• India
```

உலகின் முதல் டிரில்லினியர் யார் தெரியுமா?

 First Trillionaire In The World

By Dhiviyaraj

Published on:  2025-01-24 17:11:37  |    56

உலகின் முதல் டிரில்லினியர் என்ற பெருமையை பெறப்போகும் நபர்கள்..

உலகின் முதல் டிரில்லினியர் என்ற பெருமையை பெறப்போகும் நபர்கள் யார் என்பது இந்த தொகுப்பில்  பார்க்கலாம் வாங்க..

உலக பணக்காரர்கள் பட்டியலில் முன்னணியில் எ லான் மஸ்க் உலகின் முதல் டிரில்லினியர் என்ற பெருமையை பெறப்போகும் முதலாவது நபர் என்று அறிக்கையில் கூறப்படுகிறது. 

தற்போது இவர் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு நெருக்கமானவராக இருக்கிறார். இவர் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், எக்ஸ் (முன்னாள் ட்விட்டர்) போன்ற பல நிறுவனங்களை வைத்திருப்பது  குறிப்பிடத்தக்கது.


இந்த லிஸ்டில் இரண்டாவது இடத்தில் இருக்கிறார் அமேசான்  நிறுவனத்தின் தலைமை செயலாளர் ஜெஃப் பெசோஸ் (Jeff Bezos). தற்போது இவரது சொத்து மதிப்பு மட்டும் $251 பில்லியன் இருக்கிறது. இவர் செயற்கை நுண்ணறிவு மற்றும் விண்வெளி தொழில்நுட்பங்களில் தொடர்ந்து முதலீடு செய்து வருகிறார்.


மூன்றாவது இடத்தில் மெட்டா (பேஸ்புக் தாய் நிறுவனம்) தலைமை செயல் அதிகாரி  மார்க் ஜக்கர்பெர்க் (Mark Zuckerberg) உள்ளார். தற்போது இவருடைய சொத்து மதிப்பு மட்டும்  $215 பில்லியன் உள்ளது. அடுத்த 10 ஆண்டுகளில் டிரில்லினியர் ஆகலாம் என்று கூறப்படுகிறது.