Revenue Generated by Amazon Per Second - உலகளாவிய அளவில் செயல்பட்டு வரும் அமேசான் நிறுவனத்தின் ஒரு வினாடி வருமானம் எவ்வளவு என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
அமேசான் என்பது அமெரிக்காவை மையமாக கொண்டு சர்வதேச அளவில் செயல்பட்டு வரும் ஒரு பன்னாட்டு ஈ காமர்ஸ் நிறுவனம் ஆகும், ஜெப் பெசோஸ் என்பவரால் 1994 யில் துவங்கப்பட்ட அமேசான் நிறுவனம் உலகளாவிய அளவில் தலைசிறந்த வணிக நிறுவனமாக செயல்பட்டு வருகிறது, உலகின் மூலை முடுக்கு எல்லாம் தங்களது ஈ காமர்ஸ் சேவையை விரிவுபடுத்தி இருக்கிறது.
முதலில் 1994 ஆம் ஆண்டு ஜெப் பெசோஸ் அமேசானை துவங்கிய போது அது ஒரு இணைய வழி புத்தக அங்காடியாக தான் துவங்கப்பட்டது, பின்னர் குறுந்தகடுகள், எலக்ட்ரானிக்ஸ், கணிணி மென்பொருட்கள், துணிகள் என படிப்படியாக ஒன்று ஒன்றாக இணைக்கப்பட்டு, தற்போது உலகின் மிகப்பெரிய இணைய விற்பனை அங்காடி தளமாக விரிவடைந்து இருக்கிறது,
நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் தங்களது சேவையை வழங்கி வரும் அமேசான், ஒரு நாள் ஒன்றுக்கு மட்டும் 16 இலட்சம் டெலிவரிகளை வழங்குகிறதாம், ஒரு மணி நேரத்திற்கு என்னும் போது கிட்டத்தட்ட 66,000 டெலிவரியும், ஒரு நிமிடத்திற்கு என்னும் போது தோராயமாக 1000 டெலிவரிகளையும் உலகளாவிய அளவில் கொடுத்து வருகிறதாம்,
கடந்த நிதி ஆண்டில் மட்டும் அமேசான் 600 பில்லியன் டாலருக்கும் மேல் வருமானம் ஈட்டி இருக்கிறது, ஒரு நாள் ஒன்றுக்கு தோராயமாக 1.7 பில்லியன் டாலர் வருமானமும், ஒரு மணி நேரத்திற்கு என்னும் போது 57 மில்லியன் டாலர் வருமானமும், ஒரு நிமிடத்திற்கு 9 இலட்சம் டாலரும், ஒரு வினாடிக்கு 15,000 டாலரும் வருமானம் ஈட்டு வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.