Why TATA Introduced Nano Cars - ரத்தன் நாவல் டாடாவிற்கு முதன் முதலாக நானோ கார்களை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது 2000 காலக்கட்டம் தான், ஆனால் அப்போது அது வெறும் கான்சப்டாக தான் இருந்தது, 2008 ஆம் ஆண்டு தான் அது உருவம் பெற்றது, ரத்தன் டாடாவின் மிகப்பெரிய கனவு அது, மிடில் கிளாஸ் மக்களும் கார் வாங்க ஏதுவாக ரூ 1 இலட்சம் விலை நிர்ணயிக்கப்பட்டது, கிட்ட தட்ட அறிமுகமான இரண்டு ஆண்டுகளிலேயே 70,000 கார்கள் விற்று தீர்ந்தது. கார் என்றால் அண்ணாந்து பார்த்த எளிய மக்களிடமும் கார் போய் சேர்ந்தது.சரி, டாடா நானோ காரை உருவாக்க காரணம் என்ன?ஒரு முறை சரியான மழை, ரத்தன் டாடா அப்போது காரில் மும்பை சாலையில் நிறுவனத்திற்கு சென்று கொண்டு இருந்தார், காரின் கண்ணாடிகள் வழியாக சாலையை பார்த்துக் கொண்டே சென்ற ரத்தன் டாடாவிற்கு ஒரு நிகழ்வு கண்ணில் படுகிறது, ஒரு எளிய மனிதன் பைக்கில் செல்கிறான் பின் பக்கம் அவரின் மனைவி கைக்குழந்தையுடன் உட்கார்ந்து இருக்கிறார், முன் பக்கம் ஒரு சிறுவன் உட்கார்ந்து இருக்கிறார், இருவருக்கும் நடுவில் அவர் உட்கார்ந்து அவர் பைக்கை இயக்கி கொண்டு இருக்கிறார்.
Jio And Allianz Made Partnership To Set A New Insurance Sector - கிட்டதட்ட 110 பில்லியன் டாலர் சொத்துக்கு அதிபதியான முகேஷ் அம்பானியின், ஜியோ நிறுவனம் கிட்டதட்ட இரண்டு லட்சம் கோடி சொத்து மதிப்பை கொண்டு இருக்கிறது, தொடர்ந்து பல்வேறு துறையில் கால் பதித்து வரும் ஜியோ நிறுவனம் தங்களது அடுத்த கட்ட நடவடிக்கையாக காப்பீட்டு துறையில் கால் பதிக்க இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.பஜாஜ் பின்சர்வ் நிறுவனத்தில் இருந்து வெளியேறி இருக்கும் அலையன்ஸ் நிறுவனமும், ஜியோ பைனான்ஸ் நிறுவனமும் கைகோர்த்து புதிய ஜியோ காப்பீடு நிறுவனத்தை தோற்றுவிக்க இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி வருகிறது, பஜாஜ் அலையன்ஸ் நிறுவனம், பஜாஜ் பின்சர்வ் நிறுவனத்தின் கீழ் பொது காப்பீடு மற்றும் மருத்துவ காப்பீடு வழங்கி வந்தது குறிப்பிடத்தக்கது.
Kalpana Saroj: Slumgirl To India's First Business Women - 1961 இல் மஹாராஷ்டிராவில் ரோபகெர்டா கிராமத்தில் ஒரு தலித் குடும்பத்தில் பிறந்தவர் தான் கல்பனா சரோஜ், படிப்பில் மிகவும் கெட்டி, ஆனாலும் தாழ்த்தப்பட்ட சமூகம் என்பதால் பள்ளிகளிலேயே நிறைய துன்புறுத்துதல்களுக்கும், கேலி, கிண்டல்களுக்கும் உள்ளாக்கப்பட்டார், ஆசியர்களே ஒரு சந்தேகம் கேட்டால் இவரை மதிக்க மாட்டார்களாம், நண்பர்களுடன் இணைந்து விளையாடினால் அவர்களின் பெற்றோர்கள் பிடித்து இழுத்துவிட்டு சென்று விடுவார்களாம்.வீட்டில் மூத்த பிள்ளை, 7 ஆவது படித்துக் கொண்டு இருக்கும் போதே வீட்டில் திருமண பேச்சு வார்த்தை, 12 வயதில் திருமணம், அங்கிருந்து ஒரு சேரிப்பகுதியில் குடிசையில் குடியேறிய கல்பனா சரோஜ்க்கு அங்கு நிம்மதியான வாழ்க்கை இல்லை, கணவனிடம் கொச்சை கொச்சையாக திட்டுக்களை வாங்கிக் கொண்டு மேற்கொண்டு அடித்து துன்புறுத்தியதை எல்லாம் ஒரு 6 மாதம் தான் அந்த பிஞ்சு குழந்தையால் சகித்துக் கொள்ள முடிந்தது.
Emotional Moments Of Ratan Naval Tata - டாடா குழுமத்தின் ஆகப்பெரும் தலைமைகளுள் ஒருவரான ரத்தன் டாடா சமீபத்தில் உடல்நலக்குறைவால் மறைந்து இருந்தார், அவரது இடத்தை நிரப்ப தற்போது நோயல் டாடாவும் டாடா குழுமத்திற்குள் வந்து விட்டார், ஆனாலும் காலங்கள் ஓடினாலும் யுகங்கள் ஓடினாலும் அந்த ரத்தன் டாடா என்ற மனிதன் இருந்த அந்த இடத்தை யாராலும் நிரப்பி விட முடியாது என்பது தான் இந்த யுகத்தின் ஆகப்பெரும் உண்மை.
Vasanth And Co History In Tamil - 1950 கன்னியாகுமரிக்கு அருகில் உள்ள அகஸ்தீஸ்வரம் என்ற கிராமத்தில் பிறந்தவர் தான் வசந்தகுமார், பெரிய வசதியான குடும்பம் எல்லாம் இல்லை, ஒரு மிடில் கிளாஸ் தான், அங்கு இருக்கும் அரசுப் பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை முடித்து விட்டு, மதுரையில் தமிழ் இலக்கியத்தில் இளங்கலைப் பட்டம் பெறுகிறார். இது தான் இவரது துவக்க கால வாழ்வியல், அதற்கு பின் நடந்தது தான் அற்புதம்.1971 அதாவது படிப்பை முடித்த கையோடு அண்ணன் குமரி அனந்தனுக்கு அரசியல் ரீதியாக சிறு சிறு உதவிகள் புரியும் வகையில் சென்னை வந்து இறங்குகிறார் வசந்தகுமார். அது தான் அவரது வாழ்க்கையை மாற்றிய தருணம் என்றே சொல்லலாம், அண்ணனுக்கு உதவி புரிந்து கொண்டே சென்னையில் இருக்கும் ஒரு பிரபல விற்பனை நிறுவனத்தில் சேல்ஸ்மேனாகவும் சேருகிறார்.
Nike Inspirational Story Tamil - 1956 காலக்கட்டம், ஒரு விளையாட்டு வீரன், அவனுக்கு விளையாட்டு சம்பந்தமாக ஏதாவது தொழில் செய்ய வேண்டும் என்ற ஆசை, ஆனால் கையில் காசு இல்லை, பின்னர் ஷீ வாங்கி விற்கலாம் என்று யோசித்து நேரடியாக அப்பாவிடம் செல்கிறான், தனது தொழில் ஆசையை அப்பாவிடம் சொல்கிறான், முதலில் மறுத்த அப்பா, பின்னர் ஒரு 200 ரூபாயை கையில் கொடுத்து இதை உனக்கு கடனாக தான் தருகிறேன், திருப்பி தந்து விட வேண்டும் என கூறி கொடுத்து இருக்கிறார்.அந்த இளைஞன் அதை வாங்கிக் கொண்டு பின்னர் அங்கும் இங்குமாக கொஞ்சம் கடனும் வாங்கி, ஒட்டு மொத்தமாக ஒரு 2000 ரூபாயை கையில் சேர்க்கிறான். பின்னர் ஜப்பானில் இருந்து கொஞ்சம் ஷீக்களை இறக்குமதி செய்து ஒவ்வொரு கடைகளாக ஏறி இறங்கினான், அன்று ஜெர்மானிய ஷீக்களால் நிரம்பி இருந்த கடைகள், புதியதாக ஒரு ஷீவை வாங்கி விற்க பயந்தனர். ஆதலால் யாருமே அந்த இளைஞனின் ஷீவை வாங்கவில்லை. என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்த இளைஞன் சாலைகளில் ஷீக்களை போட்டு வைத்து விற்க ஆரம்பித்தான்.
Stand Up India Scheme Details In Tamil - முதலில் ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டம் என்ன என்பது குறித்து பார்க்கலாம், பெண் தொழில் முனைவோர் மற்றும் தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் மக்கள் தொழில் துவங்குவதற்கு ஏதுவாக, ரூபாய் 10 இலட்சம் முதல் 1 கோடி வரை கடன் வழங்கும் திட்டம். ஏப்ரல் 2016 ஆம் ஆண்டு ஒன்றிய அரசால் துவங்கப்பட்ட இத்திட்டம் 2025 வரை செயலில் இருக்கும் என மத்திய அரசு அறிவித்து இருக்கிறது. சரி இத்திட்டத்தில் எப்படி இணைவது? 1) முதலில் நீங்க துவங்க நினைக்கும் தொழில் பசுமை சார்ந்ததாக இருக்க வேண்டும், பசுமை சார்ந்த பண்ணை துறை அல்லாது உற்பத்தி, சேவை, நிறுவனங்களாக இருக்க வேண்டும். 2) தொழிலுக்கான திட்ட வடிவம் இருக்க வேண்டும். 3) திட்டவடிவம், ஆதார், பான் கார்டுகள், தொழிலுக்கான நிலம் இருக்கும் பட்சத்தில் நேரடியாக மாவட்ட தொழில் மையத்திற்கு சென்று திட்டத்தில் இணைவதற்கான விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும். 4) உங்களது திட்ட வடிவம் ஏற்றுக் கொள்ளக்கூடிய பட்சத்தில், விண்ணப்பம் மாவட்ட தொழில் மையத்தில் இருந்து பொதுத்துறை வங்கிகளுக்கு அனுப்பப்படும். 5) வங்கிகளே உங்கள் தொழிலுக்கு எவ்வளவு கொடுக்க முடியும் என்பதை தீர்மானித்து மற்ற பிராசஸ்களை செய்து முடிக்கும்.
Who Is Noel Tata - ரத்தன் டாடாவின் தந்தையான நோவல் டாடாவின், இன்னொரு மனைவியான சிமோன் நோவல் டாடாவின் மகன் தான் இந்த நோயல் டாடா, எளிமையாக சொல்ல வேண்டுமானால் ரத்தன் டாடாவின் ஒன்று விட்ட சகோதரர் தான் இந்த நோயல் டாடா, இங்கிலாந்தில் செயல்பட்டு வரும் சஸ்சக்ஸ் பல்கலைகழகத்தில் இளங்கலை படிப்பை முடிந்த நோயல் டாடா, ஆரம்ப காலக்கட்டத்தில் டாடா இண்டர்நேஷனல், ட்ரெண்ட், டைட்டன் இண்டஸ்ட்ரீஸ் என டாடாவின் பல நிறுவனங்களில் பணி புரிந்து வந்தார். டாடா குழுமத்தின் தலைவராக இருந்த ரத்தன் டாடா, 2012 யில் ஓய்வை அறிவிக்கும் முன்பு, அந்த தலைமைக்கான போட்டியில் நோயல் டாடாவும் ஒரு போட்டியாளராக இருந்தார். ஆனால் ரத்தன் டாடாவுக்கு அப்போதைய சூழலில், நோயல் டாடா அனுபவம் மிக்கவராக தெரியவில்லை, அதனால் நோயல் டாடாவின் பெயர் பரிந்துரையை ஏற்க மறுத்தார் ரத்தன். அதற்கு பின்னர் பல்வேறு குழப்பத்திற்கு பிறகு டாடா குழுமத்தில் ஆலோசகராக செயல்பட்டு வந்த, சைரஸ் மிஸ்டரி டாடா குழுமத்தின் தலைமை ஏற்றார்.
Why Ratan Tata Not Among Billionaires List - ரத்தன் ஜி டாடாவிற்கு பிறகு டாடா குழுமத்தின் தலைவர் பொறுப்பை ஏற்ற ரத்தன் டாடா, டாடா குழுமத்தின் முன்னேற்றத்திற்கு தன் ஒட்டு மொத்த திறனையும் அதில் செலவழித்தார், டாடா நிறுவனத்தை உலகளாவிய அளவில் விரிவு படுத்தினார், இலாபம் தரும் துறைகளை எல்லாம் தேர்ந்து எடுத்து, கால் பதித்து, அந்த அனைத்து துறைகளிலும் சாதித்து காட்டினார், இன்று உலகளாவிய அளவில் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் டாடா நிறுவனம் வெற்றிகரமாக இயங்கி கொண்டு இருக்கிறது என்றால் அதற்கு ரத்தன் டாடா என்னும் ஆகப் பெரும் தலைமை தான் காரணம். சரி, இத்தனை நிறுவனங்கள் இருந்தும் ஏன் ரத்தன் டாடா பில்லியனர்கள் லிஸ்ட்டில் இல்லை? டாடா நிறுவனத்தின் நிறுவனர் ஜாம்செட்ஜியின் கொள்கை என்ன தெரியுமா, ’நாம் மக்களிடம் இலாபம் என்று எடுத்ததை, திரும்பவும் மக்களிடமே கொண்டு சேர்க்க வேண்டும்’ என்பது தான், அதை அன்றைய ஜாம்செட்ஜியில் இருந்து, இன்றைய ரத்தன் டாடா வரை சிறப்பாகவே செய்து கொண்டு இருக்கிறார்கள். அதாவது டாடா நிறுவனத்தின் நோக்கம் என்பது சம்பாத்யம், பில்லியனர்கள் ஆக வேண்டும் என்பது எல்லாம் இல்லை, அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும், அவ்வளவு தான் அவர்களின் கொள்கை.
Ratan Tata Donation Worth -டாடா குழுமத்தின் நிறுவனர் ஜாம்ஷெட்ஜி அவரது மகன் ரத்தன்ஜி டாடாவால் தத்து எடுக்கப்பட்டவர் தான், நேவல் டாடா, இந்த நேவல் டாடாவின் மூத்த மகன் தான் ரத்தன் டாடா, ரத்தன் டாடாவிற்கு 7 வயது இருக்கும் போதே அவரது பெற்றோர்கள் பிரிந்து விட்டனர், அதற்கு பின்னர் வளர்ந்தது எல்லாம் பாட்டி வீட்டில் தான். சிறு வயதிலேயே படிப்பில் மட்டும் அல்லாது அனைத்து துறைகளிலும் ஆர்வம் மிக்கவராக விளங்கி இருக்கிறார் ரத்தன் டாடா.மும்பையில் பள்ளிப்படிப்பை முடித்த ரத்தன் டாடா, அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் இருக்கும் கோர்னெல் பழ்கலைகழகத்தில் இளங்கலை கட்டமைப்பு பொறியியலை முடித்தார், ஹார்வர்டு பல்கலை கழகத்தில் மேல் நிலை வணிகப் படிப்பையும் முடித்தார். படித்து முடித்ததுமே அமெரிக்காவிலேயே இவருக்கு பல நிறுவனங்களின் ஆபர்கள் வந்தது, ஆனால் எதையும் பொருட்படுத்தாமல், என்ன செய்தாலும் இந்தியாவில் தான் செய்வேன் என்ற நோக்கத்தோடு இந்தியா வந்து இறங்கினார்.
டாடா குழுமத்தின் மிகப்பெரிய சக்தியாக அறியப்படும் ரத்தன் டாடா மறைவை அடுத்து, டாடா நிறுவனத்தில் ஒரு மிகப்பெரிய வெற்றிடம் ஏற்பட்டு இருக்கிறது, கிட்டதட்ட 165 பில்லியன் டாலர் மதிப்புள்ள டாடாவின் பெரும்பாலான பங்குகளை கொண்டு இருக்கும் இரண்டு அறக்கட்டளைகள் தற்போது தலைமையின்று இருப்பதாம் டாடா நிறுவனத்தின் பல பங்குகள் தற்போது முடங்கி கிடக்கின்றன. சர் டோராப்ஜி டாடா அறக்கட்டளை மற்றும் சர் ரத்தன் டாடா அறக்கட்டளை இந்த இரண்டு நிர்வாகங்கள் தான் டாடாவின் 52 சதவிகித பங்குகளை கொண்டு இருக்கின்றன. இந்த இரண்டு நிர்வாகங்களையும் நிர்வகித்தவர் ரத்தன் டாடா, தற்போது ரத்தன் டாடா இல்லாததால் நிறுவனத்தின் 52 சதவிகித பங்குகளை கொண்டு இருக்கும் இந்த இரண்டு அறக்கட்டளைகளை யார் நிர்வகிக்க போகிறார்கள் என்ற கேள்வி எழுந்து இருக்கிறது.
