How To Exchange 2000 Rupees Notes - உங்களிடம் இன்னமும் 2000 ரூபாய் நோட் கையில் இருக்கும் பட்சத்தில் அதை எப்படி மாற்றுவது எங்கு மாற்றுவது என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
How To Exchange 2000 Rupees Notes - கடந்த 2016 ஆம் ஆண்டு பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட போது, புதிய வகையிலான 2000 ரூபாய் நோட்டு புழக்கத்தில் விடப்பட்டது, கடந்த மே 19,2023 வரையில் நாட்டில் 3.56 இலட்சம் கோடி மதிப்பிலான 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன, ஆனால் அந்த நோட்டுகள் சாதாரண ஏழை எளிய மக்களிடம் இருந்ததை விட பணத்தை பதுக்குபவர்களிடமே அதிகமாக இருந்தது.
இந்த நிலையில் கடந்த மே 20,2023 அன்று ரிசர்வ் வங்கி 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக அறிவித்தது, பல்வேறு டெட்லைன்கள் கொடுத்த போதும் கூட 98.12 சதவிகிதத்திலான 2000 ரூபாய் நோட்டுகள் மட்டுமே ரிசர்வ் வங்கிகளிடம் திரும்ப வந்து இருக்கிறது, நோட்டு திரும்ப பெறுவதாக அறிவித்து 20 மாதங்கள் ஆகியும் கூட இன்னமும் 6,619 கோடி மதிப்பிலான 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருக்கின்றன.
இந்த நிலையில் ரிசர்வ் வங்கி பொதுமக்களிடம் இன்னமும் புழக்கத்தில் இருக்கும் 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெற முனைந்து இருக்கிறது, அதாவது இன்னமும் யாராவது 2000 ரூபாய் நோட்டுகளை கையில் வைத்து இருந்தால் அதை நேரடியாக ரிசர்வ் வங்கியின் அலுவலகங்களில் செலுத்தி அவர்களது வங்கி கணக்கில் வரவு வைத்துக் கொள்ளும்படி ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி இருக்கிறது.
போஸ்ட் ஆபிஸ் மூலம் போஸ்ட் அனுப்பியும் மாற்றிக் கொள்ள முடியும், அதற்கு முதலில் https://lawlegends.in/wp-content/uploads/2024/02/ECE_9220.pdf இந்த லிங்கை க்ளிக் செய்து பதிவிறக்கம் ஆகும் அப்ளிகேசனை நிரப்பி, அதனுடன் பான் கார்டு, 2000 ரூபாய் நோட்டுகள், உங்களது வங்கிக் கணக்கின் முகப்பு பக்கம் ஆகியவற்றை இணைத்து ஏதாவது ஒரு ரிசர்வ் வங்கியின் அலுவலகத்திற்கு அனுப்பினால் 30 நாட்களுக்குள் உங்கள் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.