Heritage Foods Latest News- ஹெரிட்டேஜ் புட்ஸ் நிறுவனத்தின் பங்கு விலை கடுமையாக உயர்ந்ததன் காரணமாக, தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவின் மனைவி நர புவனேஸ்வரியின் சொத்து மதிப்பு ஐந்து நாட்களில் 584 கோடியை கடந்துள்ளது.
ஹெரிட்டேஜ் புட்ஸ் நிறுவனத்தின் பங்கு விலை கணிசமாக உயர்ந்ததன் காரணமாக, தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவின் மனைவி நர புவனேஸ்வரியின் சொத்து மதிப்பு ஐந்தே நாட்களில் 584 கோடி ரூபாயால் அதிகரித்துள்ளது. சமீபத்தில் நடைபெற்ற ஆந்திர மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றிருந்தார்கள்.
இதனையடுத்து, நர புவனேஸ்வரியின் ஹெரிட்டேஜ் புட்ஸ் நிறுவனத்தின் பங்கு விலை கணிசமாக உயர்ந்தது. பால் மற்றும் அதன் துணை பொருட்களை விற்பனை செய்யும் ஹெரிட்டேஜ் புட்ஸ் நிறுவனத்தில் புவனேஸ்வரி 24% பங்குகளை வைத்திருக்கிறார், இது 2 கோடியே 26 லட்சம் பங்குகளுக்கு சமம்.
31ஆம் தேதி 402 ரூபாயாக இருந்த ஹெரிட்டேஜ் புட்ஸ் நிறுவனத்தின் பங்கு விலை, ஆந்திர சட்டமன்ற தேர்தல் முடிவுகளின் பின்னர் ஐந்தே நாட்களில் 50% க்கும் மேல் உயர்ந்து 661 ரூபாய் என்ற புதிய உச்சத்தை எட்டியது. இந்த பங்கு விலை உயர்வின் காரணமாக, புவனேஸ்வரியின் சொத்து மதிப்பு 584 கோடி ரூபாயால் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.