அதானி டோட்டல் கேஸ் நிறுவனம், இயற்கை எரிவாயுடன் பசுமை ஹைட்ரஜனை கலக்கும் புதிய மற்றும் முக்கியமான திட்டத்தை தொடங்கி இருக்கிறது.முதற்கட்டமாக, குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் வீடுகள் மற்றும் வணிகப் பயன்பாடுகளுக்கு குழாய் மூலம் விநியோகம் செய்யப்படும் சமையல் எரிவாயுவில் 2.2 - 2.3 சதவீதம் அளவிலான பசுமை ஹைட்ரஜனை கலக்க திட்டமிட்டுள்ளது.மேலும், இந்த அளவை படிப்படியாக 8 சதவீதம் வரை உயர்த்துவதற்கான திட்டம் உள்ளது.இந்த பசுமை ஹைட்ரஜன் கலந்தால், இயற்கை எரிவாயுவின் செயல்திறன் கூடுவதோடு, சுற்றுச்சூழல் பாதிப்பு குறைவதாகவும் கூறப்படுகிறது.காலநிலை மாற்றத்திற்கான கார்பன் வெளியேற்றத்தை குறைப்பதற்காக மத்திய அரசு இலக்குகள் நிர்ணயித்துள்ளது.
யார் இந்த ரத்தன் டாடா? டாடா குழுமத்தின் நிறுவனர் ஜாம்ஷெட்ஜி அவரது மகன் ரத்தன்ஜி டாடாவால் தத்து எடுக்கப்பட்டவர் தான், நேவல் டாடா, இந்த நேவல் டாடாவின் மூத்த மகன் தான் ரத்தன் டாடா, ரத்தன் டாடாவிற்கு 7 வயது இருக்கும் போதே அவரது பெற்றோர்கள் பிரிந்து விட்டனர், அதற்கு பின்னர் வளர்ந்தது எல்லாம் பாட்டி வீட்டில் தான். சிறு வயதிலேயே படிப்பில் மட்டும் அல்லாது அனைத்து துறைகளிலும் ஆர்வம் மிக்கவராக விளங்கி இருக்கிறார் ரத்தன் டாடா. அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் இருக்கும் கோர்னெல் பழ்கலைகழகத்தில் கட்டமைப்பு பொறியியலை முடித்து விட்டு, ஹார்வர்டு பல்கலை கழகத்தில் மேல் நிலை வணிகப் படிப்பையும் முடித்தார். படித்து முடித்ததுமே அமெரிக்காவிலேயே இவருக்கு பல ஆபர்கள் வந்தது, ஆனால் எதையும் பொருட்படுத்தாமல், என்ன செய்தாலும் இந்தியாவில் தான் செய்வேன் என்ற நோக்கத்தோடு இந்தியா வந்து இறங்கினார்.
Industrialist Ratan Tata Dies At 86 - இந்தியாவின் மிகப்பெரும் வணிக முன்னோடியாக அனைவராலும் அறியப்படும் ரத்தன் டாடா (86) உடல் நலக்குறைவால் காலமாகி இருக்கிறார், இந்தியா, தொழில் துறையில் ஒரு மிகப்பெரிய தலைமையை இழந்து இருக்கிறது, இந்தியாவை மையமாக கொண்டு இயங்கும் டாடா குழுமம் இன்று உலகளாவிய அளவில் மிகப்பெரிய நிறுவனமாக உருவெடுத்து இருக்கிறது என்றால் அதற்கு ரத்தன் டாடாவின் பங்கு என்பது அளப்பரியது. டாடா குழுமத்தின் நிறுவனர் ஜாம்ஜெட்சி டாடாவின் மகன் இரத்தன் ஜி டாடாவால் தத்தெடுக்கப்பட்ட நேவல் டாட்டாவின் மகன் தான் இந்த ரத்தன் டாடா, புரியும் படி சொல்ல வேண்டுமானால் டாடா குழுமத்தின் ஒரு வளர்ப்பு பையனின் மகன் தான் இந்த ரத்தன் டாடா, அமெரிக்காவின் கோர்னெல் பல்கலைக் கழகத்தில் கட்டமைப்பு பொறியியல், ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் வணிக மேலாண்மை படித்து விட்டு நேராக இந்தியா வந்து களம் இறங்கினார் ரத்தன் டாடா.
1) டெய்லரிங் மற்றும் ஆரி வொர்க்பொதுவாக பல பெண்களும் வீட்டில் இருந்தே பண்ணக்கூடிய அதிகப்படியான தொழிலில், டெய்லரிங் இடம் பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது, தமிழக அரசும் பெண்களுக்கு உதவும் வகையில் டெய்லரிங் படிப்பை இலவசமாக கற்றுக் கொடுத்து அவர்களுக்கு சர்ட்டிபிகேசனும் கொடுக்கிறது, டெய்லரிங் தெரிந்தவர்கள் ஒரு நிறுவனத்தில் பணி புரிவதைக் காட்டிலும் வீட்டில் இருந்தே அந்த டெய்லரிங் தொழிலை செய்வது தான் சிறந்த இலாபம் தரும். பொதுவாக, ஒரு பெண்களின் சட்டை தைப்பதற்கு எல்லாம் கிராமங்களிலேயே 300 ரூபாய் வரை வாங்குகிறார்கள், விஷேச கால சட்டைகளின் ஆரி வொர்க்கிறகு எல்லாம் குறைந்த பட்சம் 2000 ரூபாய் முதல் 10,000 வரை வாங்கும் ஆட்களும் இருக்க தான் செய்கிறார்கள், டெய்லரிங் தொழிலை பொறுத்தவரை பெண்களை உங்களின் தையலின் மூலம் திருப்தி படுத்த முடிந்தால் போதும், அப்புறம் என்ன மாதத்திற்கு வீட்டில் இருந்தபடியே 25,000 ரூபாய் முதல் 30,000 வரை சம்பாதிக்க முடியும்.
Women Group Loan Schemes In Tamil - பொதுவாக தொழில் கடன், பொதுவான கடன் என்னும் போது ஆண்களுக்கு என்று நிறைய நிறைய திட்டங்கள் வங்கிகளில் இருக்கின்றன, ஆனால் பெண்களுக்கு என்னும் போது, தற்போது தான் ஒவ்வொரு திட்டங்களாக அரசு சார்பில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது, அந்த வகையில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் தமிழக அரசும், மத்திய அரசும் இணைந்து ஒரு சில சுய உதவிக்குழு திட்டங்களை முன்னெடுத்து வருகின்றன. அதில் ஒன்று தான் மஹிளா சம்ரிதி யோஜனா, இத்திட்டத்தின் மூலம் மகளிர் அதிகபட்சம் 20 பேர் கொண்ட ஒரு குழுவை அமைத்திடல் வேண்டும், குழு நம்பகத்தன்மை உடையதாக இருக்க வேண்டும், ஒட்டு மொத்த குழுவினரும் நேரடியாக வங்கிகளை அணுகி மஹிளா சம்ரிதி யோஜனாவிற்கான விண்ணப்பங்களை பெற்று, ஆதார், முகவரி சான்று உள்ளிட்டவைகளை சம்ர்ப்பித்திடல் வேண்டும்.
UYEGP Scheme Details In Tamil - படித்து வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம் (Unemployed Youth Employment Generation Programme - UYEGP), படித்து முடித்து விட்டு வேலைவாய்ப்பற்ற இளைஞர்களை, தொழில் துவங்க ஊக்கப்படுத்தும் வகையில், 25 சதவிகித மானியத்துடன் (அதிகபட்சமாக 2.50 இலட்சம்) ரூபாய் 5 இலட்சம் முதல் 15 இலட்சம் வரை கடனுதவி வழங்கும் ஒரு திட்டம் அரசால் அறிமுகப்படுத்து தற்போது செயலிலும் இருக்கிறது.
சரி, பால் விற்பனையை எப்படி துவங்கலாம்?பால் விற்பனையை பொறுத்தவரை நீங்கள் லோக்கலாகவும் செய்யலாம், மிகப்பெரிய அளவிலும் செய்யலாம், இரண்டுமே நல்ல இலாபம் தரும், லோக்கலாக செய்ய வேண்டுமானால் ஒரு பால் பண்ணை மட்டும் வைத்தால் போதும், குறைந்த பட்சம் 10,000 ரூபாய் மட்டுமே செலவாகும், பால்பண்ணை என சிறிதளவில் வைக்கும் போது ஒரு 50 லிட்டர் கொள்முதல் செய்ய முடிந்தால் நீங்கள் தினசரி 800 முதல் 1,000 வரை அதில் இலாபம் ஈட்ட முடியும். மாதத்திற்கு பெரிய முதலீடு ஏதும் இல்லாமலே 25,000 முதல் 30,000 வரை சம்பாதிக்க முடியும்.
Zomato நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் இணை நிறுவனரான தீபிந்தர் கோயல், ஒரே நாளில் ரூ. 1,600 கோடியை சம்பாதித்துள்ளார். ஆகஸ்டு 2ம் தேதி, Zomato நிறுவனத்தின் பங்குகள் 19 சதவிகிதம் உயர்ந்து, ரூ. 234.10 இலிருந்து ரூ. 278.45 ஆக அதிகரித்தது.Zomato தனது முதல் காலாண்டின் நிகர வருவாய் 3 மடங்கு அதிகரித்துள்ளதாக அறிவித்துள்ளதால், கோயலின் வருவாய் ரூ. 1,638.60 கோடியாக அதிகரித்தது. கோயலுக்கு Zomato இல் 4.19 சதவிகித பங்குகள் உள்ளன; ஆகஸ்டு 2ல் பங்குகளின் மதிப்பு ரூ. 10,288 கோடியாக உயர்ந்தது.
சரி, ரிசர்வ் வங்கி வறுமையை ஒழிக்க அதிக பணம் அச்சிட்டால் என்ன ஆகும்?ரிசர்வ் வங்கி வறுமையை ஒழிக்க அதிக பணம் அச்சிடுகிறது என வைத்துக் கொள்வோம், நாட்டில் பண புழக்கம் என்பது அதிகம் ஆகும், ஒருவர் தேவையான பொருள் ஒன்று என்றால் கூட பணம் கையில் அதிகமாக இருக்கிறது என்பதற்காக அந்த பொருளை 10 வாங்குவார். இதனால் சந்தையில் தேவை என்பது பன்மடங்கு அதிகரிக்கும். பொதுவாக சந்தையில் தக்காளி அதிகம் கிடைக்கிறது என்றால் விலை 20 ரூபாய் தான் விற்பார்கள், அதுவே தக்காளியின் தேவை அதிகரித்து, சந்தையில் அது குறைவாக இருக்கும் விலை 100 ரூபாயாக வந்து நிற்கும். இது தான் பணப்புழக்கம் அதிகமாக இருந்தால் ஒரு நாட்டில் நிகழும்.
முதலாவதாக பொதுக்கழிப்பிடத்தின் தேவை குறித்து இங்கு பார்க்கலாம்! பொதுவாக பல பொதுமக்கள் கூடும் இடத்தில், சந்தைகளில், பல மாவட்ட, மாநில மக்கள் வந்து போகும் பேருந்து நிலையங்களின் அருகில், சுற்றுலா தளங்களின் அருகில் பொதுக் கழிப்பிடம் என்பது இருப்பது மிக மிக அவசியம் ஆகிறது. ஆனால் தமிழகத்தில் பல முக்கிய மாநகரங்களில் பொதுக் கழிப்பிடங்களை பொது இடத்தில் பார்ப்பதே அரிதாக இருக்கிறது. அப்படியே ஒன்றிரண்டு என இருந்தாலும் கூட அவை எல்லாம் மோசமான நிலையில் தான் இருக்கிறது.
ஹெரிட்டேஜ் புட்ஸ் நிறுவனத்தின் பங்கு விலை கணிசமாக உயர்ந்ததன் காரணமாக, தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவின் மனைவி நர புவனேஸ்வரியின் சொத்து மதிப்பு ஐந்தே நாட்களில் 584 கோடி ரூபாயால் அதிகரித்துள்ளது. சமீபத்தில் நடைபெற்ற ஆந்திர மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றிருந்தார்கள்.இதனையடுத்து, நர புவனேஸ்வரியின் ஹெரிட்டேஜ் புட்ஸ் நிறுவனத்தின் பங்கு விலை கணிசமாக உயர்ந்தது. பால் மற்றும் அதன் துணை பொருட்களை விற்பனை செய்யும் ஹெரிட்டேஜ் புட்ஸ் நிறுவனத்தில் புவனேஸ்வரி 24% பங்குகளை வைத்திருக்கிறார், இது 2 கோடியே 26 லட்சம் பங்குகளுக்கு சமம்.
அனிருத் முதலீடு விவரங்கள்,இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர், தென்னிந்திய ஃபில்டர் காபி ஸ்டார்ட்அப் நிறுவனமான "வி.எஸ். மணி & கோ"யில் இணைந்துள்ளார். அவர் இந்த நிறுவனத்தின் இணை நிறுவனராகவும், பிராண்ட் அம்பாசிடராகவும் பணியாற்றுவார். ஜி.டி. பிரசாத், யஷாஸ் அலூர், ராகுல் பஜாஜ் ஆகியோரால் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம், அடுத்த ஹால்திராம்ஸ் ஆக மாறவேண்டும் என்ற இலக்குடன் செயல்படுகிறது.இந்நிறுவனத்தின் மொத்த விற்பனை வருவாயில் 60% ஆன்லைன் சேனல்கள் (Amazon, Zepto, Blinkit) மூலம் கிடைக்கிறது, மீதமுள்ள 40% ரீடெய்ல் கடைகளில் இருந்து பெறப்படுகிறது. தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் உள்ள 1,000 க்கும் மேற்பட்ட ரீடெய்ல் விற்பனை கடைகளுடன் இந்நிறுவனம் இணைந்துள்ளது.
ஹர்திக் பாண்டியா நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர். அவரது தந்தை, அவரின் கல்வியும் விளையாட்டிற்கான ஆர்வமும் மீது கவனம் செலுத்தினார். எளிய வாழ்கையில், அவரது தந்தை சொந்த தொழிலை கைவிட வேண்டிய நிலையில் இருந்தாலும், ஹர்திக்கின் கிரிக்கெட் கனவை ஒருபோதும் கைவிடவில்லை.பணமில்லாததால், ஹர்திக் கிரிக்கெட் உபகரணங்களை வாங்க முடியாத போது, டென்னிஸ் பந்துகளைப் பயன்படுத்தி பயிற்சி செய்தார். தனது சகோதரனுடன் சேர்ந்து, வெற்றிக்கு 200 ரூபாய் கிடைக்கும் போட்டிகளில் விளையாட தொடங்கினார். அந்த பணத்தை வைத்து மேகி நூடில்ஸ் வாங்கி தான் உணவு சாப்பிட்டடார்.இந்நிலையில்,2013-ல் டி20 போட்டியில் அறிமுகமாகி, மும்பை இந்தியன்ஸ் அணியின் கவனத்தை ஈர்த்தார்.
சரவணன் அருள், "லெஜண்ட் சரவணன்" என்று அழைக்கப்படுகிறார். அவர் ஒரு இந்திய தொழிலதிபராக இருந்து நடிகராக மாறினார்.சரவணன் ஒரே ஒரு படத்தில் நடித்துள்ளார், அது "தி லெஜண்ட்" ஆகும். ஜேடி-ஜெர்ரி இயக்கிய இந்த படத்தில் ஊர்வசி ரவுத்தேலா, விவேக், யோகி பாபு, சுமன், நாசர், மற்றும் விஜய்குமார் ஆகியோர் நடித்துள்ளனர். ஆனால், படம் பெரும் வெற்றியை எட்டவில்லை. விளம்பரங்களில் முன்னணி பாத்திரமாக நடித்தபோது, பலர் அவர் மீது கேலி செய்தனர். இருப்பினும், மனவெளியில் நின்று, கதாநாயகனாக மீண்டும் வருகை தர்ந்தார்.சரவணா ஸ்டோர்ஸ் என்ற பெயரில் பல கிளைகளைத் தொடங்கியவர், தந்தையின் மறைவுக்கு பிறகு துணிக்கடை, நகைக்கடை, மற்றும் எலக்ட்ரானிக்ஸ் உட்பட பல துறைகளில் வெற்றி பெற்றுள்ளார்.
