தொழில் துவங்குவது என்பது பலரின் கனவுகளாக இங்கு இருக்கிறது, அரசு வேலைகளில் பணி புரிபவர்கள் முதல் ஐடி வேலையில் பணி புரிவர்கள் வரை ஒரு நல்ல தொழிலுக்காகவே ஏங்கி நிற்கின்றனர், பலரும் வேலையை விட்டு விட்டு தொழிலில் வெற்றிக் கொடிகட்டி பறப்பதையும் நம்மால் பார்க்க தான் முடிகிறது, அந்த வகையில் ஒரு நல்ல தொழில் துவங்க என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம்.
முதலில் சரியான திட்டமிடல் இருக்க வேண்டும், தொழிலை ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே கள ஆய்வு என்பதை நடத்தி இருக்க வேண்டும், தொழிலுக்கான நோக்கம், சந்தை, வாடிக்கையாளர்கள், தொழில் போட்டியாளர்கள், முதலீடு, இலக்கு, உத்திகள் இவை அனைத்தையும் நன்கு அறிந்த பிறகு தொழிலுக்கான பிள்ளையார் சுழி என்பதை இட வேண்டும்.
சரி தொழில் ஆரம்பித்தாயிற்று அதை எப்படி வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்ப்பது என்றால் தரம், தனித்துவமான தயாரிப்பு, சரியான சந்தைப்படுத்தும் திறன் இந்த மூன்றும் தான் உங்கள் தயாரிப்பை உங்கள் தொழிலை தூக்கி நிறுத்தும் முக்கிய காரணிகள், ஆதலால் தொழிலை ஆரம்பிக்க நினைப்பவர்கள் இந்த மூன்று காரணிகளை இறுக பற்றிக் கொள்ள வேண்டும்.
தொழில் ஆரம்பித்து தரமாக தயாரித்து சந்தைப்படுத்தியாயிற்று, அதற்கப்புறம் என்ன என்றால், அணுகுமுறை என்பது மிக மிக முக்கியம், அதாவது ஒருவர் உங்களிடம் ஒருமுறை ஒரு பொருளை கொள்முதல் செய்கிறார் என்றால் அவர் நீங்கள் காட்டும் அணுகுமுறையினால் மட்டுமே அடுத்தடுத்து உங்களை நாடி வருவார், அதனால் அணுகுமுறை என்பது ஒரு தொழிலிலும் மிக மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
" மேற்கண்ட வழிமுறைகளை சரியாக கையாண்டு தொழிலை வெற்றிகரமாக நடத்த முடியும், ஆனால் அதில் நீடிப்பதற்கு தினசரி அப்டேட் ஆகுவது, புதுமைகளை புகுத்துவதும் அவசியம் ஆகிறது, அது தான் உங்கள் தொழிலை பல தலைமுறைகளுக்கு நீடிக்க வைத்திடும் "