• India
```

350 பில்லியன் டாலரை நெருங்கும் எலான் மஸ்க்கின் நிகர சொத்து மதிப்பு...!

Elon Musk Networth Reached Near To 350 Billion Dollars

By Ramesh

Published on:  2024-11-23 23:55:24  |    214

Elon Musk Networth Reached Near To 350 Billion Dollars - டொனால்ட் ட்ரம்ப்பின் வெற்றியை அடுத்து எலான் மஸ்க்கின் நிகர சொத்து மதிப்பு ஆனது ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது.

Elon Musk Networth Reached Near To 350 Billion Dollars - ஸ்பேஸ் எக்ஸ், ட்விட்டர், டெஸ்லா, Open AI, நியூராலிங் என பல நிறுவனங்களின் நிறுவனர் ஆக அறியப்படும் எலான் மஸ்க் அவர்களின் நிகர சொத்து மதிப்பு மட்டும் 350 பில்லியன் டாலர்களை நெருங்கி இருப்பதாக கூறப்படுகிறது, உலகின் தலை சிறந்த தொழில்நுட்பங்களின் மூலம் உலக நாடுகளையே தன்வசப்படுத்தி இருக்கும் எலான் மஸ்க் தற்போது யாரும் எட்ட முடியாத பில்லியனர் ஆக உருவெடுத்து இருக்கிறார்.

ஒரு ஆறு மாதத்திற்கு முன்பு எலான் மஸ்க்கின் நிகர சொத்து பதிப்பு 220 பில்லியன் டாலர் என அறியப்பட்ட நிலையில், தற்போது அவரின் சொத்து மதிப்பு கிட்டதட்ட 350 பில்லியன் டாலரை நெருங்கி இருக்கிறது, அதுவும் நவம்பர் 5, அதாவது டொனால்ட் ட்ரம்ப்பின் வெற்றிக்கு பின்னர் கிட்டதட்ட எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு 80 பில்லியன் டாலர் உயர்ந்து இருப்பதாக தகவல்.



எலான் மஸ்க் அவர்களின் AI நிறுவனம் மட்டும் டொனால்ட் ட்ரம்ப்பின் வெற்றிக்கு பின்னர் இரண்டு மடங்கு வேகமாக உயர்ந்து வருகிறதாம், பங்குச்சந்தைகளிலும் எலான் மஸ்க்கின் நிறுவனங்கள் அனைத்தும் பல மடங்கு இலாபங்களை குவித்து வருவதாக தகவல், இதனால் யாரும் எலான் மஸ்க்கிடம் போட்டி போட முடியாத அளவிற்கு எலான் மஸ்க்கின் நிகர சொத்து மதிப்பு உயர்ந்து இருக்கிறது.

இந்த ஆண்டு இறுதிக்குள் எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு 400 பில்லியன் டாலரை தாண்டக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது, டொனால்ட் ட்ரம்பின் ஆட்சியில் எலான் மஸ்க்கின் நிறுவனங்கள் அனைத்தும் ட்ரம்ப்பின் சப்போர்ட் உடன் பெரிதாக விரிவுபடுத்தப்பட வாய்ப்பு இருக்கிறது, அடுத்த வருடத்தில் எல்லாம் உலகில் 500 பில்லியன் டாலரை சம்பாதித்த முதல் பணக்காரர் என்ற பெருமையை எலான் மஸ்க் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.