1976, ஒரு சில நண்பர்கள் யோசிக்கிறார்கள், ஒரு கம்ப்யூட்டர் தயாரிக்கும் கம்பெனி ஒன்று ஆரம்பிக்கலாமே என்று, கையில் இருந்ததோ ஒரு இலட்சம். அனைத்தையும் முதலீடாக போட்டு மைக்ரோகம்ப் என்ற பெயரில் ஒரு நிறுவனத்தை ஆரம்பிக்கிறார்கள், கையில் இருக்கும் முதலீட்டில் முதலில் கால்குலேட்டர்கள் தயாரித்து வெளியிடுகின்றனர். பின்னர் அதில் கொஞ்சம் இலாபம் கிட்டவே, ஒரு சில வருடங்களில் மைக்ரோ கம்ப்யூட்டர் தயாரித்து வெளியிடுகின்றனர். ஆரம்பத்தில் ஹார்டுவேர் கம்பெனியாக தான் ஆரம்பித்த இந்த நிறுவனம் பின்னர் மென்பொருள் பிரிவிற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தது. அதற்கு பின்னர் அடைந்த அசுர வளர்ச்சி, அனைவரின் உழைப்பு, அனைவரின் முயற்சி, அனைவரின் அசாத்திய திறமை என இவை அனைத்தும் இன்று HCL Tech என்ற உலகளாவிய முன்னனி நிறுவனத்தை உருவாக்கி இருக்கிறது. ஷிவ் நாடார் என்ற உலகின் முன்னனி நிறுவனரும் உருவாகி இருக்கிறார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் புகழ் பெற்ற பி.ஆர். ஷெட்டி, அவரின் பெரும் நிறுவனங்களின் வளர்ச்சியும் வீழ்ச்சியும் எடுத்துக்காட்டுகிறார்.ஷெட்டியின் வாழ்க்கை பயணம் 1973 இல் கர்நாடகாவை விட்டு அபுதாபிக்கு சென்றார்.பிறகு,ரூ.665 கொண்டு மருந்து விற்பனையாளராகப் பணியாற்றி, 1975ல் 'நியூ மெடிக்கல் சென்டர்' (NMC) என்ற நிறுவனத்தை தொடங்கினார். NMC, ஐக்கிய அரபு அமீரகத்தின் முன்னணி சுகாதார வழங்குநராக உருவானது.
போயிங் விண்வெளி மற்றும் பாதுகாப்பு பிரிவின் தலைமை செயல் அதிகாரியாக செயல்பட்டு வந்த டெட் கோல்பர்ட் நிறுவனத்தை விட்டு விலகி இருகிறார். 15 வருடங்களாக போயிங் நிறுவனத்தின் பணிபுரிந்து வந்த டெட் கோல்பர்ட்டின் விலகலுக்கான சரியாக காரணங்கள் ஏதும் தெரிவிக்கப்படவில்லை. ஆனால் போயிங் நிறுவனத்தில் அவரோடு நெருங்கி பணிபுரியும் பலரும் பலவித காரணங்களை கூறி வருகின்றனர்.டெட் கோல்பர்ட் தலைமைச் செயல் அதிகாரியாக செயல்பட்டு வந்த போயிங் விண்வெளி மற்றும் பாதுகாப்பு பிரிவு மட்டுமே, ஒட்டு மொத்த போயிங் நிறுவனத்தின் 40 சதவிகித இலாபத்தைக் கொடுக்கிறது. ஆனால் கடந்த இரண்டு வருடங்களாக தயாரிப்பில் தாமதம், தயாரிப்பிற்கான செலவுகள் அதிகம் என்று பலவித பிரச்சினைகள் இருந்து வந்தன. அமெரிக்க அதிபர் விமான பிரச்சினை, போயிங் 737 இரண்டு இடங்களில் மோதல், பயணத்தின் போது கதவு பிரச்சினை என பல தயாரிப்பு சம்மந்தப்பட்ட பிரச்சினகளையும் போயிங் தொடர்ந்து சந்தித்து வந்தது. நாசாவுடனான ஸ்பேஸ் பயணம் தோல்வி, 6 பில்லியன் டாலர் கடன் என சுற்றும் முற்றும் பல வித பிரச்சினைகளை போயிங் சந்தித்து வருவது தான் டெட் கோல்பர்ட்டின் பதவி விலகலுக்கான காரணமாக கூறப்படுகிறது.
கென்யாவின், நைரோபி ந்கரில் நடைபெற்ற ஐந்து நாள் ஈ-மொபிலிட்டி வார மாநாட்டில் கலந்து கொண்ட சீன எலக்ட்ரிக் வாகன நிறுவனங்கள், ஆப்பிரிக்காவுடன் இணைந்து, நாட்டின் பல்வேறு பகுதிகளில் பசுமை வாகனங்களை எப்படி விரிவு படுத்துவது என்பது குறித்து பேசி இருக்கின்றன. பொதுவாக ஆப்பிரிக்காவின் பல மாகாணங்களில் திட்டம் இடப்படாத பல தொழிற்சாலைகளால் காற்றின் தரம் என்பது மிக மிக வெகுவாக குறைந்து வருகிறது. ஆதலால் பசுமை வாகனங்கள் என்பது அந்த நாட்டிற்கு மிக மிக அவசியமாகவே பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு தான், சீனா தன்னுடைய எலக்ட்ரிக் வாகன நிறுவனங்களுடன், ஆப்பிரிக்காவில் களம் இறங்கி இருக்கிறது. கென்யாவின் பெட்ரோலிய கட்டுப்பாட்டு மையம் ஒன்று கூறிய விரிவான அறிக்கையின் படி, கென்யாவில் ஒட்டு மொத்தமாக 5,000 எலக்ட்ரிக் வாகனங்கள் தான் இருக்கிறதாம்.
அமேசான் நிறுவனத்தின் உரிமையாளரான ஜெஃப் பெசோஸ்சை பின்னுக்கு தள்ளி உலகின் இரண்டாம் நிலை பணக்காரராக உருவெடுத்து இருக்கிறார் ஆரக்கிள் நிறுவனத்தின் நிறுவனர் லேரி எல்லிசன்.பிரபல தனியார் நிறுவனம் ஒன்று நடத்திய உலகின் முதன்மையான பணக்காரர் யார் என்பதற்கான கருத்துக் கணிப்பில், டெஸ்லா நிறுவனத்தின் நிறுவனர் எலான் மஸ்க் 251 பில்லியன் டாலர் நிகர சொத்து மதிப்புடன் தொடர்ந்து முதல் இடத்தில் நிலைக்கிறார். கடந்த 2016 முதல், உலகின் இரண்டாம் நிலை பணக்காரராக தொடர்ந்த அமேசான் நிறுவனத்தின் நிறுவனர் ஜெஃப் பெசோஸ்சை பின்னுக்கு தள்ளி, 206 பில்லியன் டாலர் நிகர சொத்துக்களுடன் இரண்டாம் இடத்தை பிடித்து இருக்கிறார் ஆரக்கிள் நிறுவனத்தின் லேரி எல்லிசன்
Yamaha R15 New Model Bike -யமஹா தனது பிரபலமான R15M மற்றும் MT-15 பைக்குகளின் மோட்டோஜிபி எடிஷனை, சற்று அதிகமான விலையில் விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. முந்தைய வாரம், யமஹா தனது R15M மாடலை கார்பன் ஃபைபர் கிராஃபிக்ஸுடன் மேம்படுத்தியது. தற்போது, R15M மற்றும் MT-15 பைக்குகளின் மான்ஸ்டர் எனர்ஜி மோட்டோஜிபி எடிஷன்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த மாடல்களில் மெக்கானிக்கல் மாற்றங்கள் இல்லை, ஆனால் காஸ்மெடிக்கலாக சில புதிய அப்டேட்கள் வழங்கப்பட்டுள்ளன.மேலும், மோட்டோஜிபி பைக்குகளின் டிசைன் அடிப்படையிலான லைவரிகள், பைக்கின் டேங்க் ஷ்ரௌடுகள், ஃப்யூல் டேங்க், சைடு பேனல்களில் இணைக்கப்பட்டுள்ளன. மேலும், மான்ஸ்டர் எனர்ஜி லோகோவும் இடம்பெற்றுள்ளது.
Gold News In Tamil -செப்டம்பர் மாதம் தொடக்கதின் முதலே ஆபரணத்தங்கத்தின் விலை ஏறுவதும் இறங்குவதுமாக இருந்து வந்த நிலையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகள் அதிரடியாக குறைந்துள்ளது.இதனால் நகை பிரியர்கள் மிகுந்த சந்தோசத்தில் இருக்கிறார்கள்.தங்கத்தின் விலை நிலவரத்தை பார்க்கலாம்,22 கேரட் தங்கத்தின் விலை 1 கிராம் ரூ.6,865 ல் இருந்து, ரூ.15 குறைந்து ரூ.6,850 க்கு விற்பனை செய்யப்படுகிறது.மேலும், 8 கிராம் தங்கத்தின் விலை ரூ.54,920 ல் இருந்து ரூ.120 குறைந்து ரூ.54,800 க்கு விற்பனை செய்யப்படுகிறது.24 கேரட் தங்கத்தின் விலை 1 கிராம் ரூ.7,489 ல் இருந்து, ரூ.16 குறைந்து ரூ.7,473 க்கு விற்பனை செய்யப்படுகிறது.மேலும், 8 கிராம் தங்கத்தின் விலை ரூ.59,912 ல் இருந்து ரூ.128 குறைந்து ரூ.59,784 க்கு விற்பனை செய்யப்படுகிறது.இதே போல், 18 கேரட் தங்கத்தின் விலை 1 கிராம் ரூ.5,623 ல் இருந்து, ரூ.12 குறைந்து ரூ.5,611 க்கு விற்பனை செய்யப்படுகிறது.மேலும், 8 கிராம் தங்கத்தின் விலை ரூ.44,984 ல் இருந்து ரூ.96 குறைந்து ரூ.44,888 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்தியாவில் நன்றாக யோசிக்க கூடிய பல தொழில் முனைவோர்கள் உருவாகி இருக்கிறார்கள். இந்தியா ஸ்டார்ட் அப்களுக்கு ஏற்ற சிறந்த நாடாகவும் விளங்குவதால் தொழில்முனைவோர்களால் எளிதாக அவர்களது ஐடியாவை தொழிலாக மாற்ற முடிகிறது.மேலும் இந்தியா வரிவிதிப்பில் ஒரு கட்டமைப்பான நாடாக திகழ்கிறது, பொதுவாக வேதகாலத்திலேயே வரி விதிப்பு முறை ஒன்று இருந்திருக்கிறது.
அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் மிகப்பெரிய வாகன உற்பத்தி மையமான ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனமும், தென் கொரியாவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் மிகப்பெரிய வாகன உற்பத்தி மையமான ஹீண்டாய் நிறுவனமும், வரும் காலங்களில் இணைந்து இயங்கும் வகையில் புதிய ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்து இட்டு இருக்கின்றனர்.உலகளாவிய அளவில் வாகன உற்பத்திகளை அதிகரிக்கவும், புதிய தொழில்நுட்பங்கள், பேட்டரி வாகனங்கள், ஹைட்ரஜன் டெக்னாலஜிஸ், பொது பயண வாகனங்கள், கமெர்சியல் வாகனங்கள் ஆகியவற்றின் தயாரிப்பில் இணைந்து செயல்படவும் இரு நிறுவனங்களும் முடிவெடுத்து இருக்கின்றனர்.
Flower Market Price List -பண்டிகை காலங்களில் மக்கள் பூக்களை அதிகமாக வாங்கி பயன்படுத்துவார்கள்.அந்நிலையில் குறிப்பிட்டு அந்த பண்டிகை நாளில் மட்டும் விலைகள் உச்சத்திற்கு சென்றுவிடும்.அதே போல் தான் தற்பொழுது ஓணம் பண்டிகையை முன்னிட்டு பூக்களின் விலை அதிகரித்துள்ளது.ஓணம் பண்டிகை மற்றும் ஆவணி கடைசி சுபமுகூர்த்த நாளின் காரணமாக, தோவாளை மலர்சந்தையில் பூக்களின் விலை நெகிழ்ந்துள்ளது.மக்களின் வருகையும் அதிகரித்து இருந்தது.கன்னியாகுமரி மாவட்டத்தின் தோவாளை மலர்சந்தை தமிழகத்தின் மிகப் பெரிய சந்தையாக இருக்கிறது.மேலும், பல பகுதிகளிலிருந்து மலர்கள் இங்கு கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றது.
Today Palani News In Tamil -பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். முக்கிய விழாக்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வருகிறார்கள். அவர்களின் காணிக்கைகளால் உண்டியல்களில் பணம், தங்கம், வெள்ளி ஆகியவை பெரிதும் சேர்க்கப்படுகிறது.இந்நிலையில்,கடந்த ஒரு மாதத்தில் மட்டும் கோவில் உண்டியல் காணிக்கையில் ரூ.5 கோடி 64 லட்சம், 1,612 கிராம் தங்கம் மற்றும் 28,249 கிராம் வெள்ளி காணிக்கையாக கிடைத்துள்ளது.தமிழ்நாட்டின் மிகவும் பிரபலமான கோவில்களில் ஒன்றான பழனி முருகன் கோவில், கோவை, ஈரோடு, கரூர், திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்களை ஈர்க்கிறது.மேலும்,சிறப்பு நாட்களிலும், பொதுவான நேரங்களிலும் அதிகளவிலான பக்தர்கள் பக்தி ஆர்வத்துடன் கோவிலுக்கு வருகை தருகிறார்கள்.
Today Gold Rate In Tamil -வாரத்தின் இறுதியில் தங்கத்தின் விலாய் சற்று அதிகரித்துள்ளது.நகை பிரியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது. 22 கேரட் தங்க விலை நிலவரம், இன்றைய 22 கேரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூ.6,825 -ல் இருந்து ரூ.40 உயர்ந்து ரூ.6,865 க்கும், 8 கிராம் தங்கத்தின் விலை ரூ.54,600 ல் இருந்து ரூ.320 உயர்ந்து ரூ.54,920 -க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.24 கேரட் தங்க விலை நிலவரம்,24 கேரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூ.7,445 ல் இருந்து ரூ.44 அதிகரித்து ரூ.7,489 -க்கும், 8 கிராம் தங்கத்தின் விலை ரூ.59,560 -ல் இருந்து ரூ.352 அதிகரித்து ரூ.59,912 -க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 18 கேரட் தங்க விலை நிலவரம்,18 கேரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூ.5,591 ல் இருந்து ரூ.32 அதிகரித்து ரூ.5,623 -க்கும், 8 கிராம் தங்கத்தின் விலை ரூ.44,728 -ல் இருந்து ரூ.256 அதிகரித்து ரூ.44,984 -க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
What Is Home Insurance In Tamil -இந்தியாவில் பருவமழை காலங்களில் வெள்ளப்பெருக்கு, மழை நீர் தேங்குதல், மற்றும் நிலச்சரிவு போன்ற பிரச்சனைகள் அதிகமாக இருக்கிறது. இதுபோன்ற நேரங்களில் நமது வீடுகளும், அதிலுள்ள பொருட்களும் பல்வேறு சேதங்களை சந்திக்க நேரிடுகிறது.அவ்வாறு ஏற்பட்ட சேதங்களுக்கு நிவாரணமாக, ஹோம் இன்சூரன்ஸ் எனப்படும் வீட்டு காப்பீடு திட்டங்கள் மிக முக்கியமான ஒன்றாகும்.குறிப்பாக பருவமழை காலங்களில் இந்த காப்பீடுகள் வீட்டின் கட்டமைப்புகள் மற்றும் பொருட்களுக்கு நிதி பாதுகாப்பு அளித்து வருகின்றது.வீட்டில் வெள்ளம், புயல், அல்லது நிலச்சரிவால் ஏற்பட்ட சேதங்களுக்கு Insurance நிவாரண தொகையை உங்களுக்கு வழங்குகிறது. வீட்டு கட்டமைப்பு சேதமடையும் போது அல்லது வீட்டின் பொருட்கள் கெடும்போது, அவற்றை சீரமைக்க அல்லது மாற்ற நிதி உதவியை இந்த பாலிசிகள் வழங்கி வருகின்றன.
