Top 10 Small Business Ideas In Tamil -குறைந்த முதலீட்டில் தொழில் தொடங்க விரும்பும் இளைஞர்களுக்கு உதவக்கூடிய வகையில் மிகவும் சிறந்த 10 சிறு தொழில்களை பற்றி பார்க்கலாம்
Top 10 Small Business Ideas In Tamil -இன்றைய காலகட்டத்தில், பலரும் சுயமாக தொழில் தொடங்குவதில் மிகவும் ஆர்வம் காட்டுகிறார்கள், அதிலும் குறிப்பாக இளம் தலைமுறையினர் சுயமாக தொழில் துவதில் மிருந்த ஆர்வம் காட்டி வருகிறார்கள். எனினும், சரியான முதலீடு மற்றும் சரியான யோசனைகள் என்பது சுயமாக தொழில் துவவாங்குவதற்கு முக்கியமான ஒன்றாகும். இந்நிலையில், குறைந்த முதலீட்டில் தொழில் தொடங்க விரும்பும் இளைஞர்களுக்கு உதவக்கூடிய வகையில் மிகவும் சிறந்த 10 சிறு தொழில்களை பற்றி பார்க்கலாம்.
1. ஆப் டெவலப்மெண்ட்:
நாம் வாழும் இன்றைய காலகட்டத்தில் ஆப்களின் வளர்ச்சி மிக வேகமாக நடைபெற்று வருகிறது. Template ரெடியாக இருந்தால், ஆப் டெவலப்மெண்ட் தொழிலை தாராளமாக ஆரம்பிக்கலாம். இதற்கு Coding மற்றும் ஆப்கள் பற்றிய அடிப்படை அறிவு மிகவும் அவசியமானதாக இருக்கும். இவை தெரியாவிட்டால், ஆப் கோர்ஸ் சென்று இந்த தொழிலுக்கு தேவையான திறன்களை கற்றுக் கொண்ட பிறகு இந்த தொழிலை துவங்கலாம்.
2. உணவு பரிமாறும் சேவை (Catering):
எப்பொழுதும் உச்சியில் இருக்கும் தொழில் என்றால் அது உணவு தொழில் தான்.திருமணம் மற்றும் சுபகாரியங்களுக்கு மக்கள் உணவு பரிமாறும் சேவையைத் தேடி வருகின்றனர். உணவு தயாரிக்கும் திறமையுடன், சில உதவியாளர்கள் இருந்தால், இந்த தொழிலை சுலைமான் முறையில் துவங்கி லாபம் பெறலாம்.
3. வீடியோ உருவாக்கம் மற்றும் எடிட்டிங்:
YouTube சேனல்களுக்கு மற்றும் நிறுவனங்களுக்கு வீடியோ எடிடிங் மற்றும் உருவாக்க சேவைகள் தேவைப்படுகின்றன. இதற்கான திறமைகள் இருந்தால், சொந்தமாகவே இந்த தொழிலை தொடங்கி நல்ல லாபம் பெறலாம்.
4. கோழி வளர்ப்பு (Poultry Farming):
இன்றைய காலத்தில் இடவசதியுள்ளவர் செய்து கொண்டிருக்கும் தொழில். கோழிகளை வளர்த்து, கடைகள் மற்றும் உணவகங்களுக்கு விற்பனை செய்து மூலம் வருமானம் பெறலாம். முட்டைகளையும் விற்பனை செய்ய முடியும். சிறு நுணுக்கங்கள் தெரிந்திருந்தால், இந்த தொழில் லாபகரமாக இருக்கும்.
5. பயண சேவை (Travel Agency):
பெரும்பாலான மக்கள் தனது குடும்பத்துடன் சுற்றுலா செல்லவதற்கு மிகுந்த ஆர்வமாக இருக்கிறார்கள். ஆன்லைனில் டிக்கெட் புக்கிங் மற்றும் சுற்றுலா ஏற்பாடு செய்யும் சேவையை வழங்கி நல்ல வருமானத்தை பெறலாம். இதற்கு ஒரு லேப்டாப் இருந்தால் போதும்.இந்த தொழிலை சிறப்பான முறையில் செய்து வரலாம்.
6. அழகு நிலையம் (Beauty Parlour):
அலங்கார சேவைகள் எப்போதும் பிரபலமானவைகளாக தான் இருந்து வருகிறது.பெண்களும் ஆண்களும் தலை முடி மற்றும் சருமத்தை பராமரிக்க parlour செல்கின்றனர். Hair Cutting, Makeup, Pedicure, Manicure போன்ற திறமைகள் இருந்தால், இந்த தொழிலில் நிச்சயமாக லாபம் ஈட்டலாம்.
7. இயற்கை உரம் உற்பத்தி:
தற்பொழுது வீட்டுத் தோட்டங்கள் வளர்த்தல், மரம் நடுதல் போன்றவை பிரபலமாகி வருகின்றன. இயற்கை உரங்களை தயாரித்து விற்பனை செய்வது சிறந்த லாபகரமான தொழில் ஆகும்.கடைகள் மற்றும் ஆன்லைனில் இந்த உரங்களை விற்பனை செய்து நல்ல வருமானம் பெறலாம்.
8. கம்ப்யூட்டர் பயிற்சி:
கம்ப்யூட்டர் பற்றிய விரிவான அறிவு இருந்தால் போதும், கம்ப்யூட்டர் பயிற்சியை மற்றவர்களுக்கு வழங்கி தொழில் தொடங்கலாம். இப்படி செய்தால், நல்ல வருமானத்தைப் காணலாம்.
9. இரண்டாவது கை வாகனங்கள்:
புதிய வாகனங்களை வாங்க முடியாதவர்களுக்கு,எந்த வித பிரச்சனையும் இல்லாதா தரமான பழைய வாகனங்களை விற்பனை செய்து நல்ல லாபம் பெறலாம். இன்றைய சூழலில், இது ஒரு சிறந்த தொழிலாக இருக்கும்.
10. விளம்பர நிறுவனங்கள்:
பெரிய மற்றும் சிறிய நிறுவனங்களுக்கு அவர்களது பொருட்களை விளம்பரப்படுத்தி வருமானம் பார்க்கலாம். Instagram, YouTube போன்ற சமூக வலைதளங்கள் மூலம் கூட விளம்பரப்படுத்தி எளிமையான முறையில் வருமானம் பெறலாம்.
சுய தொழில் துவங்க உள்ளவர்கள் மேலே உள்ள தொழில் தங்களுக்கு பிடித்த தொழிலை செய்து நல்ல வருமானம் பெறலாம்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2