• India
```

வங்கதேசத்தில் நிலவும் அசாதாரண நிலையால்.. இந்திய ஜவுளித் தொழில் நெருக்கடியில் இருந்து மீண்டுவருமா?

 Textile Industry In Bangladesh | Textile Industry News

By admin

Published on:  2024-08-10 17:43:09  |    594

Textile Industry In Bangladesh -சர்வதேச சந்தையில் உள்ள பருத்தி விலையை விட இந்திய பருத்தி விலை ரூ. 17 வரை உயர்ந்துள்ளது. அதே போல், பாலிஸ்டர், விஸ்கோஸ் போன்றவைகளின் விலையும் 1 கிலோவுக்கு ரூ. 24, ரூ. 26 வரை அதிகரித்துள்ளது.

Textile Industry In Bangladesh -வங்கதேசத்தில் நிலவும் அசாதாரண சூழ்நிலையால், அனைத்து இந்திய ஜவுளி தொழில்களிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என தொழில் துறையினர் கவலையில் உள்ளனர்.இதனை தொடர்ந்து , இந்திய பருத்தி கூட்டமைப்பின் - ஐசிஎஃப் தலைவர் துளசிதரன், மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பின் - ஆர்டிஎஃப் தலைவர் ஜெயபால் இவர்கள் இருவரும் பேட்டி ஒன்றில், வங்கதேசப் பொருளாதாரத்தில் ஜவுளித்தொழில் 86 சதவீதம் பங்களிப்பைக் கொண்டுள்ள நிலையில், இந்தியாவில் இருந்து தான் அதிக அளவு பருத்தி மற்றும் நூல் வாங்கதேசத்திற்கு கொண்டு வரப்படுகிறது.

சர்வதேச சந்தையில் உள்ள பருத்தி விலையை விட இந்திய பருத்தி விலை ரூ. 17 வரை உயர்ந்துள்ளது. அதே போல், பாலிஸ்டர், விஸ்கோஸ் போன்றவைகளின் விலையும் 1 கிலோவுக்கு ரூ. 24, ரூ. 26 வரை அதிகரித்துள்ளது.

      

வங்கதேசத்தின் அசாதாரண சூழல் நிலவி வருவதால், இந்தியாவின் பருத்தி, நூல் ஏற்றுமதி பாதிக்கும்.இதனால் ஒட்டுமொத்த இந்திய ஜவுளி சங்கிலித் தொடரை சார்ந்துள்ள அனைத்து தொழில்களுக்கும் பாதிப்பு ஏற்படும், எனவே வங்க தேசத்தில் விரைவில் அமைதி திரும்பி, வணிக நடவடிக்கைகள் வழக்கம் போல் நடைபெறுவது அவசியம். 

இந்திய ஜவுளித்தொழில் அமைப்பினர் முன்வைத்துள்ள, பருத்தியின் இறக்குமதி வரி 11 சதவீதத்தை ரத்து செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய அரசு முன்வர வேண்டும். 

அப்போது தான், இந்திய ஜவுளித் தொழில் நெருக்கடியில் இருந்து மீண்டுவரும். என்று அவர்கள் இருவரும் தெரிவித்துள்ளனர்.