Fastest Delivery App For Clothes -உணவு மற்றும் மளிகை பொருட்களை ஒரு மணி நேரத்திற்குள் டெலிவரி செய்வது போல, இப்போது ஆடைகளையும் 60 நிமிடங்களில் டெலிவரி செய்யும் ஒரு புதிய ஸ்டார்ட் அப், Slikk, பெங்களூரில் தொடங்கப்பட்டுள்ளது. Slikk என்பது ஒரு செயலி மூலம் இயங்கும் தொழில், இதில் பயனர்கள் விரும்பிய ஆடைகளை ஆர்டர் செய்து, 60 நிமிடங்களுக்குள் பெற்றுக் கொள்ள முடியும்.மேலும், இந்த செயலியை உருவாக்கிய அக்சய் குலாட்டி, “நவீன யுகத்தினரின் வேகமான வாழ்க்கை முறையை கருத்தில் கொண்டு, ஷாப்பிங் அனுபவத்தை எளிமைப்படுத்துவதே எங்கள் நோக்கம்” என்று கூறுகிறார்.
Today Gold Rate In Tamil -செப்டம்பர் மாத துவக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலை ஏறுவதும் இறங்குவதுமாக இருந்து வந்தது.கடந்த இரண்டு நாட்களாக விலையில் எந்த வித மாற்றமும் இல்லாமல் இருந்த நிலையில்,இன்று தாகத்தின் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை நேற்று (செப்-11) 1 கிராம் ரூ.6,715 க்கு விற்பனை செய்து வந்த நிலையில், இன்று ரூ.10 குறைந்து ரூ.6,705 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.8 கிராம் ரூ.80 குறைந்து ரூ. 53,640 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.24 கேரட் ஆபரண தங்கத்தின் விலை, 1 கிராம் ரூ.7,315 க்கும், 8 கிராம் ரூ.58,520 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.மேலும், 18 கேரட் ஆபரண தங்கம் 1 கிராம் ரூ.5,492 க்கும், 8 கிராம் ரூ.43,936 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
Government Business Loan Scheme -மத்திய அரசின் தொழில் கடன் திட்டங்கள், இந்தியாவில் வணிக வளர்ச்சிக்காக மத்திய அரசின் தொழில் கடன் திட்டங்கள் ஸ்டார்ட்அப்கள் மற்றும் மற்ற நிறுவனங்களுக்கு தேவையான நிதி உதவியை வழங்கி வருகின்றன. சரியான கடன் திட்டத்தை தேர்ந்தெடுப்பது, உங்கள் வணிகத்தின் முழுத் திறனை வெளிப்படுத்த மிகவும் அவசியம். இதற்கான முக்கியமான தகவல்கள் பற்றி கீழே பார்க்கலாம்.வணிகக் கடன் தேவைகளின் மதிப்பீடு, கடன் பெறுவதற்கு முன், உங்கள் வணிகத்தின் நிதித் தேவைகளை சரியாக மதிப்பீடு செய்வது மிகவும் அவசியமான ஒன்றாகும். கடன் தொகை: உங்கள் வணிக இலக்குகளை அடைய எவ்வளவு நிதி தேவைபடும்? வணிக நிலை, நீங்கள் புதிய தொழில் தொடங்கவீர்களா அல்லது நிறுவனம் விரிவாக்கத்திற்கான கட்டத்தில் இருக்கிறதா? தொழில் துறைகள்,உங்கள் வணிகம் விவசாயம், உற்பத்தி, அல்லது சேவைத்துறையில் வருகிறதா? சில திட்டங்கள் குறிப்பிட்ட துறைகளை மட்டுமே ஆதரிக்கின்றன.
Today Gold Rate In Tamil -தமிழகத்தில் ஆபரண தங்கத்தின் விலையில் இன்று மாற்றமில்லை, நேற்று விற்கப்பட்ட அதே விலையில் தான் சந்தையில் இன்றும் விற்கப்படுகிறது.24 காரட் தங்கம் நேற்றைய தினம் 7,014 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில் இன்றும் அதே விலை நீடிக்கிறது. 22 காரட் ஆபரணத் தங்கம் நேற்றைய தினம் 6,680 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில் இன்றும் அதே விலை நீடிக்கிறது. வெள்ளி விலையிலும் மாற்றமில்லை, நேற்று விற்கப்பட்ட அதே விலையான 91 ரூபாய் / கிராம் என்ற விலையிலேயே இன்றும் விற்கப்படுகிறது.
Best Food Business Ideas in India -குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரும்வணிக யோசனைகள் பற்றி விரிவாக பார்க்கலாம்.ஜூஸ் கடை:இன்றைய காலக்கட்டத்தில், மக்கள் தங்கள் ஆரோக்கியம் மற்றும் உணவுப் பழக்கங்களைப் பற்றி அதிக கவனம் செலுத்துகிறார்கள். எனவே, பழச்சாறு கடைகள் ஆரோக்கியமான உணவு விருப்பமாக இருந்து, மிகவும் சாதிக்கக்கூடிய வணிக யோசனையாகும். பழச்சாறின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நீங்கள் தொகுக்கப்பட்ட பழச்சாறு வணிகத்தைத் திறக்கலாம் அல்லது குறைந்த முதலீட்டில் சில்லறை பழச்சாறு கடையை தொடங்கலாம். நீங்கள் பருவகால புதிய பழங்களைப் பயன்படுத்தி, இறக்குமதி செய்யப்பட்ட பழங்கள், திடீரென தயாரிக்கப்படும் பழச்சாறுகள், ஐஸ்கிரீம்கள் மற்றும் பல சுவைகளை உங்கள் வாடிக்கையாளர்களுக்கு கவர்ச்சிகரமாகவும், உதடுகளை கசக்கும் சாற்றை உருவாக்கலாம். பழச்சாறு, சர்பெட் மற்றும் ஸ்குவாஷ் ஆகியவை ஜூஸ் கடையில் இளைஞர்கள் மற்றும் இளைஞர்களிடையே மிகவும் பிரபலமானவையாக இருக்கிறது. மொபைல் உணவு வேன்:உணவு டிரக்குகள் மற்றும் மொபைல் உணவு வேன்கள், அவை வழங்கும் பல்வேறு உணவு விருப்பங்கள் மற்றும் இயக்கத்தால் மிகவும் கோரப்படும் ஸ்டால்களாக உள்ளன. மொபைல் உணவு வேன் என்பது அலுவலக ஊழியர்கள் மற்றும் இளைஞர்களுக்கும், தரமான மற்றும் வகைப்பட்ட பட்ஜெட் உணவை விரும்புபவர்களுக்கும் வெற்றிகரமான உணவு மூலமாக இருக்கும். உணவு வணிகத்திற்கான புத்திசாலித்தனமான முதலீடுகளில் இதுவும் ஒன்று. நீங்கள் உங்கள் உணவு டிரக் அல்லது வேனை புகழ் மற்றும் கோரிக்கைகளின் அடிப்படையில் இடமாற்றம் செய்யலாம். மொபைல் உணவு வேன் வணிகத்திற்கு குறைந்த முதலீடு தேவைப்படுகிறது மற்றும் நல்ல லாபத்தை அளிக்கிறது. குறைந்த விலை விகிதங்கள் மற்றும் முதலீடு மற்றும் பராமரிப்பு செலவுகளின் காரணமாக உணவு உணவுகளின் தேவை மற்றும் விற்பனை அதிகமாக உள்ளது. சமையல் வகுப்புகள்:சமையல் வகுப்புகள் என்பது பசுமையான உணவு வணிகங்களில் ஒன்றாகும். நகர்ப்புறங்கள் முதல் பெருநகரங்கள் வரை தேவைப்படுகின்றன. நீங்கள் திறமையான மற்றும் திறமையான சமையல்காரராக இருந்தால், பாரம்பரிய வடஇந்திய முதல் கிளாசிக் தென்னிந்திய, உண்மையான இத்தாலியன், சீனம் மற்றும் கண்டினென்டல் உணவுகள் வரை பல உணவு வகைகளை அறிந்திருந்தால், சமையல் வகுப்புகள் பொருத்தமான வணிக யோசனையாக இருக்கும். நீங்கள் வீட்டிலிருந்து சமையல் வகுப்புகளைத் தொடங்கலாம். தேவை மற்றும் பிரபலத்தின் படி, நீங்கள் அதை விரிவுபடுத்தலாம். பேக்கிங் மிகவும் பிரபலமான பொழுதுபோக்காக உள்ளது. பலர் கேக், ரொட்டி, பிஸ்கட், பேஸ்ட்ரி, குக்கீ, கப்கேக் பேக்கிங் போன்றவற்றைக் கற்றுக்கொள்ள விரும்புகிறார்கள். நீங்கள் பேக்கிங் வகுப்புகளையும் தொடங்கலாம்.
New Scheme For Farmers -5 ஏக்கர் நிலம் கொண்ட விவசாயிகளுக்கு, புதிய மின் மோட்டார் வாங்குவதற்கான 50% மானியத்தை தமிழக அரசு வழங்குகிறது. விவசாயிகளின் நலனுக்காக, தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது,. பம்பு செட் மாற்றம் தொடர்பான அறிவிப்புகள் மிகவும் முக்கியமாகக் கருதப்படுகிறது. பழைய மின் மோட்டார்களை பயன்படுத்தும் போது குறைவான தண்ணீர் பாசனம் மற்றும் அதிக மின் நுகர்வு ஏற்படுவதால், விவசாயிகள் புதிய மின் மோட்டார்களை வாங்க ஆர்வமாக உள்ளனர்.தமிழக அரசு, பழைய பம்பு செட்டுகளை மாற்றி புதிய மின் மோட்டார் பம்பு செட்டை நிறுவ விரும்பும் விவசாயிகளுக்கு மானியம் வழங்கும் திட்டத்தை உருவாக்கியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், 5 ஏக்கர் நிலம் கொண்ட விவசாயிகள் மட்டுமே மானியத்துக்கு தகுதி வாய்ந்தவர்கள். மேலும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது, அவர்களுக்கு 1000 பம்பு செட்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
Fish Farming Business Plan -தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள புதூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பரமசிவம், தமிழ்நாடு மீன் வளர்ப்போர் சங்கத்தின் மாநில துனை தலைவராக உள்ளார். கடந்த 23 ஆண்டுகளாக 16 ஏக்கர் நிலத்தில் 24 குளங்களில் ஆர்கானிக் முறையில் மீன் வளர்த்து பல விவசாயிகளுக்கு இத் தொழிலுக்கான பயிற்சியையும் அளித்து வருகிறார். மீன் வளர்ப்பில் அவருடைய அனுபவங்களை நம்முடன் பகிர்ந்துள்ளார்.ஒரு ஏக்கருக்கான மீன் வளர்ப்புக்கான குளத்தை வெட்டினால், அதில் தென்னை மற்றும் பிற மரங்களை உட்பயிராக வளர்க்கலாம். இது மட்டுமல்லாமல், ஆடு, மாடு, கோழி ஆகியவற்றையும் அந்த இடத்தில் வளர்க்க முடியும். இதனால் அனைத்து துறைகளிலும் வருமானம் கிடைக்கும். தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்திலும் மீன் வளர்க்கலாம். பொதுவாக, மீன் வளர்க்க நீரின் pH மதிப்பு 7.5 இருக்க வேண்டும். மண் மற்றும் நீர் நிலைத்தன்மையை காக்க குளத்தை பராமரிக்க வேண்டும்.
Today Egg Price In Namakkal -நாமக்கல் மண்டலத்தில், முட்டை விலை மேலும் 5 பைசா உயர்ந்து, ஒவ்வொரு முட்டையின் கொள்முதல் விலை 5.05 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.நாமக்கல், சேலம், ஈரோடு, பெருந்துறை, கோவை போன்ற பகுதிகளை உள்ளடக்கிய நாமக்கல் மண்டலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு சுமார் 6 கோடி முட்டைக் கோழிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன.மேலும், தினசரி சுமார் 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது.
SME IPO News in Tamil -சமீபத்தில் ஐபிஓ சந்தைகளில் பல நிறுவனங்கள் பங்குகளை வெளியிடும் நிலையில், இன்று SME பிரிவில் எஸ்பிபி பாலிமர்ஸ் (SPP Polymer) என்ற நிறுவனம் தனது ஐபிஓவுக்கு வழிகாட்டுகிறது. இந்த புதிய பங்கு வெளியீட்டின் மூலம், நிறுவனம் ரூ.24 கோடியை திரட்டும் குறிக்கோளை கொண்டுள்ளது.எஸ்பிபி பாலிமர்ஸ் பல்வேறு தொழில்கள் மற்றும் துறைகளுக்கு பேக்கேஜிங் தீர்வுகளை வழங்குகிறது. இந்த நிறுவனம் தேசிய பங்குச் சந்தையின் SME தளத்தில் பங்குகளை பட்டியலிட திட்டமிட்டுள்ளது.இந்த ஐபிஓ இன்று தொடங்குகிறது மற்றும் செப்டம்பர் 12 அன்று முடிவடைகிறது. பங்குகளின் விலை ரூ.59 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டியவை,ஐபிஓ தொடங்கும் தேதி: இன்று.ஐபிஓ முடிவடையும் தேதி: செப்டம்பர் 12.பங்குகளின் விலை: ரூ.59.இந்த ஐபிஓ பற்றிய முக்கியமான விஷயங்களை தெரிந்து கொள்ள முதலீட்டாளர்கள், பங்குகளை வாங்குவதற்கு முன்பு கவனமாக ஆய்வு செய்யவேண்டும்.SPP பாலிமர்ஸ் (SPP Polymer) ஐபிஓ,எஸ்பிபி பாலிமர்ஸ் நிறுவனத்தின் ஐபிஓ இன்று SME சந்தையில் திறக்கப்படுகிறது. புதிய பங்கு வெளியீடு: 41.5 லட்சம் பங்குகள்,மொத்த நிதி திரட்டும் இலக்கு: ரூ.45 கோடி.மேலும், ஒவ்வொரு பங்கு விலை: ரூ.59,1 லாட்டில் வாங்கக்கூடிய பங்குகள்: 2000 ஆகும்.
Top 10 Small Business Ideas -நீங்கள் புதிய தொழிலைத் தொடங்க விரும்புகிறீர்களா? மேலும், அந்த தொழிலை கிராமப்புறங்களில் ஆரம்பிக்கச் சிந்திக்கிறீர்களா? சிலர், நகர்ப்புறங்களுடன் ஒப்பிடும் போது, கிராமப்புறங்களில் தொழிலைத் துவங்குவது சவாலானதாக இருக்கக்கூடும் என்று கருதுகிறார்கள். ஆனால், கிராமங்களில் பல வணிக வாய்ப்புகள் உள்ளன! உண்மையில், இந்தியாவின் கிராமப்புற மற்றும் அர்ப்பணிக்கப்பட்ட பகுதிகளில் ஃபாஸ்ட் மூவிங் கன்ஸ்யூமர் கீட்ஸ் (FMCG) மார்க்கெட் 2025-ஆம் ஆண்டுக்குள் 100 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.நீங்கள் கிராமப்புறங்களில் தொழிலைத் தொடங்க திட்டமிட்டால், உரிய இடத்தை தேர்வு செய்து தொழிலை ஆரம்பிக்கலாம். குறிப்பாக விவசாயம் சார்ந்த பொருட்கள், கோழி வளர்ப்பு, சில்லறை விற்பனை கடை, விதைகள் மற்றும் உரங்கள் போன்றவற்றுடன் தொடர்புடைய தொழில்களைத் தொடங்குவதும் நலமாக இருக்கும். கிராமப்புறங்களில் அதிக லாபம் பெறக்கூடிய 8 தொழில்களை இங்கேப் பார்க்கலாம்.டீ கடை: நகரங்களில் மட்டும் இல்லாமல், கிராமங்களில் கூட டீ கடைகளுக்குப் பெரிய தேவை உள்ளது. இந்தியர்கள் டீ மீது கொண்டிருக்கும் காதல் எல்லாரும் அறிந்த விஷயமாகும். காலை அல்லது மாலை நேரங்களில் ஒரு கப் டீ குடித்து, நாட்டுக்குரிய மற்றும் உலகளாவிய நிகழ்வுகள் பற்றி விவாதிப்பது இந்தியர்களுக்கு மிகவும் பிடித்த வழிமுறையாகத் திகழ்கிறது. எனவே, உங்கள் கிராமத்தில் அல்லது சுற்றுவட்டாரத்தில் ஒரு டீ கடையைத் திறந்து, இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தலாம்.மாவு மில்: பாக்கெட் வழி கிடைக்கும் மாவுகளைப் பயன்படுத்த விரும்பாத கிராமம், புறநகர் மற்றும் நகர்ப்புற மக்கள் அனைவரும் அதிகரித்து வருகின்றனர். அதனால், இக்கிராமங்களில், புறநகர்ப்புறங்களில் மற்றும் நகர்ப்புறங்களில் மாவு மில்லுக்கான தேவையும் பெரிதாக உள்ளது. குறைந்த முதலீட்டில் மாவு மில் ஆரம்பிக்க ஒரு நல்ல வாய்ப்பு இது.பால் தொழில்: பால் தொழில் என்பது சிறிய அளவிலான வணிகம் ஆகும். உங்கள் கிராமத்தில் உற்பத்தி செய்யப்படும் பாலை நகர்ப்புற பால் நிறுவனங்களுக்கு விநியோகிக்கலாம். அல்லது, உங்கள் கிராமத்தில் அல்லது அருகிலுள்ள கிராமப்புற மார்க்கெட்டில் பால் விநியோகத் தொகுப்பைத் தொடங்கலாம். மாடுகளை வைத்துப் பால் பண்ணை ஆரம்பித்து, பலர் வெற்றிகரமாக லாபம் ஈட்டிக்கொண்டிருக்கிறார்கள். இதனைப் பற்றிய அனைத்து வாய்ப்புகளையும் கருத்தில் கொள்ளலாம்.
