• India
```

துபாயில் வீடு வாங்க ஆர்வம் காட்டும் இந்தியர்கள்.. என்ன காரணம் தெரியுமா?

reasons to invest in dubai real estate

By Dhiviyaraj

Published on:  2025-01-16 16:37:11  |    164

தற்போதைய காலகட்டத்தில் சென்னை, டெல்லி, மும்பை போன்ற முக்கிய இந்திய நகரங்களில் ரியல் எஸ்டேட் சொத்து விலை தாறுமாறாக உயர்ந்து வருவதை நம்மால் பார்க்க முடிகிறது.

தற்போதைய காலகட்டத்தில் சென்னை, டெல்லி, மும்பை போன்ற முக்கிய இந்திய நகரங்களில் ரியல் எஸ்டேட் சொத்து விலை தாறுமாறாக உயர்ந்து வருவதை நம்மால் பார்க்க முடிகிறது. மேலும் சிலர், இந்தியா வை தாண்டி துபாயில் அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் வில்லாக்கள் வாங்க ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

இந்தியாவில் முக்கியமான இடங்களில் இருக்கும் குடியிருப்புகள் மற்றும் வில்லாக்கள் அனைத்துமே ரூபாய் 5 கோடி ரூபாய்க்கு மேல் விலை கொண்டதாக இருக்கிறது என தகவல் வெளியாகி இருக்கிறது. ஆனால் துபாயில் சராசரி விலையே 5 கோடி ரூபாயாக இருக்கும் காரணத்தாலும், துபாயில் அதிகப்படியான வாடகை வருமானம் கிடைக்கும் என்பதற்காக துபாயில் முதலீடு செய்கிறார்கள்.

ஸ்கொயர் யார்ட்ஸ் நிறுவனத்தின் தரவுகளின்படி, துபாய் ரியல் எஸ்டேட் சந்தை 2024 ஆம் ஆண்டில் மிகுந்த வளர்ச்சியை  பிரதிபலிக்கிறது. இந்த ஆண்டு மட்டும் சுமார் 1,20,000 வீடுகள் மற்றும் நிலங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இதன் மொத்த பரிவர்த்தனை மதிப்பு AED 259 பில்லியனை கடந்துள்ளது. மேலும், வாடிக்கையாளர்களின் வருகை மற்றும் முதலீட்டு வாய்ப்புகளின் அதிகரிப்பு, சந்தையின் வளர்ச்சி விகிதத்தைக் குவிக்கப்பட்டுள்ளது.

தகவலின்படி, பரிவர்த்தனை எண்ணிக்கையில் 43% வளர்ச்சியும், விற்பனை மதிப்பில் 34% ஆண்டு வளர்ச்சியும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், துபாய் ரியல் எஸ்டேட் துறையின் வளர்ச்சி அதிகமாக இருப்பதால் பலரும் முதலீடு செய்ய ஆர்வம் காட்டுகிறார்கள். 

Harmful Effects of Drinking Coca Cola
Information

Harmful Effects of Drinking Coca Cola