Fastest Delivery App For Clothes - Slikk செயலி மூலம், விருப்பமான ஆடைகளை ஆர்டர் செய்து, டெலிவரி செய்யப்பட்ட உடைகளை வீட்டிலேயே அணிந்து பார்த்து வாங்கும் தனித்துவமான சேவையை பெறலாம்.
Fastest Delivery App For Clothes -உணவு மற்றும் மளிகை பொருட்களை ஒரு மணி நேரத்திற்குள் டெலிவரி செய்வது போல, இப்போது ஆடைகளையும் 60 நிமிடங்களில் டெலிவரி செய்யும் ஒரு புதிய ஸ்டார்ட் அப், Slikk, பெங்களூரில் தொடங்கப்பட்டுள்ளது.
Slikk என்பது ஒரு செயலி மூலம் இயங்கும் தொழில், இதில் பயனர்கள் விரும்பிய ஆடைகளை ஆர்டர் செய்து, 60 நிமிடங்களுக்குள் பெற்றுக் கொள்ள முடியும்.மேலும், இந்த செயலியை உருவாக்கிய அக்சய் குலாட்டி, “நவீன யுகத்தினரின் வேகமான வாழ்க்கை முறையை கருத்தில் கொண்டு, ஷாப்பிங் அனுபவத்தை எளிமைப்படுத்துவதே எங்கள் நோக்கம்” என்று கூறுகிறார்.
இந்த Slikk செயலியின் மற்றொரு சிறப்பு அம்சம், ஆர்டர் செய்த ஆடைகளை வீட்டில் வந்து அணிந்து பார்த்து, விருப்பமில்லையெனில் திருப்பி வழங்கலாம். இதற்கு, 50 ரூபாய் கூடுதல் கட்டணமாக வசூலிக்கின்றனர்.
முதல் கட்டமாக, Slikk மூன்று லட்சம் டாலர் முதலீட்டுடன் செயல்படத் தொடங்கியது, தற்பொழுது 100 க்கும் மேற்பட்ட பிராண்டுகளின் ஆடைகளை பெங்களூரின் 70% பகுதிகளுக்கு டெலிவரி செய்து வருகிறது.மேலும், விரைவில் மற்ற நகரங்களுக்கும், அழகு சாதன பொருட்கள் மற்றும் வீட்டு அலங்காரப் பொருட்கள் உள்ளிட்டவற்றையும் இந்தச் சேவையில் சேர்க்க திட்டமிட்டுள்ளது.