Work From Home Jobs For Female Freshers -வீட்டிலிருந்தபடியே பணம் சம்பாதிக்க பல்வேறு ஆன்லைன் வேலைகள் கிடைக்கின்றன, அவற்றின் வாய்ப்புகள் அறியப்படாமல் இருக்கின்றன.இன்றைய உலகில் , வருமானம் ஈட்டுவதில் கணவன் மனைவி இருவரும் சேர்ந்து வேலைக்கு செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இருவரும் வேலைக்குச் சென்றால்தான் குடும்பத்தை நிதி குறைவு இல்லாமல் நடத்த முடியும் என்ற நிலை பெரும்பாலான குடும்பங்களில் இருந்து வருகிறது. ஆனால், இவ்வாறு வீட்டையும் கவனித்து அலுவலகத்துக்கும் சென்று வேலை செய்யும் வசதி பல குடும்பத் தலைவிகளுக்கு கிடைப்பதில்லை.ஆனால் வீட்டிலிருந்தபடியே வேலை செய்யும் வாய்ப்பு கிடைத்தால், தங்களுக்கு கிடைக்கும் நேரத்தில் வீட்டிலிருந்தபடியே வேலை செய்து போதுமான அளவு பணம் சம்பாதிக்கலாம் என்றுதான் பெரும்பாலானோர் யோசித்து வருகின்றனர். ஆனால் அதற்கான முறைகள் அவர்களுக்குத் தெரியாது. இவ்வாறு வீட்டிலிருந்தபடியே செய்யக்கூடிய வேலைகளைத் தேடும் குடும்பத் தலைவிகளில் நீங்களும் ஒருவராக இருந்தால், உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும்.டேட்டா என்ட்ரி: மிகவும் குறைந்த முதலீடு மற்றும் அடிப்படை திறமையுடன் செய்யக்கூடிய வேலைகளில் ஒன்றாக டேட்டா என்ட்ரி வேலை உள்ளது. போதுமான வேகத்தில் தட்டச்சு செய்யும் திறமை, அடிப்படை கணினி அறிவு, தடையற்ற இணைய சேவை ஆகியவை இருந்தால், நீங்கள் டேட்டா என்ட்ரி வேலையில் மிகுந்த முன்னேற்றம் காணலாம். பல்வேறு ஆன்லைன் தளங்கள் டேட்டா என்ட்ரி வேலை வாய்ப்புகளை வழங்குகின்றன. அவற்றில் சரியான, நம்பகமான தளத்தை தேர்வு செய்து பணிபுரிந்தால், நீங்களும் நிச்சயம் வெற்றி பெறலாம்.ப்ளாக்கிங்: எழுத்தில் அதிக ஆர்வம் கொண்டவர்கள் ப்ளாக்கிங் மூலம் பணம் சம்பாதிக்க முயற்சி செய்யலாம். நன்றாக, கலைநயத்துடன் எழுதும் திறன் மட்டும் இதற்கே தேவையான முதலீடாகும். காப்பி ரைட்டிங், கான்டெண்ட் ரைட்டிங், கோஸ்ட் ரைட்டிங் போன்ற பல்வேறு வகையான எழுதும் வேலைகளை நீங்கள் வீட்டிலிருந்தபடியே செய்து வரலாம்.மேலும், பல ஆன்லைன் நிறுவனங்கள் இந்த வேலைக்கு அதிக அளவில் சம்பளம் வழங்க தயாராக உள்ளன.யூடியூப்: இது தற்போது மிகவும் பிரபலமான பணம் சம்பாதிக்கும் வழியாக உள்ளது. குறிப்பாக, குடும்பத் தலைவிகள் பலர் யூடியூப் மூலம் நல்ல வருமானத்தைப் பெறுகிறார்கள். நீங்கள் செய்யவேண்டியது என்னவெனில், அப்லோட் செய்யப்போகும் வீடியோக்கள் எந்த வகையைச் சார்ந்தவை என்பதைக் கண்டறிந்து, அவற்றை சரியான முறையில் பதிவு செய்து அப்லோட் செய்ய வேண்டும். இதற்காக, அடிப்படை எடிட்டிங் திறமை, வீடியோக்களை பதிவு செய்ய தேவையான தரமான கேமரா மற்றும் முயற்சி மட்டுமே தேவை. உங்களுக்கு பிடித்த பார்வையாளர்களை அதிகம் கவரக்கூடிய வகையில் வீடியோக்களை உருவாக்கி, அப்லோட் செய்து கொண்டே இருந்தால், விரைவில் நீங்களும் வெற்றிகரமான யூடியூபராக மாறலாம்.
Today Gold Rate In Tamil -செப்டம்பர் மாதத்தின் துவக்கத்தில் இருந்தே ஆபரணத்தங்கத்தின் விலை சற்று இறக்கத்தை சந்த்தித்து இருந்தது. இந்நிலையில் , இன்று செப்டம்பர் 10 ஆம் தேதியில் ஆபரணத்தங்கத்தின் விலையை பற்றி பார்க்கலாம்.22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை 1 கிராம் ரூ.6,677 க்கும்,8 கிராம் தங்கத்தின் விலை ரூ.53,416 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.24 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை 1 கிராம் ரூ.7,284 க்கும்,8 கிராம் தங்கத்தின் விலை ரூ.58,272 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.மேலும்,18 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை 1 கிராம் ரூ.5,469 க்கும், 8 கிராம் தங்கத்தின் விலை ரூ. 43,752 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.வெளியின் விலை நிலவரம், 1 கிராம் ரூ.90 க்கும், 10 கிராம் ரூ.900 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
JSW Cement IPO -மிகப்பெரிய சிமென்ட் உற்பத்தி நிறுவனமான ஜேஎஸ்டபிள்யூ சிமென்ட், ரூ. 4,000 கோடி நிதி திரட்ட ஐபிஓவிற்காக பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபியிடம் விண்ணப்பித்தது. அப்போதைய நிர்வாக நடவடிக்கையாக, செபி இந்த விண்ணப்பத்தை நிறுத்தி வைத்துள்ளதாக அறிவித்தது, ஆனால் எந்த விதமான காரணங்களும் குறிப்பிடப்படவில்லை. இதனால் ஊடகங்களில் பல்வேறு தகவல்கள் வெளியானதை அடுத்து, தற்போது செபி ஐபிஓவை தற்காலிகமாக நிறுத்தியதற்கான காரணத்தை வெளியிட்டுள்ளது.ஐபிஓ தடை செபி விளக்கம்,செபி, ஜேஎஸ்டபிள்யூ சிமென்ட் நிறுவனத்தின் ஐபிஓவை தற்காலிகமாக நிறுத்தியது, அதன் முக்கிய பங்கு வைத்திருக்கும் சஜ்ஜன் ஜிண்டால் மற்றும் அவரின் குடும்ப உறுப்பினர்கள் தொடர்புடைய வழக்குகள் காரணமாக என்று தெரிவித்துள்ளது.
Best Bonds To Invest In India -பொதுத்துறை வங்கிகளான கனரா வங்கி மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கி, தங்களது கடன் பத்திரங்கள் மூலமாக மொத்தம் ரூ.8,000 கோடி நிதி திரட்ட இருப்பதாக அறிவித்துள்ளது. கனரா வங்கி, 10 ஆண்டு கால உள்கட்டமைப்பு கடன் பத்திரங்கள் மூலம் ரூ.5,000 கோடி நிதி திரட்டத் திட்டமிட்டுள்ளது, இதற்கு 7.54% கூப்பன் வட்டி வழங்கப்படும்.இதில் ரூ.1,000 கோடி அடிப்படை அளவாகவும், கூடுதலாக ரூ.4,000 கோடிக்கும் பத்திர விற்பனை செய்யும் திட்டத்தை கனரா வங்கி வெளியிட்டுள்ளது.இந்த மாத்திரம் அல்லாமல், இந்தியாவின் மிகப்பெரிய வங்கி எஸ்பிஐ, கடந்த வாரம் 15 ஆண்டு கால உள்கட்டமைப்பு பத்திரங்கள் மூலம் ரூ.10,000 கோடி திரட்ட இருப்பதாகவும், இதற்காக 7.49% கூப்பன் வட்டி வழங்க இருப்பதாகவும் அறிவித்தது.
Flipkart Big Billion Day Sale -பிளிப்கார்ட் ஆண்டுதோறும் நடைபெறும் மிகப்பெரிய "பிக் பில்லியன் டேஸ் 2024" விற்பனையை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.இந்த மெகா விற்பனையில், அனைத்து பொருட்களுக்கும் பல்வேறு சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் வழங்கப்படும். தற்போதைய தகவலின்படி, பிளஸ் உறுப்பினர்களுக்கான விற்பனை செப்டம்பர் 29-ஆம் தேதி தொடங்கும், மற்ற அனைவருக்கும் செப்டம்பர் 30 முதல் விற்பனை தொடங்குகிறது. கடந்த ஆண்டில், பிக் பில்லியன் டேஸ் விற்பனை அக்டோபர் மாதத்தில் நடந்தது.பொதுவாக இந்த விற்பனை தீபாவளி பண்டிகையை மையமாகக் கொண்டு நடைபெறும்.இந்த விற்பனையில், எலெக்ட்ரானிக்ஸ், ஃபேஷன், வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் உடை, அலங்கார பொருட்கள் உள்ளிட்ட பிரிவுகளுக்கு சிறந்த ஆபர்களை எதிர்பார்க்கலாம். குறிப்பாக Apple, Samsung, Google, OnePlus போன்ற பிரபல ஸ்மார்ட்போன்களுக்கு மிகப்பெரிய சலுகைகள் வழக்கம் போல் வழங்கப்படும்.என்று அறிவிக்கப்பட்டுள்ளது.ஃபிளிப்கார்ட் ஆப்பில், Flipkart Axis Bank கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்களுக்கு ரூ.1,00,000 வரை ஐந்து சதவீத தள்ளுபடி கிடைக்கும்.Flipkart Pay Later மூலம் கிரெடிட் லைன் மற்றும் Super Coin பயன்படுத்தி கூடுதல் தள்ளுபடிகள் பெறலாம்.Flipkart கிஃப்ட் கார்டுகள் வாங்கி ரூ.1,000 வரை தள்ளுபடி பெறும் சலுகை உள்ளது.SuperMoney Rupay ஆஃபர் மூலம் வாழ்நாள் இலவச கிரெடிட் கார்டு மற்றும் சிறந்த கட்டண சலுகைகளை பெறலாம்.இதனுடைய தள்ளுபடி விவரங்கள் இன்னும் முழுமையாக அறிவிக்கப்படவில்லை, ஆனால் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
How To Increase Credit Score -உங்கள் சிபில் ஸ்கோர் உங்கள் கடந்த கால கடன் திருப்பிச் செலுத்தும் வரலாற்றின் அடிப்படையில் மாறுபடும். சிபில் ஸ்கோர் குறைவாக இருந்தால், கடன் விண்ணப்பம் நிராகரிக்கப்பட வாய்ப்புள்ளது. ஆனால், கவலைப்பட வேண்டாம்! சிபில் ஸ்கோர் குறைவாக இருந்தாலும் கடனைப் பெற சில வழிகள் உள்ளது.அதை பற்றி பார்க்கலாம். நீங்கள் கடன் பெற விண்ணப்பிக்கும் போது வங்கி உங்களுடைய சிபில் ஸ்கோரை வைத்து நீங்கள் முன்பு வாங்கிய கடனை எந்த தேதியில் திருப்பி செலுத்தி உள்ளீர்கள்.சரியாக திருப்பி செலுத்தி இருக்கிறீர்களா இல்லையாஎன்ற விவரங்களை தெரிந்து கொண்ட பிறகே உங்களுக்கு கடன் கொடுப்பதை உறுதி செய்யும்.சிபில் ஸ்கோர் குறைவாக இருந்தாலும் கடன் பெறும் 5 வழிகள்:NBFC-களில் விண்ணப்பிக்கவும்:சிபில் ஸ்கோர் குறைவாக இருந்தாலும், NBFC-கள் (Non-Banking Financial Companies) கடனை வழங்கும்.ஆனால், வங்கிகளின் வட்டி விகிதங்களை காட்டிலும் விட NBFC-களின் வட்டி விகிதம் அதிகமாக இருக்கும்.ஜாயின்ட் லோன் பெற விண்ணப்பிக்கவும்:உங்கள் சிபில் ஸ்கோர் குறைவாக இருந்தால், நல்ல கிரெடிட் ஸ்கோர் கொண்ட ஒருவரை சேர்த்து கூட்டு கடன் பெறலாம். இதன் மூலம் உங்கள் கடன் ஒப்புதல் எந்த வித சிக்கலின்றி கிடைக்கும்.முன்கூட்டியே சம்பளம் பெறுதல்:நீங்கள் வேலையில் இருந்தால்,உங்கள் நிறுவனம் முன்பண சம்பளம் வழங்கும் வகையில் உடனடி நிதி தேவையை பூர்த்தி செய்யலாம்.FDக்கு எதிராக கடன் பெறுங்கள்:உங்கள் FD, எல்ஐசி, பிபிஎஃப் போன்ற முதலீடுகளை அடிப்படையாகக் கொண்டு கடன் பெறலாம். PPF கணக்கு குறைந்தது ஒரு நிதியாண்டு செயலில் இருந்தால், அதற்கு எதிராக கடனுக்கு விண்ணப்பிக்கலாம்.இதன் மூலம் கடன் வசதி 5 ஆண்டுகள் வரை கிடைக்ககூடும்.தங்கக் கடன்:தங்கத்தை பிணையமாக வைத்து குறைந்த ஆவணத்துடன் கடன் பெறலாம்.சிபில் ஸ்கோர் குறைவாக இருந்தாலும், தங்கத்தின் 75% மதிப்பில் கடன் கிடைக்கும்.
