General Motors News -உலகளாவிய அளவில் செயல்பட்டு வரும் புதிய தொழில்நுட்பங்களுடனும், புதிய தொழில் நுட்ப நிறுவனங்களுடனும் போட்டியிட, ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்துடன் அதிகாரப்பூர்வமாக கைகோர்த்து இருக்கிறது ஹீண்டாய் நிறுவனம்.
அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் மிகப்பெரிய வாகன உற்பத்தி மையமான ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனமும், தென் கொரியாவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் மிகப்பெரிய வாகன உற்பத்தி மையமான ஹீண்டாய் நிறுவனமும், வரும் காலங்களில் இணைந்து இயங்கும் வகையில் புதிய ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்து இட்டு இருக்கின்றனர்.
உலகளாவிய அளவில் வாகன உற்பத்திகளை அதிகரிக்கவும், புதிய தொழில்நுட்பங்கள், பேட்டரி வாகனங்கள், ஹைட்ரஜன் டெக்னாலஜிஸ், பொது பயண வாகனங்கள், கமெர்சியல் வாகனங்கள் ஆகியவற்றின் தயாரிப்பில் இணைந்து செயல்படவும் இரு நிறுவனங்களும் முடிவெடுத்து இருக்கின்றனர்.
ஹீண்டாய் நிறுவனத்தின் நிர்வாக தலைவர் ஃயூசன் சங், ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக தலைவர் மேரி பாஃரா ஆகியோரின் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்து இடப்பட்டு இருக்கிறது