இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தொழிலதிபர் ஜக்தீப் சிங் குறித்து சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்படுவது பற்றி நாம் பார்க்க முடிகிறது. அதற்கு காரணம், ஜக்தீப் சிங் உலகிலேயே அதிக சம்பளம் வாங்கும் நபராக இருக்கிறார்.
உலகில் பணியாற்றும் அனைத்து தலைமை நிர்வாக அதிகாரிகளை விடவும் ஜக்தீப் சிங்கின் சம்பளம் அதிகமாக இருக்கிறது என்று கூறப்படுகிறது. இவருடைய ஒருநாள் சம்பளத்தை கணக்கிட்டால், அந்த எண்ணிக்கையே ரூ. 48 கோடி வரும் என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இவரது மொத்த ஆண்டு சம்பளம் ரூ. 17,500 கோடி இருக்குமாம். இத்தனை கோடிகளை சம்பளமாக வாங்கும் ஜக்தீப் சிங் எந்த வேலை செய்கிறார் என்பதை பற்றி பார்க்கலாம்.
ஜக்தீப் சிங் கடந்த 2010-ம் ஆண்டில் குவாண்டம் ஸ்கேப் என்ற நிறுவனத்தை தொடங்கினார். அதற்கு முன்பாக ஹெவ்லெட்-பேக்கார்ட் (HP) மற்றும் சன் மைக்ரோசிஸ்டம்ஸ் ஆகிய நிறுவனங்களில் வேலை செய்துள்ளார். Infinera, Lightera, Onfiber Communications, Airsoft ஆகிய பல்வேறு நிறுவனங்களில் தலைமை பொறுப்பில் இருந்துள்ளார்.
தற்போது, இவர் ஸ்டெல்த் ஸ்டார்ட் அப் என்ற நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.
இவரின் உழைப்பும், திறமையும், வளர்ச்சியும், அவற்றின் மூலம் இவருக்குக் கிடைத்திருக்கும் அங்கீகாரங்களும், இந்தியாவை உலக நாடுகளின் மத்தியில் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.