PVR Cinema Theatre -நாடு முழுவதும் பல மால்களில் மல்டிபிளக்ஸ் சினிமா திரைகளைக் கொண்டுள்ள இந்த பிவிஆர் ஐநாக்ஸ் நிறுவனம், போதுமான வரவேற்பு இல்லாத சில திரைகளால் நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளதால், அவற்றை மூட அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. 2023-24 நிதியாண்டில் 85 திரையரங்குகளை மூடிய பிவிஆர் ஐநாக்ஸ், தற்போது அதிக தேவை உள்ள இடங்களில் கூடுதலாக 120 திரையரங்களை தொடங்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.மேலும், மும்பை, புனே, வதோதரா போன்ற நகரங்களில் முக்கியத்துவம் இல்லாத ரியல் எஸ்டேட் சொத்துகளை விற்பனை செய்ய உள்ளது.மேலும், அதன் மூலம் கணிசமான வருவாய் ஈட்டப்படுமென நம்பிக்கை கொள்கிறது. தென்னிந்தியாவில் பிவிஆர் ஐநாக்ஸ் அதிகமான திரையரங்குகளை உருவாக்குவது மூலம் நிறுவனம் தனது வளர்ச்சியை உறுதி செய்யவுள்ளதாகவும், நிகரக் கடனில் இருந்து வெளிவரும் நோக்கில் செயல்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.2024ம் நிதியாண்டில் பிவிஆர் ஐநாக்ஸ் நிறுவனம் ரூ.6,203.7 கோடி வருமானமும், ரூ.114.3 கோடி நஷ்டமும் சந்தித்தது.இந்நிலையில், டிக்கெட் விலையில் 10 சதவீதம் வளர்ச்சி, செலவில் 11 சதவீதம் உயர்வு உள்ளிட்ட மாற்றங்களை சந்தித்திருப்பதாகவும், நிறுவனத்தின் அடுத்த கட்ட வளர்ச்சி திட்டங்கள் வியாபார வளர்ச்சியை மேலும் மேம்படுத்துவதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Home Made Usiness In Tamil -இன்றும் நிறைய பேர் வெளியே எந்த வேலைகளுக்கும் செல்லாமல் வீட்டில் தான் இருந்து வருகிறார்கள்.இவர்கள் வீட்டில் இருந்தபடியே சிறு சிறு தொழில்களை செய்யலாம் அதன் மூலம் வரும்,ஆனால் பெறலாம். அந்த வகையில் குறைந்த அளவில் முதலீடு செய்து அதிக அளவில் வருமானம் தரும் சில சிறிய தொழில்களை சுலபமாக செய்யலாம்.மேலும்,இவை மாதம் ஒருமுறை சம்பளம் பெறும் வேலைகள் அல்ல,ஒவ்வொரு நாளும் நல்ல வருமானம் பெறுவதற்கு வழிவகை ஈட்டக்கூடிய சொந்த தொழில்கள் ஆகும்.இந்நிலையில் முதலீடு, தொழில்நுட்பம், மற்றும் உழைப்பில் தொடர்ச்சியாக செய்து கொண்டிருந்தால், மிகுந்த வருமானம் பெற முடியும். இந்த வகையில் சில தொழில்களை பற்றி பார்க்கலாம்.1. தண்ணீர் பாட்டில் வியாபாரம்:தொலைவிலுள்ள பகுதிகளில் பாட்டில் தண்ணீருக்கு அதிக தேவை இருக்கிறது. இதனை பாட்டிலில் அடைத்து அங்காடிகளில் விற்க தினசரி ரூ.2000 முதல் ரூ.5000 வரை வருமானம் பெறலாம்.
Tata Air India Latest News -மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வந்த ஏர் இந்தியா விமான சேவை நிறுவனத்தை டாடா குழுமம் வாங்கிய பிறகு பல மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு, தற்போது வாடிக்கையாளர் சேவையும் விமான சேவையும் குறிப்பிடத்தகுந்த அளவில் மேம்படுத்தப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, டாடா குழுமத்தில் இயங்கிவரும் 4 விமான சேவை நிறுவனங்களையும் ஒருங்கிணைப்பது மிகவும் முக்கியமான பணியாக உள்ளது. இதில் ஏர் இந்தியா மற்றும் விஸ்தாராவை இணைக்கும் பணிக்காக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (SIA) நிறுவனத்துக்கு மத்திய அரசு வெள்ளிக்கிழமை அன்னிய செலாவணி முதலீட்டுக்கான அனுமதி வழங்கியுள்ளது.மேலும், டாடா குழுமம் ஏர் இந்தியாவை வாங்கிய பிறகு, ஏர் இந்தியா, ஏர் இந்திய எக்ஸ்பிரஸ், ஏர் ஏசியா இந்தியா, விஸ்தாரா என நான்கு பிராண்டுகளை கொண்டுள்ளது. இதில், விஸ்தாரா என்பது டாடா குழுமம் மற்றும் சிங்கப்பூர் ஏர்லையன்ஸ் இணைந்து உருவாக்கிய நிறுவனமாகும்.
Egg Business Ideas -எஸ்.கே.எம். ஸ்ரீ சிவகுமார், ஈரோட்டைச் சேர்ந்தவர், முட்டைகளை வைத்து பவுடர் உற்பத்தியில் உலகளவில் பிரபலமான தொழிலதிபர் ஆவார். 1995 ஆம் ஆண்டில், 27 வயதில், அவர் "எஸ்.கே.எம் எக் ப்ராடக்ட் எக்ஸ்போர்ட் லிமிடெட்" எனும் நிறுவனத்தை தொடங்கியுள்ளார். இந்த நிறுவனம், இப்போது ஆண்டிற்கு ₹650 கோடி வருமானம் பெற்று கொண்டிருக்கிறது.எஸ்.கே.எம். ப்ராடக்ட்ஸ் நிறுவனம் ஆசியாவின் மிகப்பெரிய முட்டை ப்ராசசிங் பிளான்ட்டாக இருந்து வருகிறது.மேலும், இந்த நிறுவனம்,ஒரு நாளுக்கு 1.8 மில்லியன் முட்டைகளை ப்ராசசிங் செய்து வருகிறது.இந்நிலையில் ஒரு ஆண்டிற்கு 6500 டன் முட்டை பவுடர் தயாரிக்கப்படுகிறது.மேலும்,ஆரம்ப காலத்தில் இந்நிறுவனம் 150 பணியாளர்களுடன் தொடங்கப்பட்டது.இந்நிலையில்,தற்பொழுது 1300 பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர். முழு முட்டை, வெள்ளை கரு, மற்றும் மஞ்சள் கரு ஆகியவற்றில் இருந்து தனித்தனியாக பவுடர்களை தயாரித்து அதனை, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றனர்.மேலும், திரவமாக இருக்கும் முட்டை வெள்ளை கரு மற்றும் மஞ்சள் கருவை டெட்ரா பேக்குகளில் அடைத்து விற்பனை செய்கின்றனர்.இந்நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் ரஷ்யா உள்ளிட்ட 20 நாடுகளில் இருக்கிறார்கள்.
What Is Systematic Investment Plan -SIP என்பது, சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் (SIP) என்பது மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்வதற்கான ஒரு வழிமுறையாகும். பணத்தை மொத்தமாக முதலீடு செய்வதற்குப் பதிலாக, தவணை முறையில் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் முதலீடு செய்வதையே எஸ்ஐபி என அழைக்கின்றனர். SIP மூலமாக குறைந்தபட்சம் 100 ரூபாய் முதலீடு செய்து மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யலாம்.இதன் வேலை,SIP முறையில், உங்கள் பணம் தானியங்கியாக வங்கிக் கணக்கிலிருந்து எடுத்துக்கொண்டு, ஒரு மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் முதலீடு செய்யப்படுகிறது.SIP முறையில் இது,ஒரு எளிதான முதலீட்டுத் திட்டமாகும்.மேலும்,அந்த நாளின் சந்தை விலை நிலவரத்தை (NAV) அடிப்படையாகக் கொண்டு, குறிப்பிட்ட எண்ணிக்கை அலகுகள் உங்களுக்கு செய்யப்படும். ரூபாய் மதிப்புச் சராசரியாக்கம் என்பது,சந்தையின் விலையில்லா நேரங்களில் அதிக அலகுகளை வாங்கியும், விலை அதிகமாக இருக்கும் நேரங்களில் குறைந்த அலகுகளை வாங்கியும், நீங்கள் ஒருங்கிணைந்த சராசரி விலையைச் சாத்தியமாக்க முடியும். இது உங்கள் முதலீட்டை உறுதியாகவும், பலன்களாகவும் நிச்சயமாக மாற்றும்.
Tirupati Devasthanam Latest News -ஆந்திர மாநிலம்,திருப்பதி மாவட்டத்தின் திருமலை என்ற ஊரில் ஏழுமலையான் கோவில் அமைந்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு இத்தலத்தில் லட்டு பிரசாதமாகத் தரப்படுகிறது.இந்த லட்டுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.இந்நிலையில்,திருப்பதியில் நாள்தோறும் 2.8 லட்சம் லட்டுகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.இது இந்தியாவிலேயே அதிக வருமானம் பெரும் கோயிலாக திகழ்ந்து வருகிறது.இந்நிலையில்,தேவஸ்தானம் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு ஆதார் அட்டையை காண்பித்தால் மட்டுமே ஒரு லட்டு இலவசமாக வழங்கப்படும் என்று அதிரடியான அறிவிப்பு ஒன்றை வெயிட்டுள்ளது.மேலும், கூடுதல் லட்டு பெறுவதற்கு வழக்கம் போல் ரூ.50 செலுத்தி பெற்று கொள்ளலாம் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது. அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
Today Richest Person In India -ஹூரன் ஆராய்ச்சி நிறுவனம் 2024 ஆம் ஆண்டு பணக்காரர்கள் பட்டியலில் வெளியான அறிக்கையில் இந்தியாவில் கடந்த ஆண்டு மட்டும் ஐந்து நாட்களுக்கு ஒரு கோடீஸ்வரர் உருவாவதாக ஆய்வுகள் அடிப்படையில் தெரிவித்திருக்கிறது.இந்நிலையில் 2024 ஆம் ஆண்டு ஜூலை 31, 2024 நிலவரப்படி பணக்காரர் பட்டியலில் சொத்து மதிப்பீடுகள் கணக்கிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.ஹூரன் இந்தியாவின் நிறுவனர் மற்றும் தலைமை ஆராய்ச்சியாளரான அனஸ் ரஹ்மான் ஜுனைத் கூறுகையில் "ஆசியாவின் செல்வம் உருவாக்கும் இயந்திரமாக இந்தியா, உருவாகி வருகிறது! சீனாவில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 25% குறைந்த நிலையில், இந்தியாவில் 29% அதிகரித்து நாட்டில் 334 கோடீசுவரர்கள் என்ற வரலாற்று உச்ச அளவீட்டை எட்டியுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
Top Richest people -உலக பொருளாதாரம் நாளுக்கு நாள் தொடர்ந்து வளர்ச்சி நோக்கி சென்று கொண்டிருப்பதால்,ஆசியா கண்டம் செல்வத்தை உருவாக்குவதற்கான முக்கிய மையமாக மாறியுள்ளது. உலகின் பிற கண்டங்களை ஒப்பிடுகையில், ஆசியாவில்தான் அதிகளவில் செல்வந்தர்கள் வாழ்ந்து வருகிறார்கள். மேலும், இவர்கள் ஆசியாவின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்து வருகிறார்கள்.முதல் இடத்தில் முகேஷ் அம்பானி: இந்தியாவின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்டின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக முகேஷ் அம்பானி இருந்து வருகிறார்,ரூ.115.3 பில்லியன் சொத்து மதிப்புடன் ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரராக முதல் இடத்தில் இருக்கிறார்.கடந்த பத்து ஆண்டுகளாக, ஃபோர்ப்ஸ் பத்திரிகையால் இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரராக முகேஷ் அம்பானி தொடர்ந்து தேர்வு செய்யப்பட்டு வருகிறார்.இரண்டாம் இடத்தில் கௌதம் அதானி: இந்தியாவின் அகமதாபாத்தைச் சேர்ந்த அதானி குழுமத்தின் நிறுவனர் மற்றும் தலைவராக கௌதம் அதானி இருந்து வருகிறார், ரூ.86 பில்லியன் சொத்து மதிப்புடன் ஆசிய கண்டத்தில் இரண்டாவது இடத்தில் உள்ளார். இவர் துறைமுகங்கள், விமான நிலையங்கள், மற்றும் எரிசக்தி துறைகளில் முதலீடு செய்துள்ளார். 1988 இல் வர்த்தக நிறுவனமாகத் தொடங்கிய இவர், தற்போது ஆசியாவின் முன்னணி பணக்காரர்களில் ஒருவராக இரண்டாவது இடத்தில் உள்ளார்.மூன்றாம் இடத்தில் பிரஜோகோ பங்கேஸ்து:இந்தோனேசியாவின் ஆற்றல் மற்றும் பெட்ரோ கெமிக்கல் அதிபரான பிரஜோகோ பங்கேஸ்து இருக்கிறார், ரூ.68 பில்லியன் சொத்து மதிப்புடன் மூன்றாவது இடத்தில் உள்ளார். இவர் தனது தொழில் வாழ்க்கையை மர வணிகத்தில் தொடங்கியிருந்தாலும், இன்று PT Barito Pacific நிறுவனம் பெட்ரோ கெமிக்கல், பிளாஸ்டிக் உற்பத்தி, சுரங்கம், மற்றும் வெப்ப ஆற்றல் போன்ற துறைகளில் முன்னிலையில் இருந்து வருகிறார்.நான்காவது இடத்தில் ஜாங் ஷான்ஷன்:Nongfu Spring என்னும் பாட்டில் தண்ணீர் நிறுவனத்தின் தலைவராக ஜாங் ஷான்ஷன் இருக்கிறார்,ரூ.49.9 பில்லியன் சொத்து மதிப்புடன் இவர் ஆசிய கண்டத்தில் 4-வது இடத்தில் உள்ளார். 2022 ஆம் ஆண்டின் இறுதியில் ரூ.62.3 பில்லியன் சொத்துகளுடன் சீனாவின் பணக்காரராக தன்னுடைய இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளார்.ஐந்தாவது இடத்தில் கொலின் ஜெங் ஹுவாங்:PDD ஹோல்டிங்ஸ் எனும் இ-காமர்ஸ் நிறுவனத்தின் மூலம் செல்வந்தரான கொலின் ஜெங் ஹுவாங், உலக அளவில் பணக்காரர்களின் பட்டியலில் 5-வது இடத்தில் இருக்கிறார். இவரது சொத்து மதிப்பு ரூ.49.9 பில்லியன். சில ஆண்டுகளுக்கு முன்பு தலைவர் பதவியில் இருந்து விலகிய போதிலும், ஹுவாங் இ-காமர்ஸ் நிறுவனத்தில் 28% பங்குகளை வைத்துள்ளார்.ஆறாவது இடத்தில் தடாஷி யானாய்: ஃபாஸ்ட் ரீடெய்லிங் நிறுவனத்தின் நிறுவனராக தடாஷி யானாய் இருந்து வருகிறார்,மேலும்,யுனிக்லோ, தியரி மற்றும் ஜே பிராண்ட் போன்ற பிராண்டுகளை மேற்பார்வையிடுகிறார்.இவருடைய சொத்து மதிப்பு ரூ.45.6 பில்லியன் ஆகும்.இவர் சுமார் 25 நாடுகளில் 2,400-க்கும் மேற்பட்ட கடைகளை நடத்தி வருகிறார்.ஏழாவது இடத்தில் ஜாங் யிமிங்:பைட் டான்ஸ் நிறுவனத்தின் நிறுவனராக ஜாங் யிமிங் உள்ளார்.மேலும், இவர் 1 பில்லியனுக்கும் மேற்பட்ட பயனர்களை கொண்ட டிக்டோக் செயலியின் உருவாக்கத்தில் பிரபலமானவர். இவருடைய சொத்து மதிப்பு ரூ.43.4 பில்லியன் ஆகும். அமெரிக்காவில் சாத்தியமான தடைகள் காரணமாக சவால்களை எதிர்கொண்டாலும், பைட் டான்ஸ் செய்தி, கல்வி, மற்றும் கேமிங் போன்ற துறைகளில் செல்வாக்கு செலுத்தி வருகிறது.சமீபத்தில் அமெரிக்கா டிக்டோக்கை தடை செய்ய ஒரு புதிய சட்டத்தை நிறைவேற்றி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
Telegram News Today- வாட்சப், இன்ஸ்டாகிராம் மற்றும் டெலிகிராம் செயலியை தற்போது பலரும் பயன்படுத்தி வருகின்றனர். மேலும், இந்தியாவிலும் டெலிகிராம் செயலிக்கு பெரிய அளவில் விருப்பம் கொண்ட பயனர்கள் அதிகமாக இருக்கிறார்கள். இந்த டெலிகிராம் செயலியை தற்போது வரை சுமார் 900 மில்லியன் பயனர்கள் பயன்படுத்தி வரும் நிலையில், பிரான்சின் பாரீஸ் நகரத்திற்கு வெளியே உள்ள போர்ஜெட் விமான நிலையத்தில், டெலிகிராம் செயலியின் நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியான பாவெல் துரோவ் கடந்த சனிக்கிழமை மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.பிரான்சில் தொடர்ந்து போதைப் பொருள் கடத்தல் மற்றும் ஆன்லைன் குற்றங்களில் டெலிகிராம் அப்ளிகேஷன் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதனால், டெலிகிராம் செயலியின் சிஇஓ பாவெல் துரோவ் இத்தகைய செயல்களில் உடந்தையாக இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. தற்போது, அச்சாட்டுகளின் பேரில் அவருக்கு அர்ரெஸ்ட் வாரன்ட் பிறப்பிக்கப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
SBI Bank Scams -2004 ஆம் ஆண்டில், டாடா குழும நிறுவனமான டிசிஎஸ்-ன் ஐபிஓ வந்தது, அது முதலீட்டாளர்களிடமிருந்து வலுவான வரவேற்பைப் பெற்றது. அதன் பிறகு, நிறுவனத்தின் வணிகம் அதிகரித்தது மட்டுமல்லாமல், அதில் முதலீடு செய்த முதலீட்டாளர்களுக்கும் மல்டிபேக்கர் வருமானம் கிடைத்துள்ளது.பழமையான வணிக நிறுவனங்களில் ஒன்றான டாடா குழுமத்தின் டிசிஎஸ் நிறுவனத்தின் IPO 2004 ஆம் ஆண்டு வெளியானது.மேலும், இது முதலீட்டாளர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது.டாடா குழுமத்தின் டிசிஎஸ் நிறுவனம் வணிகத்தை அதிகபடுத்தி மல்டிபேக்கர் வருமானத்தை முதலீட்டாளர்களுக்கு கொடுத்துள்ளது.மேலும்,டிசிஎஸ் பங்குச் சந்தையில் கால் பதித்து சரியாக 20 ஆண்டுகள் ஆகி உள்ளது.டாடா குழுமத்தின் நிறுவன பங்குகள் 2004 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 25 அன்று பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளது.தற்பொழுது,மிகப்பெரிய ஐடி நிறுவனமான TCS பங்கு, சுமார் 100 ரூபாயில் தொடங்கி, 4,400 ரூபாயைத் தாண்டி முதலீட்டாளர்களுக்கு மாபெரும் வருமானத்தை கொடுத்துள்ளது.
