Market Size Of Bottled Water - பாட்டில் மினரல் வாட்டரின் சந்தை மதிப்பு 500 பில்லியன் டாலரை நோக்கி சென்று கொண்டு இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது, அது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
நீரின்றி அமையாது உலகு என்பது வள்ளுவன் வாக்கு, ஆனால் அது என்னவோ உண்மை தான், இந்த உலகில் நீர் மட்டும் இல்லையெனில் உலகமே சமநிலை தவறி தான் சுழலும், உலகில் உயிர் என்று ஒன்று இருந்ததற்கான சான்றே இல்லாமல் போய் விடும், உடலுக்கு எப்படி உயிர் என்பது அத்தியாவசியமோ, அந்த உயிருக்கு நீர் என்பது அத்தியாவசியம்.
ஒரு காலத்தில் நீர் என்பது அனைவருக்கும் பொதுவான ஒன்றாக இருந்தது, அது அனைவருக்கும் சமமாக கிடைக்கும் ஒன்றாக பார்க்கப்பட்டு வந்தது, ஆனால் தற்போது அப்படி இல்லை, அனைவருக்கும் சமமாக கிடைக்க வேண்டிய நீர் கூட ஒரு தொழிலாக மாறும் நிலை வந்து விட்டது, சரி இந்த பாட்டில்டு வாட்டர் கலாச்சாரம் என்பது 1622 யில் ஐக்கிய இராச்சியத்தில் தான் துவங்கியது.
ஆனால் ஒரு தொழிலாக, உருவெடுத்தது என்பது 1767 யில் தான், கோக் நிறுவனம் தான் 1999 களில் பாட்டில் வாட்டர்களுக்கு என்று ஒரு தனியாக பிராண்டிங்கை ஏற்படுத்தியது, கோக் நிறுவனம் ஆரம்பித்த போது யாராவது தண்ணிய எல்லாம் பாட்டில்ல வாங்குவாங்களா என இந்திய மக்கள் கேட்டுக் கொண்டு இருந்தனர், ஆனால் தற்போது கோக் நிறுவனத்தின் மிகப்பெரிய சந்தையாக இந்தியா இருப்பது இந்தியா தான்.
பாட்டில் வாட்டரின் உலகளாவிய சந்தை மதிப்பு என்பது கிட்டத்தட்ட 300 பில்லியன் டாலருக்கும் மேல் இருக்கும் என கூறப்படுகிறது, 2030 யில் இதன் சந்தை மதிப்பு என்பது 500 பில்லியன் டாலராக அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது, இந்தியாவில் பாட்டில் வாட்டர் சந்தையின் மதிப்பு என்பது கிட்டத்தட்ட 4 பில்லியன் டாலராக இருப்பதாக தகவல்.
" 2030 யில் இந்தியாவில் பாட்டில் வாட்டரின் சந்தை மதிப்பு 9 பில்லியன் டாலராக அதிகரிக்க கூடும் என் எதிர்பார்க்கப்படுகிறது "