• India

பிக்ஸடு டெபாசிட்களுக்கு 9.40 சதவிகிதம் வரை வட்டி தரும் ஸ்ரீ ராம் பைனான்ஸ்!

Shri Ram Finance FD Scheme

By Ramesh

Published on:  2024-10-31 07:31:05  |    231

Shri Ram Finance FD Scheme - 1974 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ஸ்ரீ ராம் நிறுவனம் முதலில் ஒரு சிட்பண்ட் நிறுவனமாக தான் ஆரம்பிக்கப்பட்டது, ஆரம்பத்தில் அந்த நிறுவனத்தின் சொத்து மதிப்பு ஒரு 20 இலட்சம் தான், கிட்டதட்ட 50 ஆண்டுகளாக இயங்கி வரும் ஸ்ரீ ராம் நிறுவனத்தின் தற்போதைய சொத்து மதிப்பு மட்டும் கிட்டதட்ட 2.9 லட்சம் கோடி ஆக இருக்கிறது.

50 ஆண்டுகளாக மக்களின் நம்பிக்கையை பெற்று இருக்கும் ஸ்ரீ ராம் பைனான்ஸ் நிறுவனம் தற்போது வாடிக்கையாளர்களுக்கு அசத்தலான பல பிக்ஸடு டெபாசிட் ஸ்கீம்களை வழங்கி வருகிறது, சாதாரண வாடிக்கையாளர்களுக்கு பிக்ஸடு டெபாசிட்களுக்கு 1 வருடத்திற்கு 7.85 சதவிகிதம் வரை வட்டி வழங்குகிறது, சீனியர் சிட்டிசனாக இருக்கும் பட்சத்தில் 7.85% + 0.50% வட்டி வழங்குகிறது.


சீனியர் சிட்டிசனாகவும், பெண்களாகவும் இருக்கும் பட்சத்தில் 7.85% + 0.50% + 0.10% வரை வட்டி வழங்குகிறது, அதாவது நார்மல் FD க்கு வழங்கப்படும் வட்டியை விட சீனியர் சிட்டிசன்களுக்கு எக்ஸ்ட்ராவாக 0.50 சதவிகிதமும், பெண்களுக்கு எக்ஸ்ட்ராவாக 0.10 சதவிகிதமும் வழங்கப்படுகிறது. அதுவே நீங்கள் லாங்க் டர்ம் FD ஆக போடும் போது அதற்கு 9.40 சதவிகிதம் வரை வட்டி கிடைக்கிறது. 

அதிகபட்சமாக 60 மாதங்கள், 5 ஆண்டுகள் வரை பிக்ஸடு டெபாசிட்டுகள் செய்யும் போது 9.45 சதவிகிதம் வரை வட்டி கிடைக்கிறது, பொதுவாக பிக்ஸடு டெபாசிட்டுகளுக்காக வங்கிகளை மட்டுமே நாடும் வாடிக்கையாளர்களை, பைனான்ஸ் நிறுவனத்தின் பக்கமும் திரும்பி பார்க்க வைத்து இருக்கிறது இந்த ஸ்ரீ ராம் பைனான்ஸ் நிறுவனம்.