• India
```

கர்ப்பகாலத்தில் காபி குடிக்கலாமா? ஆய்வில் வெளிவந்த ஷாக்கிங் தகவல்கள்!!

drinking coffee while pregnant safe

By Dhiviyaraj

Published on:  2025-01-20 14:55:00  |    137

பல்வேறு மக்கள் காலை எழுந்தவுடன் ஒரு காபி அருந்தியதன்மூலம் நாளை தொடங்குவார்கள். நமது தினசரி வாழ்க்கையின் ஒரு முக்கிய அங்கமாக காபி மாறியுள்ளது.

பல்வேறு மக்கள் காலை எழுந்தவுடன் ஒரு காபி அருந்தியதன்மூலம் நாளை தொடங்குவார்கள். நமது தினசரி வாழ்க்கையின் ஒரு முக்கிய அங்கமாக காபி மாறியுள்ளது.

ஆனால், கர்ப்ப காலத்தில் பெண்கள் தங்கள் சிசுவின் ஆரோக்கியத்திற்காக பல உணவுகளில் கட்டுப்பாடுகளை கடைபிடிக்கின்றனர். 

இந்நிலையில், காபி குடிப்பது கருவில் உள்ள குழந்தைக்கு பாதிப்பை ஏற்படுத்துமா? என அமெரிக்காவின் "Institute of Obstetrics and Gynaecology" ஆய்வு மேற்கொண்டுள்ளது.

இந்த ஆய்வின் முடிவில், கர்ப்பிணிப் பெண்கள் காபி குடிக்கலாம், ஆனால் அதிகபட்சமாக 200 மி.கி அல்லது அதற்கு குறைவாக மட்டுமே நுகர வேண்டும் என முக்கிய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காஃபின் அதிகமாக உட்கொள்ளும் பெண்களின் குழந்தைகள், காஃபின் அருந்தாத பெண்களின் குழந்தைகளை விட சிறிய உடல் அளவுடன் பிறப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. காரணமாக, காஃபின் கருப்பை மற்றும் நஞ்சுக்கொடியில் உள்ள இரத்த நாளங்களை சுருங்கச் செய்து, கருவுக்கு இரத்த விநியோகத்தைக் குறைத்து, குழந்தையின் வளர்ச்சியை பாதிக்கக்கூடும்.


அதிகளவிலான காஃபின் நுகர்வு குழந்தைகளில் உடல் பருமன் பிரச்சனைகளை உருவாக்கக்கூடும் என்பதும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே, கர்ப்ப காலத்தில் பெண்கள் காபி குடிக்கலாம், ஆனால் அளவோடு குடிப்பது மிக முக்கியம்

Harmful Effects of Drinking Coca Cola
Information

Harmful Effects of Drinking Coca Cola