பாலிவுட் சினிமாவில் உச்ச நடிகராக இருப்பவர் தான் அமிதாப் பச்சன். இவரும் இவரது மகனும் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்து இருக்கின்றனர். இவர்கள் இருவரும் மும்பையில் MULUND பகுதியில் 10 அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்கியுள்ளனர். இவர்கள் இருவரின் ரியல் எஸ்டேட் சொத்து மதிப்பு மட்டும் ரூபாய் 200 கோடிக்கும் மேல் இருக்கும் என்று ஆய்வில் சொல்லப்படுகிறது.
சினிமா பிரபலங்கள் தங்களுக்கு கிடைக்கும் சம்பளத்தை பல்வேறு விதங்களில் முதலீடு செய்வதை வழக்கமாக வைத்து உள்ளனர். இதில் ரியல் எஸ்டேட் முதலீடு செய்வதில் தான் ஆர்வம் காட்டுவதாக SQUARE YARDS நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.
கடந்த 2020ம் ஆண்டு முதல் 2024 வரை அமிதாப் பச்சன் மற்றும் அபிஷேக் பச்சன் ரூபாய் 200 கோடிக்கு முதலீடு செய்து இருக்கிறார்களாம். மேலும் பிரபல நடிகை ஜான்வி கபூர் ரூபாய் 160 கோடியும், ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோனும் இணைந்து 156 கோடி ரூபாயையும் முதலீடு செய்திருக்கின்றனர். மேலும் நடிகர் ஷாஹித் கப்பூர் ரூபாய் 59 கோடி ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்திருப்பதாக SQUARE YARDS நிறுவனம் கூறியுள்ளது.