அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்றதை தொடர்ந்து, பிட்காயின் உள்ளிட்ட கிரிப்டோ கரன்சிகள் தொடக்கத்தில் உயர்வு கண்டன.
அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்றதை தொடர்ந்து, பிட்காயின் உள்ளிட்ட கிரிப்டோ கரன்சிகள் தொடக்கத்தில் உயர்வு கண்டன, பின்னர் மறுபடியும் சரிவு அடைந்து இருக்கிறது.
கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு ட்ரம்ப் வெற்றி பெற்றதை அடுத்து, கிரிப்டோ கரன்சிகளின் மதிப்பு அதிகம் ஆனது. ட்ரம்ப், கிரிப்டோ கரன்சிகளை ஆதரிக்கும் கொள்கைகளை அறிவிக்கலாம் என்ற எதிர்பார்ப்பின் விளைவாக, பிட்காயின் 1,09,071 டாலர் என்ற புதிய உச்சத்தை தொட்டது.
ஆனால், இந்த உயர்வு அதிக நாள் நீடிக்கவில்லை. பதவியேற்ற ட்ரம்ப் எந்த கிரிப்டோ தொடர்பான அறிவிப்பையும் வெளியிடாததால், சந்தையில் நிச்சயமற்ற தன்மை உருவாகி உள்ளது. இதன் காரணமாக பிட்காயின் மதிப்பு 1,01,705 டாலராக சரிந்ததுள்ளது.