• India
```

Mortgage Loan என்பது என்ன...அதை எவ்வாறு பெற வேண்டும்...வட்டி வீதம் எவ்வளவு இருக்கும்...?

Mortgage Loan Details

By Ramesh

Published on:  2024-12-20 19:06:33  |    182

Mortgage Loan Details In Tamil - இந்த தொகுப்பில் Mortgage Loan என்பதை பற்றியும், அதை எவ்வாறு பெற முடியும் என்பது குறித்தும் இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Mortgage Loan Details In Tamil - Mortgage Loan என்பது நம்மிடம் இருக்கும் சொத்துக்களை வங்கியில் அடமானம் ஆக வைத்து அதன் மூலம் கடன் பெறும் ஒரு திட்டம் ஆகும், சொத்து மதிப்பு, சொத்து இருக்கும் இடம், கடன் வாங்குபவரின் வருமானம் ஆகியவற்றை எல்லாம் பொருத்து, ஒருவருக்கு கொடுக்க கூடிய கடனின் மதிப்பும், வட்டியின் மதிப்பும் வங்கிகளுக்கு வங்கி மாறுபட வாய்ப்புகள் இருக்கிறது, 

பொதுவாக ஒரு அவசர தேவை என்னும் போது பிறரை நாட வேண்டிய சூழல் வரும், இல்லையேல் அதீத வட்டியாவது கொடுத்து பணத்தை வாங்கி விடுவோமே என மனம் யோசிக்கும், இல்லையேல் ஏதாவது சொத்தையோ நகையையோ விற்று விடுவோம் என யோசிப்போம், ஆனால் அதை எல்லாம் விட சிறந்த ஆப்சன் தான் இந்த Mortgage Loan என்ற ஒரு வங்கி கடன் திட்டம்.



உங்களிடம் ஒரு 50 இலட்சம் மதிப்பிலான சொத்து இருக்கிறது என வைத்துக் கொண்டால், அதில் அதிகபட்சமாக ஒரு 60% அதாவது 30 இலட்சம் வரை, அந்த சொத்தை அடமானம் வைத்து நீங்கள் கடனாக கோர முடியும், அந்த கடன் தொகை என்பது உங்களது வருவாயை பொருத்து மாற வாய்ப்பு இருக்கிறது. குறைந்த பட்சம் Mortgage Loan எடுக்க மாதம் ரூ 25,000 ஆவது வருமானம் பெற வேண்டும்.

ஆவணங்களை பொருத்தமட்டில் சொத்து அனைத்தும் உங்களின் பெயரில் இருக்க வேண்டும், ஆதார், பான் கார்டு, சொத்து ஆவணம் என அனைத்திலும் பெயர், முகவரி என முக்கிய விவரங்கள் சரியாக இருக்க வேண்டும், வட்டி வீதம் 8% முதம் 20% வரை என வங்கிகளுக்கு வங்கி மாறுபடலாம், திருப்பி செலுத்தும் காலமும் 10 வருடம் முதல் 15 வருடம் வரை வங்கிக்கு வங்கி மாறுபடலாம்.

" லோனுக்கான பிராசசிங் பீஸ் என்பது 1% முதல் 1.5% வரை இருக்கலாம், கடனை முன் கூட்டிய நீங்கள் செலுத்த விரும்பினால் அதற்கு ஒரு 2% போல அபராதத்தொகையுடன் திருப்பி செலுத்த அனுமதிக்கப்படும் " 

Harmful Effects of Drinking Coca Cola
Information

Harmful Effects of Drinking Coca Cola