Starbucks CEO Salary -அமெரிக்காவில் உள்ள ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டிருக்கும் பிரைன் நிக்கோலின் ஊதியம் மற்றும் ஆதரவுகளின் விவரங்ககளை வெளியிட்டுள்ளது. 17 மாதங்கள் ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இந்தியாவை சேர்ந்த லட்சுமணன் நரசிம்மன், பணியாற்றி வந்தார். ஆனால் அவரது பதவிக்காலத்தில், ஸ்டார்பக்ஸ் பங்குகள் 23% குறைந்ததால், சந்தை மூலதனம் 32 பில்லியன் டாலர்கள் சரிந்துவிட்டது. இதனால், அவருக்கு பதிலாக அமெரிக்காவை சேர்ந்த பிரைன் நிக்கோல் தற்பொழுது அந்த பதவிக்கு தேர்வு செய்யப்பபட்டுள்ளார்.அமெரிக்காவைச் சேர்ந்த பிரைன் நிக்கோலுக்கு மொத்தம் 113 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய ரூபாயில் 948 கோடி ரூபாய்) ஊதியமாக வழங்கப்படும் அது மட்டுமின்றி மேலும், அவர் சீட்டலில் பணியாற்றும் போது அவருக்கு தேவையான தங்கும் வசதிகளும், மற்றும் அவர் வந்து செல்வதற்கு ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் தனிப்பட்ட ஜெட் விமானத்தை பயன்படுத்தும் வசதியையும் அவருக்கு ஸ்டார்பக்ஸ் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதாவது,ஸ்டார்பக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், "பிரைன் நிக்கோல் தனது துறையில் சிறந்த தலைவராக இருந்துள்ளார். மேலும், அதனால் அவருக்கு இவ்வளவு பெரிய தொகையை ஊதியமாக கொடுக்கிறோம். பிரைன் நிக்கோல ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு கட்டாயமாக உறுதுணையாக இருப்பார்" என்று தெரிவிக்கப்பட்டிருகிறது.அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
Today Gold Rate In Tamil - ஆகஸ்ட் மாதத்தின் ஆரம்பத்திலிருந்தே ஆபரண தங்கத்தின் விலை அதிகரிப்பதாகவும் குறைவதாகவும் இருந்து வந்த நிலையில், இன்று தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. இதனால் தங்கம் வாங்குவோருக்கு பெரும் ஏமாற்றம் என்று கூறப்படுகிறது.22 கேரட் தங்கம், 8 கிராமின் விலை, ரூ.53,280 ல் இருந்து ரூ.280 அதிகரித்து, ரூ.53,560 க்கு விற்பனை செய்யப்படுகிறது. 10 கிராமின் விலை ரூ.66,600 ல் இருந்து ரூ.350 அதிகரித்து ரூ.66,950 க்கு விற்பனை செய்யப்படுகிறது.இதே போல், 24 கேரட் தங்கம், 8 கிராமின் விலை, ரூ.58,120 ல் இருந்து ரூ.312 அதிகரித்து ரூ.58,432 க்கு விற்பனை செய்யப்படுகிறது. 10 கிராமின் விலை ரூ.72,650 ல் இருந்து ரூ.390 அதிகரித்து ரூ.73,040 க்கு விற்பனை செய்யப்படுகிறது. Gold Rate Today Tamil - 18 கேரட் தங்கம், 8 கிராமின் விலை, ரூ43,648 ல் இருந்து ரூ.176 அதிகரித்து ரூ.43,824 க்கு விற்பனை செய்யப்படுகிறது.10 கிராமின் விலை ரூ.54,560 ல் இருந்து ரூ.220 அதிகரித்து ரூ.54,780 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Actor Surya Latest News- நடிகர் சூர்யா 120 கோடி ரூபாய்க்கு புதிய பிரைவேட் ஜெட் வாங்கியதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகி வருகின்றன. நடிகர் சிவகுமாரின் மூத்த மகனான சூர்யா, நடிகை ஜோதிகாவை திருமணம் செய்து கொண்டு, சென்னையில் பல ஆண்டுகள் வசித்து வந்ததையடுத்து தற்பொழுது மும்பையில் தனது குடும்பத்துடன் வசித்திக் கொண்டிருக்கிறார்.சூர்யாவின் மனைவி ஜோதிகா இந்தி திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களில் நடித்து வருகிறார். குறிப்பாக, இந்த ஆண்டு அவர் நடித்த "ஷைத்தான்" திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்று, 200 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலை அள்ளி இருக்கிறது.
Todays Gold Rate in Chennai -ஆகஸ்ட் மாதத்தின் ஆரம்பத்திலிருந்தே ஆபரண தங்கத்தின் விலை அதிகரிப்பதாகவும் குறைவதாகவும் இருந்து வந்த நிலையில், இன்று 22 கேரட் தங்கத்தின் விலை ரூ.160 குறைந்துள்ளது.இதனால் தங்கம் வாங்குவதற்கு சரியான நேரமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.22 கேரட் தங்கம், 8 கிராமின் விலை, ரூ.53,440 ல் இருந்து ரூ.160 குறைந்து ரூ.53,280க்கு விற்பனை செய்யப்படுகிறது. 10 கிராமின் விலை ரூ.66,800 ல் இருந்து ரூ.200 குறைந்து ரூ.66,600 க்கு விற்பனை செய்யப்படுகிறது.இதே போல், 24 கேரட் தங்கம், 8 கிராமின் விலை, ரூ.58,296 ல் இருந்து ரூ.176 குறைந்து ரூ.58,120 க்கு விற்பனை செய்யப்படுகிறது. 10 கிராமின் விலை ரூ.72,870 ல் இருந்து ரூ.220 குறைந்து ரூ.72,650 க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், 18 கேரட் தங்கம், 8 கிராமின் விலை, ரூ43,776 ல் இருந்து ரூ.128 குறைந்து ரூ.43,648 க்கு விற்பனை செய்யப்படுகிறது.10 கிராமின் விலை ரூ.54,720 ல் இருந்து ரூ.160 குறைந்து ரூ.54,560 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Jio Recharge Plans New Update -முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் சமீபகாலத்தில் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை அதிகப்படுத்திருந்தது. இதனால் வாடிக்கையாளர்கள் பெரும் சோகத்தில் இருந்தனர்.அதனால் ஜியோ நிறுவனம் மீண்டும் அதிரடி ஆபருடன் களமிறங்கி இருக்கிறது. இதன் மூலம் தனது வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதிய ஆபர்கள் மற்றும் சலுகைகள் மூலம் ஜியோ, அதன் வாடிக்கையாளர்களை மேலும் திருப்திப்படுத்தி வருகிறது.முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ,பார்தி ஏர்டெல் நிறுவனத்தை கடுமையாகத் தாக்கும் வகையில் புதிய திட்டத்தை அறிமுகம் செய்து,முழு டெலிகாம் சந்தையையும் அதிர்ச்சி படுத்தியுள்ளது.ஏர்டெல்லில் ரூ.379 மதிப்பில் கிடைக்கும் 5ஜி சலுகை,கட்டண உயர்வுக்குப் பிறகு, தற்போது ஜியோவில் வெறும் ரூ.198 மதிப்பில் அதே 5ஜி சலுகை கிடைக்கிறது.
Business News In Tamil -அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் கட்டணங்களை அதிகரித்ததை அடுத்து, தற்பொழுது புதிய சலுகைகளை வெளியிட்டுருக்கிறது.அதாவது, தனது ஜியோ டிவி+ ஆப்பின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு 800 டிஜிட்டல் சேனல்கள் மற்றும் 13 ஓடிடி தளங்களின் சேவைகளை எங்கள் ஸ்மார்ட் டிவி-யில் கூடுதல் கட்டணமின்றி பெறலாம் என அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது,அனைத்து முன்னனி ஸ்மார்ட் டிவிகளிலும் ஜியோ டிவி+ செயலியை டவுன்லோடு செய்து பயன்படுத்தலாம். இதில், சிங்கிள் சைன்-ஆன் மற்றும் குழந்தைகளுக்கான தனிப்பட்ட சேனல் தொகுப்புகள் உருவாக்கும் வசதிகள் போன்ற பலன்களை அனுபவிக்கலாம் என்று ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது.மேலும்,ஜியோ டிவி+-ல் கலர்ஸ் டிவி,இடிவி, சோனி சப்,ஸ்டார் ப்ளஸ்,ஜிடிவி,ஆஜ்தக்,இண்டியா டிவி,டிவி9 பாரத்வர்ஷ்,ஏபிபி நியூஸ், நியூஸ்18,சோனி டென்,ஸ்போர்ட்ஸ் 18,ஸ்டார் ஸ்போர்ட்ஸ்,யூரோ ஸ்போர்ட்,டிடி ஸ்போர்ட்ஸ்,எம்டிவி போன்ற பல்வேறு சேனல்களைப் பெறலாம்.இது மட்டுமின்றி குழந்தைகளுக்கான மற்றும் பக்தி சார்ந்த சேனல்களும் இதில் அடங்கும். மேலும்,ஓடிடி தளங்களில் உள்ள ஜியோசினிமா ப்ரீமியம்,டிஸ்னி+ ஹாட்ஸ்டார்,சோனி லிவ்,ஜீ5,டிஸ்கவரி+,ஹொய்சோய்,லயன்ஸ்கேட் ப்ளே ஃபேன்கோட்,இடிவி வின்,ஷீமாரூமி,ஈராஸ்,அல்ட் பாலாஜி போன்ற பல பிரபலமான சேவைகளின் அணுகலை வாடிக்கையாளர்கள் சுலபமாக பெற முடியும். இந்த அனைத்து சேவைகளையும் ஜியோஃபைப்ர் ப்ரீபெய்டு மற்றும் போஸ்ட்பெய்டு திட்டங்களை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் பயன்படுத்தலாம்.ஜியோ டிவி+ செயலியை Android TV, Apple TV ஆப் ஸ்டோர்கள் மற்றும் அமேசான் ஃபயர் டிவி ஸ்டிக் மூலம் டவுன்லோட் செய்யலாம் எனவும், ஜியோ டிவி+ செயலியில் 10 வெவ்வேறு மொழிகளில் 800+ டிஜிட்டல் டிவி சேனல்களைப் பெறலாம். இது மட்டும்மல்லாமல் வாடிக்கையாளர்கள் 13 ஓடிடி சேனல்களில் சிங்கள் லாகினில் 2 ஸ்மார்ட் டிவிக்களில் விரும்பியவற்றை தேர்வு செய்து பார்க்க முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
BSNL News In Tamil -இந்திய தொலைத் தொடர்பு சந்தையில், ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் இவை இரண்டும் முன்னனி வகுத்து வந்த நிலையில்,இந்த இரண்டு நிறுவனங்களும் சில மாதங்களுக்கு முன்பு தங்களின் ரீசார்ஜ் கட்டணங்களை அதிகமாக்கியதால்.ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் BSNL-க்கு மாற தொடங்கினர்.BSNL நிறுவனம், இந்த வாய்ப்பை மிகச்சிறப்பாக பயன்படுத்தி கொண்டிருக்கிறது. இந்த BSNL நிறுவனத்திற்கு மாறிய மக்களுக்கு விருந்து வைக்கும் வகையில் சூப்பர் ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறது.ரூபாய்.997 ரீசார்ஜ் திட்டம் ஒன்றை கொண்டு வந்துள்ளது. இந்த புதிய ரீசார்ஜ் திட்டத்தினால் BSNL நிறுவனத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Tesla Latest News In Tamil -மிகவும் பிரபலமான டெஸ்லா நிறுவனத்தின் தொழிலதிபர் எலான் மஸ்க் புதியதாக வேலை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.டெஸ்லா நிறுவனம் விலை உயர்ந்த வாகனங்களையும், தொழில்நுட்ப பொருட்களையும் தயாரித்து வந்த நிலையில், தற்பொழுது வழகத்திற்கு மாறாக அதி நவீன சாதனங்களை தயாரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.அதாவது, டெஸ்லா நிறுவனம் மனிதர்களை போலவே இருக்கும் ரோபோக்களை இயக்கி வருகிறது. மேலும், அந்த ரோபோவுக்கு மனிதர்கள் அன்றாட வாழ்வில் செய்யும் அனைத்து விதமான விஷயங்களையும் எளிய முறையில் கற்றுத்தருவதே இந்த வேலை எனவும், மனிதர்களின் அசைவுகளை பிரதியடுக்கும் மோஷன் கேப்ச்யூர் சூட் உடையையும் VR ஹெட் செட்டையும் மாட்டி கொண்டு இதன்மூலம் அசைவுகளை ஏற்படுத்தினால் அதே போலவே ரோபோட்டும் செய்யும் என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.
