BSNL News Tamil -ஜியோ வின் ரீசார்ஜ் பிளான் விலை அதிகப்படுத்தியதால் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே உள்ளது.
தனியார் டெலிகாம் நிறுவனங்களான ஜியோ,ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா 12 முதல் 25 சதவீதம் வரை கட்டனங்களை உயர்த்தின. இது கடந்த ஜூலை மாதம் 3 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்ததைத் தொடர்ந்து,
ஜியோ வின் ரீசார்ஜ் பிளான் விலை அதிகப்படுத்தியதால் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே உள்ளது. இத்தனையடுத்து ஜியோ பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் தங்களுடைய சிம் கார்டுகளை பொதுத் துறை நிறுவனமான பி.எஸ்.என்,எல், க்கு மாற்றி உள்ளனர்.
மீண்டும் உருவெடுக்கும் பி.எஸ்.என்.எல் நிறுவனம்.
தனியார் நிறுவனங்கள் 12 சதவீதம் முதல் 25 சதவீதம் வரை கட்டணத்தை உயர்த்திய பிறகு, வாடிக்கையாளர்களின் வருகை அதிகமா உள்ளதால் மீண்டும் உயிர்த்தெழும் பொதுத்துறை நிருவனம் பி.எஸ்.என்.எல். எனவே, தமிழ்நாட்டில் கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் சுமார் 2.5 லட்சம் வாடிக்கையாளர்கள் தனியார் நிறுவனங்களில் இருந்து பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல் நிவனத்திற்கு மாறியுள்ளனர்.
மேலும், அது மட்டுமல்லாமல் 17 லட்சம் வாடிக்கையாளர்கள் தங்களின் மொபைல் எண் ஐ மாற்றாமல் புதிதாக பி.எஸ்.என்.எல் க்கு வருகை தெரிவித்துள்ளனர். மேலும், இதனைத் தொடர்ந்து பி.எஸ்.என்.எல் நெட்ஒர்க் தரத்தை மேம்படுத்த வேண்டும் என்று வாடிக்கையாளர்கள் வேண்டுகோள் தெரித்துள்ளனர்.