Global AI Market Size - உலகளாவிய அளவில் ஆட்கொண்டு வரும் செயற்கை நுண்ணறிவின் சந்தைமதிப்பு குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
இன்று சர்வதேச அளவில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஒரு மிகப்பெரிய மார்க்கெட் என்றால் நிச்சயம் செயற்கை நுண்ணறிவை சொல்லலாம், தயாரிப்பு, சேவை, கல்வி, பாதுகாப்பு துறைகள் என அனைத்திலும் செயற்கை நுண்ணறிவின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது, எதிர் காலத்தில் மனிதன் செய்ய வேண்டிய 60 சதவிகித வேலையை AI செய்யும் என்கின்றனர் விஞ்ஞானிகள்.
அந்த அளவிற்கு செயற்கை நுண்ணறிவின் தேவையும் ஆதிக்கமும் அதிகரித்து கொண்டே வருகிறது, ஒவ்வொரு நிறுவனங்களும் தங்களுக்கென தனியாக ஒரு செயற்கை நுண்ணறிவு சாதனங்களை வைத்துக் கொள்ள தற்போது முனைகின்றன, நாளை எதிர்காலத்தில் AI யை திறம்பட கையில் வைத்து இருக்கும் ஒரு நிறுவனம் தான் நிறுவன சாம்ராஜ்யங்களில் நிச்சயம் ஆதிக்கம் செலுத்தும்.
கடந்த 2022 யில் செயற்கை நுண்ணறிவின் சந்தை மதிப்பு என்பது சர்வதேச அளவில் 87 பில்லியன் டாலராக இருந்தது, ஆனால் தற்போது 2025 யில் அதன் சந்தை மதிப்பு என்பது கிட்டத்தட்ட 3 மடங்கிற்கு மேல் உயர்ந்து 243.72 பில்லியன் டாலராக இருக்கிறது, 2030 ற்குள் AI யின் சந்தை மதிப்பு சர்வதேச அளவில் 826.73 பில்லியன் டாலராக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சீனாவும் அமெரிக்காவும் மட்டுமே உலகளாவிய அளவில் கிட்டத்தட்ட 60 சதவிகிதம் செயற்கை நுண்ணறிவு சந்தைகளை தங்களது கைகளில் வைத்து இருக்கின்றன. சீனா மற்றும் அமெரிக்காவின் செயற்கை நுண்ணறிவு சந்தை மதிப்பு என்பது தற்போது 70 பில்லியன் டாலர்களை நெருங்கி இருக்கிறது, அதே சமயத்தில் இந்தியாவின் AI சந்தை மதிப்பு என்பது வெறும் 7 பில்லியன் டாலராக தான் இருக்கிறது.
" சீனா மற்றும் அமெரிக்காவை ஒப்பிடும் போது இந்தியா செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியில் கத்துக்குட்டியாக கூட இன்னும் வளரவில்லை என்பது தான் உண்மையாக இருக்கிறது "