• India
```

இனி BSNL தான் BEST..தூள் கிளப்பும் புதிய திட்டம்!!

BSNL News In Tamil | BSNL New Update

BSNL News In Tamil -ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் BSNL-க்கு மாற தொடங்கினர்.

BSNL News In Tamil -இந்திய தொலைத் தொடர்பு சந்தையில், ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல்  இவை இரண்டும் முன்னனி வகுத்து வந்த நிலையில்,இந்த இரண்டு நிறுவனங்களும் சில மாதங்களுக்கு முன்பு தங்களின் ரீசார்ஜ் கட்டணங்களை அதிகமாக்கியதால்.ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் BSNL-க்கு மாற தொடங்கினர்.

BSNL நிறுவனம், இந்த வாய்ப்பை மிகச்சிறப்பாக பயன்படுத்தி கொண்டிருக்கிறது. இந்த BSNL நிறுவனத்திற்கு மாறிய மக்களுக்கு விருந்து வைக்கும் வகையில் சூப்பர் ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறது.ரூபாய்.997 ரீசார்ஜ் திட்டம் ஒன்றை கொண்டு வந்துள்ளது. இந்த புதிய ரீசார்ஜ் திட்டத்தினால் BSNL நிறுவனத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இந்த ரீசார்ஜ் திட்டம் வாடிக்கையாளர்களுக்கு, 5 மாத காலத்திற்கு தொலைத்தொடர்பு சேவையையும், தினமும் 2 ஜிபி டேட்டா பயன்படுத்தலாம் என்றும், சரியாக 160 நாட்களுக்கு 320 ஜிபி டேட்டா மற்றும் ஒரு நாளுக்கு 100 எஸ்எம்எஸ் அனுப்பும் வசதி உள்ளது.

மேலும், இந்த திட்டத்தில் Hardy Games, Zing Music, BSNL Tune போன்றவைகளை இலவசமாகப் கொடுக்கிறது. இதனை தொடர்ந்து, BSNL நிறுவனம் வரும் அக்டோபர் 15 ஆம் தேதி 4ஜி  சேவையை மக்களுக்கு அறிமுகப்படுத்தவுள்ளது.மேலும், அதிவிரைவில் 5ஜி துறையை நடைமுறைக்கு கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், BSNL நிறுவனத்தை தேர்வு செய்யும் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது என்று எதிர்பார்க்கப்படுகிறது.