• India
```

சுற்றுச்சூழல் பாதிப்பை குறைக்க அதானியின் புதிய முயற்சி!

Adani Gas Latest News | Adani New Project​

Adani Gas Latest News-அதானி டோட்டல் கேஸ் நிறுவனம், இயற்கை எரிவாயுடன் பசுமை ஹைட்ரஜனை கலக்கும் புதிய திட்டத்தை தொடங்கியுள்ளது.இந்த திட்டம், காலநிலை மாற்றத்துக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்காற்றும் என கூறப்பட்டுள்ளது.

அதானி டோட்டல் கேஸ் நிறுவனம், இயற்கை எரிவாயுடன் பசுமை ஹைட்ரஜனை கலக்கும் புதிய மற்றும் முக்கியமான திட்டத்தை தொடங்கி இருக்கிறது.முதற்கட்டமாக, குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் வீடுகள் மற்றும் வணிகப் பயன்பாடுகளுக்கு குழாய் மூலம் விநியோகம் செய்யப்படும் சமையல் எரிவாயுவில் 2.2 - 2.3 சதவீதம் அளவிலான பசுமை ஹைட்ரஜனை கலக்க திட்டமிட்டுள்ளது.

மேலும், இந்த அளவை படிப்படியாக 8 சதவீதம் வரை உயர்த்துவதற்கான திட்டம் உள்ளது.இந்த பசுமை ஹைட்ரஜன் கலந்தால், இயற்கை எரிவாயுவின் செயல்திறன் கூடுவதோடு, சுற்றுச்சூழல் பாதிப்பு குறைவதாகவும் கூறப்படுகிறது.காலநிலை மாற்றத்திற்கான கார்பன் வெளியேற்றத்தை குறைப்பதற்காக மத்திய அரசு இலக்குகள் நிர்ணயித்துள்ளது.



அதில், அதானி நிறுவனம் பசுமை ஹைட்ரஜன் கலப்பு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
மேலும், இதுகுறித்து அதானி டோட்டல் கேஸ் நிறுவனம் தெரிவித்தது, இயற்கை எரிவாயுடன் பசுமை ஹைட்ரஜனை கலப்பதன் மூலம் கரியமில வாயு வெளியேற்றத்தை குறைக்கலாம். இதன் மூலம் சுத்தமான எரிபொருள் கட்டமைப்பை உருவாக்கும் முயற்சியில் இது முக்கியமான ஒன்றாகும்.