BR Shetty Latest News -பி.ஆர். ஷெட்டி,ரூ.18,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை ரூ.74க்கு விற்பனை செய்தவர். அவரது பயணம், வளர்ச்சி மற்றும் வீழ்ச்சியை உணர்த்துகிறது. NMC நிறுவனத்தின் மீது எழுந்த குற்றச்சாட்டுகள், அவருடைய நிதி நிலையை உலுக்கியது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் புகழ் பெற்ற பி.ஆர். ஷெட்டி, அவரின் பெரும் நிறுவனங்களின் வளர்ச்சியும் வீழ்ச்சியும் எடுத்துக்காட்டுகிறார்.
ஷெட்டியின் வாழ்க்கை பயணம் 1973 இல் கர்நாடகாவை விட்டு அபுதாபிக்கு சென்றார்.பிறகு,ரூ.665 கொண்டு மருந்து விற்பனையாளராகப் பணியாற்றி, 1975ல் 'நியூ மெடிக்கல் சென்டர்' (NMC) என்ற நிறுவனத்தை தொடங்கினார். NMC, ஐக்கிய அரபு அமீரகத்தின் முன்னணி சுகாதார வழங்குநராக உருவானது.
2019ல், Muddy Waters நிறுவனம் NMCக்கு எதிராக குற்றச்சாட்டு எழுப்பியது, இதனால் பங்குச் சந்தையில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டது.அதனால்,ஷெட்டி ரூ.18,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை ரூ.74 க்கு விற்பனை செய்ய வேண்டிய நிலைக்கு வந்தார்.
மேலும், அபுதாபி கமர்சியல் வங்கி NMC யின் மீது குற்றவியல் புகாரை தாக்கல் செய்தது, இதனால் ஷெட்டி கணக்குகள் முடக்கப்பட்டன. ஷெட்டியின் கதை, நிதி முறைகேடுகள் மற்றும் அதன் விளைவுகளைப் பற்றிய எச்சரிக்கையாக அமைந்துள்ளது.