Flower Market Price List -ஓணம் பண்டிகை மற்றும் ஆவணி கடைசி முகூர்த்தம் காரணமாக, கன்னியாகுமரி மாவட்டத்தின் முக்கிய மலர்சந்தையான தோவாளையில், மலர்களின் விலை வெகுவாக உயர்ந்துள்ளது.
Flower Market Price List -பண்டிகை காலங்களில் மக்கள் பூக்களை அதிகமாக வாங்கி பயன்படுத்துவார்கள்.அந்நிலையில் குறிப்பிட்டு அந்த பண்டிகை நாளில் மட்டும் விலைகள் உச்சத்திற்கு சென்றுவிடும்.அதே போல் தான் தற்பொழுது ஓணம் பண்டிகையை முன்னிட்டு பூக்களின் விலை அதிகரித்துள்ளது.
ஓணம் பண்டிகை மற்றும் ஆவணி கடைசி சுபமுகூர்த்த நாளின் காரணமாக, தோவாளை மலர்சந்தையில் பூக்களின் விலை நெகிழ்ந்துள்ளது.மக்களின் வருகையும் அதிகரித்து இருந்தது.
கன்னியாகுமரி மாவட்டத்தின் தோவாளை மலர்சந்தை தமிழகத்தின் மிகப் பெரிய சந்தையாக இருக்கிறது.மேலும், பல பகுதிகளிலிருந்து மலர்கள் இங்கு கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றது.
திருவோணம் பண்டிகையையொட்டி, மல்லிகைப்பூ, பிச்சிப்பூ உள்ளிட்ட பூக்களின் விலைகள் இருமடங்காக உயர்ந்துள்ளன. மல்லிகைப்பூ கிலோ ரூ.2500, பிச்சிப்பூ கிலோ ரூ.1500 ஆகியவையாக விற்பனையாகின்றது.
பூ வியாபாரிகள் கூறுகையில், ஓணம் பண்டிகையால் பூக்களின் விலை மேலும் உயரக்கூடும், நாளை இன்னும் அதிக விற்பனை இருக்கும் எனத் தெரிவிக்கின்றனர்.