• India
```

சிபில் ஸ்கோர் தேவையே இல்லை..கவலைய விடுங்க..!கடன் பெற சிறந்த வழிகள் இதோ..!!

How To Increase Credit Score | How To Increase My Credit Score

How To Increase Credit Score -சிபில் ஸ்கோர் குறைவாக இருந்தால், கடன் விண்ணப்பம் நிராகரிக்கப்பட வாய்ப்புள்ளது. ஆனால், கவலைப்பட வேண்டாம்! சிபில் ஸ்கோர் குறைவாக இருந்தாலும் கடனைப் பெற சில வழிகள் உள்ளது.அதை பற்றி பார்க்கலாம்.

How To Increase Credit Score -உங்கள் சிபில் ஸ்கோர் உங்கள் கடந்த கால கடன் திருப்பிச் செலுத்தும் வரலாற்றின் அடிப்படையில் மாறுபடும். சிபில் ஸ்கோர் குறைவாக இருந்தால், கடன் விண்ணப்பம் நிராகரிக்கப்பட வாய்ப்புள்ளது. ஆனால், கவலைப்பட வேண்டாம்! சிபில் ஸ்கோர் குறைவாக இருந்தாலும் கடனைப் பெற சில வழிகள் உள்ளது.அதை பற்றி பார்க்கலாம். 

நீங்கள் கடன் பெற விண்ணப்பிக்கும் போது வங்கி உங்களுடைய சிபில் ஸ்கோரை வைத்து நீங்கள் முன்பு வாங்கிய கடனை எந்த தேதியில் திருப்பி செலுத்தி உள்ளீர்கள்.சரியாக திருப்பி செலுத்தி இருக்கிறீர்களா இல்லையாஎன்ற விவரங்களை தெரிந்து கொண்ட பிறகே உங்களுக்கு கடன் கொடுப்பதை உறுதி செய்யும்.

சிபில் ஸ்கோர் குறைவாக இருந்தாலும் கடன் பெறும் 5 வழிகள்:


NBFC-களில் விண்ணப்பிக்கவும்:

சிபில் ஸ்கோர் குறைவாக இருந்தாலும், NBFC-கள் (Non-Banking Financial Companies) கடனை வழங்கும்.ஆனால், வங்கிகளின் வட்டி விகிதங்களை காட்டிலும் விட NBFC-களின் வட்டி விகிதம் அதிகமாக இருக்கும்.

ஜாயின்ட் லோன் பெற விண்ணப்பிக்கவும்:

உங்கள் சிபில் ஸ்கோர் குறைவாக இருந்தால், நல்ல கிரெடிட் ஸ்கோர் கொண்ட ஒருவரை சேர்த்து கூட்டு கடன் பெறலாம். இதன் மூலம் உங்கள் கடன் ஒப்புதல் எந்த வித சிக்கலின்றி கிடைக்கும்.

முன்கூட்டியே சம்பளம் பெறுதல்:


நீங்கள் வேலையில் இருந்தால்,உங்கள் நிறுவனம் முன்பண சம்பளம் வழங்கும் வகையில் உடனடி நிதி தேவையை பூர்த்தி செய்யலாம்.

FDக்கு எதிராக கடன் பெறுங்கள்:

உங்கள் FD, எல்ஐசி, பிபிஎஃப் போன்ற முதலீடுகளை அடிப்படையாகக் கொண்டு கடன் பெறலாம். PPF கணக்கு குறைந்தது ஒரு நிதியாண்டு செயலில் இருந்தால், அதற்கு எதிராக கடனுக்கு விண்ணப்பிக்கலாம்.இதன் மூலம்  கடன் வசதி 5 ஆண்டுகள் வரை கிடைக்ககூடும்.

தங்கக் கடன்:

தங்கத்தை பிணையமாக வைத்து குறைந்த ஆவணத்துடன் கடன் பெறலாம்.சிபில் ஸ்கோர் குறைவாக இருந்தாலும், தங்கத்தின் 75% மதிப்பில் கடன் கிடைக்கும்.