Central Government Loan Schemes -மத்திய அரசால், 2020 ஆம் ஆண்டு கொரோனா கால கட்டத்தில் வெளியான இந்த திட்டம் ஆண்களுக்கான திட்டம் இல்லை.இது முழுமையாக பெண்களுக்காக மட்டுமே கொண்டு வந்த சிறப்பான திட்டம் ஆகும். மத்திய அரசால் வெளியிடப்பட்ட திட்டத்தின் பெயர் " உத்தியோகினி ".இந்த உத்தியோகினி திட்டம் கொரோனா கால கட்டத்தில் வெளியானதால், இதைப் பற்றி ஒரு சிலருக்கு மட்டுமே தெரிந்திருக்க வாய்ப்பு உள்ளது.எனவே, இந்த திட்டத்தைப் பற்றி பலரும் அறியாமல் தான் இருக்கிறார்கள்.மேலும், இந்த உத்தியோகினி திட்டம் இன்றும் நடைமுறையில் தான் இருக்கிறது. உத்தியோகினி திட்டம் என்பது, அனைத்து பெண்களுக்கும் கிடைக்கும் திட்டம் இல்லை. இந்த திட்டம் புதிதாக தொழில் துவங்கும் பெண்களுக்கும் அல்லது ஏற்கனவே துவங்கிய தொழிலை மேலும் விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று நினைக்கும் பெண்களுக்கும் பயன்படும் வகையில் கொண்டு வரப்பட்டது. இந்த திட்டத்தில் அதிகபட்சமாக 3 லட்சம் வரை கடன் உதவி பெற்றுக்கொள்ளலாம், மேலும் 0 % வட்டியுடனும் மற்றும் 50% மானியமும் கிடைக்கும்.0% வட்டி விகிதம் என்பது அனைத்து விதமான பெண்களுக்கும் கிடைப்பதில்லை. அது, இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
Mahindra Thar New Model -மஹிந்திரா குழுமத்தின் தலைமை வடிவமைப்பாளர் பிரதாப் போஸ், தார் ரோக்ஸ்ஸின் சிறப்பு வடிவமைப்பு அம்சங்களை பற்றி தெளிவாக அனைவரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வெளியீட்டு விழாவில் விளக்கினார்.மேலும், இந்த தனித்துவமான அம்சங்கள் அனைத்தும்,இந்த வாகனத்தை மற்ற SUV மாடல்களில் இருந்து வேறுபடுத்தும் என்று கண்மூடித்தனமாக எதிர்பார்க்கப்படுகிறது.மேலும், M&M நிறுவனத்தின் CEO ராஜேஷ் ஜெஜூரிகர், பிரீமியம் SUV சந்தையில் மஹிந்திரா கண்டிப்பாக எதிர்காலத்தில் வெற்றி அடையும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.மேலும், அடுத்த 3 முதல் 5 ஆண்டுகளில் ரூ.12.5 லட்சம் மதிப்புள்ள SUV பிரிவை மஹிந்திரா வழிநடத்தும் திறன் பெற்றிருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.தார் ரோக்ஸ் மாடல், தனது நுழைவு நிலை மாடல்களுக்கு போட்டி விலையுடன் சந்தையில் அறிமுகமாகிறது. இது இரண்டு வகைகளில் உள்ளது.அவைகளை கீழே அடுத்து பார்ப்போம். MX 1 பெட்ரோல் வகையின் விலை ரூ12.99 லட்சத்தில் தொடங்குகிறது. இதைபோன்று,டீசல் வகையின் விலை ரூ13.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. MX1 மாடல், இரண்டு வகையான எஞ்சின்களுடன் வெளியாகிறது. 2.2-லிட்டர் டீசல் எஞ்சின் 148bhp மற்றோன்று 330 Nm டார்க்கை தயாரிக்கிறது.மேலும், 2.0-லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 158bhp மற்றும் 330 Nm சக்தியைக் கொண்டு உருவாக்குகிறது. இந்த இரண்டு எஞ்சின்களும் ஆறு வேக மேனுவல் டிரான்ஸ்மிஷன் மற்றும் ரியர் வீல் டிரைவ் அமைப்புடன் சேர்க்கப்பட்டுள்ளது.மேலும், தார் ரோக்ஸ்ஸின் முக்கிய அம்சங்களில் ஒன்று அதனுடைய பரந்த சன்ரூஃப் ஆகும், இது M&M நிறுவனம் தனது வகுப்பிலேயே மிகப்பெரியது என கூறுகிறது. இந்த அம்சம், ஓட்டுநருக்கு பிரீமியம் அனுபவத்தை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இரண்டாம் தலைமுறை தார் மாடல் 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று அறிமுகமாகிய மூன்றாம் ஆண்டு முடிவில், தார் ரோக்ஸ்ஸின் வெளியீடு குறிப்பிடத்தக்கதாக இருக்கிறது.வருங்கால வாடிக்கையாளர்கள், மஹிந்திராவின் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது அங்கீகரிக்கப்பட்ட டீலர்ஷிப்கள் வழியே தார் ரோக்ஸ்ஸை முன்பதிவு செய்யலாம் என்றும் அதைத்தொடர்ந்து டெலிவரிகள் அடுத்த மாதம் தொடங்கும் என கூறப்படுகிறது.
IRCTC Latest News Today -இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் (IRCTC) முக்கியமான பொதுத் துறை நிறுவனமாக இருப்பதால், அதன் காலாண்டு முடிவுகள் முதலீட்டாளர்களின் முக்கிய ஆர்வத்தை ஈர்த்துள்ளது. IRCTC யின் செயல்திறன் பெரும்பாலும் பயணத் துறை சார்ந்து இருப்பதால், அதன் முடிவுகள் மீது அதிக கவனத்தை செலுத்தி பார்க்கப்படும்.ஆதித்ய பிர்லா குழுமத்தின் ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட நிறுவனங்களும், 2024-2025 நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை ஏற்பட்ட காலாண்டு வருவாயை இன்று அறிவிக்க உள்ளது.மேலும், உலகளாவிய கமாடிட்டி சந்தைகள் அதிகரிப்பது குறைவது என்றே இருப்பதால், இந்த ஹிண்டால்கோவின் முடிவுகள் உற்பத்தி மற்றும் உள்கட்டமைப்புத் துறைகளின் வளர்ச்சியை பிரதிபலிக்கக்கூடும்.
Today Gold Rate In Tamil -ஆபரணதங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக ஏற்றம் இறக்கமாக இருந்து வந்த நிலையில், இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய்.200 அதிகரித்தது, தங்கம் வாங்குவதில் முன்னுரிமை கொடுக்கும் மக்களுக்கு கவலை தெரிவிக்கும் விஷயமாக உள்ளது.22 கேரட் தங்க விலை நிலவரம், இன்றைய 22 கேரட் 1 கிராம் தங்கத்தின் விலை 6,445 -ல் இருந்து ரூ.25 அதிகரித்து ரூ.6,470 -க்கும், 8 கிராம் தங்கத்தின் விலை ரூ.51,560 -ல் இருந்து ரூ.200 அதிகரித்து ரூ.51,760 -க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.மேலும், இதே போல் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.64,450 -ல் இருந்து ரூ.200 அதிகரித்து ரூ.64,700 க்கும், 100 கிராம் தங்கத்தின் விலை ரூ.6,44,500 -ல் இருந்து ரூ.2,500 அதிகரித்து ரூ.6,47,000 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 24 கேரட் தங்க விலை நிலவரம், 24 கேரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூ.7,031 -ல் இருந்து ரூ.27 அதிகரித்து ரூ.7,058 -க்கும், 8 கிராம் தங்கத்தின் விலை ரூ.56,248 -ல் இருந்து ரூ.216 அதிகரித்து ரூ.56,464 -க்கும் விற்பனை செய்யப்படுகிறது.மேலும்,இதே போல் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.70,310 -ல் இருந்து ரூ.270 அதிகரித்து ரூ.70,580 க்கும், 100 கிராம் தங்கத்தின் விலை ரூ.7,03,100 -ல் இருந்து ரூ.2,700 அதிகரித்து ரூ.7,05,800-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Adani Group Latest News Today -அதானி குழுமம் மற்றும் பங்குச் சந்தை ஒழுங்குமுறை வாரியமான 'செபி'யின் தலைவருக்கிடையேயான தொடர்புகளை குறித்து அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 12, திங்கள்கிழமை காலை அதானி குழுமத்தின் பங்குகள் 7% வரை சரிவை சந்தித்துள்ளது.எனவே, பங்குச் சந்தையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.இந்த வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமையான இன்று, மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 409 புள்ளிகள் சரிவை சந்தித்து, 79,296 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 47 புள்ளிகள் சரிவை சந்தித்து 24,320 புள்ளிகளாகவும் வர்த்தகத்தை தொடங்கியுள்ளது.முன்பாகவே பங்குச் சந்தைகள் சரிவுக்கு உள்ளாகும் எனக் கணிக்கப்பட்டு வைத்திருந்த நிலையில், அந்த நேர்மறையான போக்கைத் தொடர்ந்து சரிவு நிகழ்ந்தது.கடந்த 10ஆம் தேதி ஹிண்டன்பர்க் வெளியிட்ட அறிக்கையில், "அதானி குழுமம் தொடர்புடைய வெளிநாட்டு நிறுவனங்களில் செபி தலைவர் மாதபி புரி புச் மேலும்,அவரது கணவர் தவல் புச் ஆகியோர் பங்குகளை கொண்டிருந்த நிலையில் மொரீஷியஸ் மற்றும் பெர்முடாவில் அமைந்துள்ள வினோத் அதானி தொடர்புடைய போலி நிறுவனங்களில் செபி தலைவர் மாதபி புரியும், அவரது கணவரும் பங்குகளை வைத்துவந்துள்ளனர்.
Share Market News In Tamil -இந்திய பங்குச்சந்தைகள் சென்ற வார வர்த்தகத்தில் 1% வரை சரிவை சந்தித்துள்ளன.மேலும்,இது இரண்டு வாரங்கள் தொடர்ந்து பங்குச்சந்தைகள் வீழ்ச்சியடைந்ததின் தொடர்ச்சியாகும், இதனால் முதலீட்டாளர்கள் மிகுந்த ஏமாற்றத்துடன் உள்ளார்கள்.இந்த வாரமும் பங்குச்சந்தைகள் இதே நிலையில் தொடரலாம் என்பதால், வர்த்தகத்தில் எந்த பங்குகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பதைக் கீழ்கண்டவாறு காண்போம்.அதாவது, ஐஆர்எஃப்சி, வோடபோன் ஐடியா, என்எம்டிசி, ஹட்கோ, எஸ்ஜேவிஎன் மற்றும் வோல்டாஸ் ஆகிய நிறுவனங்கள் இன்று முதல் காலாண்டு முடிவுகளை அறிவிக்க உள்ளன.அதானி எண்டர்பிரைசஸ், செபி தலைவர் மதாபி பூரி புச் மற்றும் அவரது கணவர் தவல் புச் ஆகியோர், வினோத் அதானி குழுமத்தின் மூலம் பெர்முடா மற்றும் மொரிஷியஸில் அதிக அளவில் வர்த்தகம் செய்ததற்காக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.மேலும் அவர்கள் அதிக லாபத்தை பார்த்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.எதிர்பார்க்கப்படுகின்றது, மேலும், அதே நேரத்தில் புதிய வெளியீடுகள் மற்றும் வரவிருக்கும் பண்டிகை காலங்களில் உள்நாட்டு சந்தையில் விற்பனை அதிகரிக்கும் எனவும் கணிக்கப்படுகிறது.ஹொனாசா கன்ஸ்யூமர்,இந்த நிறுவனம் 2024ம் ஆண்டு ஜூன் காலாண்டில் ஒருங்கிணைந்த நிகர லாபம் 63% அதிகரித்து ரூபாய் .40 கோடியாக மாறியுள்ளது.கிராசிம், இந்த நிறுவனம் 2024ம் ஆண்டு ஜூன் மாதத்துடன் நடந்து முடிந்த முதல் காலாண்டில் ரூபாய். 52.12 கோடி நஷ்டம் வரை பதிவு செய்துள்ளது.ஜூபிலண்ட் ஃபுட்வொர்க்ஸ், இந்த ஜூன் காலாண்டில் வருடாந்திர அடிப்படையில் 31.4% நிகர லாப சரிவை சந்தித்துள்ளது.
Textile Industry In Bangladesh -வங்கதேசத்தில் நிலவும் அசாதாரண சூழ்நிலையால், அனைத்து இந்திய ஜவுளி தொழில்களிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என தொழில் துறையினர் கவலையில் உள்ளனர்.இதனை தொடர்ந்து , இந்திய பருத்தி கூட்டமைப்பின் - ஐசிஎஃப் தலைவர் துளசிதரன், மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பின் - ஆர்டிஎஃப் தலைவர் ஜெயபால் இவர்கள் இருவரும் பேட்டி ஒன்றில், வங்கதேசப் பொருளாதாரத்தில் ஜவுளித்தொழில் 86 சதவீதம் பங்களிப்பைக் கொண்டுள்ள நிலையில், இந்தியாவில் இருந்து தான் அதிக அளவு பருத்தி மற்றும் நூல் வாங்கதேசத்திற்கு கொண்டு வரப்படுகிறது.சர்வதேச சந்தையில் உள்ள பருத்தி விலையை விட இந்திய பருத்தி விலை ரூ. 17 வரை உயர்ந்துள்ளது. அதே போல், பாலிஸ்டர், விஸ்கோஸ் போன்றவைகளின் விலையும் 1 கிலோவுக்கு ரூ. 24, ரூ. 26 வரை அதிகரித்துள்ளது.
PM Care Fund Account Details -குழந்தைகளுக்கான பாதுகாப்பும் நல்வாழ்வும் மோடி அரசின் பிஎம் கேர்ஸ் திட்டம், என்பது 2020 ஆம் ஆண்டு கொரோனா தொற்றுநோயால் பெற்றோரை இழந்த அல்லது சட்டப்பூர்வமாக பாதுகாவலருக்குக் குறைவாக உள்ள குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய உதவுகிறது.மேலும், 2021 ஆம் ஆண்டில் பிரதமர் நரேந்திர மோடி இந்த திட்டத்தை அறிமுகம் செய்தார்.பிஎம் கேர்ஸ் திட்டத்தின் நோக்கங்கள்:எனவே, குழந்தைகளின் விரிவான கவனிப்பு மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வது மற்றும் சுகாதார காப்பீட்டு மூலம் அவர்களின் நல்வாழ்வை உறுதி செய்வதும் நிலைத்த பாதுகாப்பு ஆகும் .மேலும், 23 வயது வரை நிதியுதவியுடன் கல்வி வாய்ப்புகள் வழங்கி, தன்னிறைவு வாழ்க்கைக்கு அவர்களை ஆயத்தப்படுத்துவதும் இத்திட்டத்தின் நோக்கம் ஆகும். கொரோனா தொற்றுநோயின் போது, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு அடிப்படை தேவைகளைப் பூர்த்தி செய்ய, துணை ஊட்டச்சத்து, தங்குமிடம், உணவு மற்றும் உடை இவை அனைத்தும் துணை நிவாரணத்தின் அடிப்படையில் வழங்கப்படுகிறது.மேலும், ஆலோசனை, சட்ட உதவி, தொழிற்பயிற்சி மற்றும் மருத்துவ சிகிச்சை போன்றவை ஆலோசனை மற்றும் மருத்துவ உதவியின் கீழ் வழங்கப்படுகிறது.
BSNL News Tamil -பி.எஸ்.என்.எல் நெட்ஒர்க்கை நோக்கி படையெடுக்கும் வாடிக்கையாளர்கள்.இவ்வளவு நாட்களாக தனியார் நிறுவங்களை சார்ந்து இருந்த செல்போன் வாடிக்கையாளர்கள் இப்பொழுது திடீரென பி.எஸ்.என்.எல் க்கு படையெடுத்து வருவதற்கு காரணம் என்ன என்று தெரிந்து கொள்வோம்.தனியார் டெலிகாம் நிறுவனங்களான ஜியோ,ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா 12 முதல் 25 சதவீதம் வரை கட்டனங்களை உயர்த்தின. இது கடந்த ஜூலை மாதம் 3 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்ததைத் தொடர்ந்து, ஜியோ வின் ரீசார்ஜ் பிளான் விலை அதிகப்படுத்தியதால் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே உள்ளது. இத்தனையடுத்து ஜியோ பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் தங்களுடைய சிம் கார்டுகளை பொதுத் துறை நிறுவனமான பி.எஸ்.என்,எல், க்கு மாற்றி உள்ளனர். மீண்டும் உருவெடுக்கும் பி.எஸ்.என்.எல் நிறுவனம்.
EV Scooter Price In India -தொழிலார்களை குறி வைக்கும் EV ஸ்கூட்டர். பெங்களூர் மற்றும் ஹைதராபாத்தில் வளம் வந்த நிலையில், இப்பொழுது சென்னையிலும் வரவிருக்கிறது. சென்னையில் புதிதாக அறிமுகம் ஆகும், SUV ஸ்கூட்டர் ஷோரூம் திறப்பு விழாவிற்கு ரிவேர் இண்டி CEO அரவிந்த் மணி வருகைபுரிந்துள்ளார்.அப்போது, அவர் கூறுகையில், நிறைய மக்கள் சொந்தத் தொழில் செய்து வருகிறார்கள். அவர்களுக்கு பயன்படும் வகையிலும், நிறைய இளைஞர்களுக்கு பிடிக்கும் வகையிலும் தயாரித்துள்ளோம். நிறைய மக்கள் அவர்கள் செய்யும் தொழில்களுக்கு தேவையான பொருட்களை எடுத்துச் செல்ல அவர்களுடடைய இருசக்கர வாகனங்களை தான் சார்ந்து உள்ளார்கள். அவர்களுடைய பொருட்களை எளிமையாக எடுத்துச் செல்வதற்குப் பயன்படும் வகையில், இந்த வாகனத்தில் ஸ்டோரேஜ் ஸ்பேஸ் அதிகமாக கொடுக்கப்பட்டுள்ளது.