How To Download UAN Card Online - ஊழியர்கள் ஆன்லைனில் PF குறித்த தகவல்களை பெறுவதற்கோ, அல்லது PF பணத்தை ஆன்லைனில் Claim செய்வதற்கோ UAN கார்டு எனப்படும் யுனிவர்சல் அக்கவுண்ட் நம்பர் கார்டு அவசியமாகிறது, நீங்கள் ஒரு ரிஜிஸ்டர் செய்யப்பட்ட நிறுவனத்தில் ஊழியராக நீண்ட காலம் பணி புரிந்து இருப்பீர்கள், உங்களுக்கு அப்போது சம்பளத்தில் PF பிடித்தம் செய்யப்பட்டு கொண்டே இருக்கும்.
ஒரு கட்டத்தில் ஏதாவது ஒரு தேவைக்கு PF பணம் தேவைப்படலாம், அந்த சமயத்தில் தான் உங்களுக்கு UAN கார்டு என்பது தேவைப்படும், அந்த UAN வைத்து தான் உங்களுடைய PF பணத்தை Claim செய்ய முடியும், சரி அந்த UAN நம்பரை எப்படி பெறுவது, ஆன்லைனிலேயே பெற முடியுமா, அவசர தேவை என்றால் உடனடியாக பெறுவது என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
UAN ஆன்லைனில் பெறுவதற்கான வழிகள்
1) https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/ முதலில் இந்த தளத்திற்குள் சென்று கொள்ள வேண்டும்,
2) பின்னர் Important Links என்ற பகுதியில் இருக்கும் Know Your UAN என்ற ஆப்சனை க்ளிக் செய்யவும்,
3) பின்னர் நீங்கள் ரிஜிஸ்டர் செய்து இருக்கும் மொபைல் எண்ணை உள்ளிடவும்,
4) உங்கள் மொபைலுக்கு ஒரு கடவுச்சொல் வரும், அந்த கடவுச்சொல்லை உள்ளிட்டு கேப்டாச்சைவை டைப் செய்து அடுத்த பேஜ்க்குள் செல்லவும்,
5) அங்கு ஆதாரில் இருக்கும்படி உங்களது பெயர், ஆதார் எண் உள்ளிட்டவைகளை உள்ளிட்டு, சப்மிட் செய்யும் பட்சத்தில் உங்களுக்கு ஸ்க்ரீனில் UAN நம்பர் தோன்றி விடும். அதை ஸ்க்ரீன்ஷாட் எடுத்து வைத்துக் கொள்ளலாம் அல்லது வேறு எதிலாவது பதிவு செய்து வைத்துக் கொள்ளலாம்.
UAN Activation
1) https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/ முதலில் இந்த தளத்திற்குள் சென்று கொள்ள வேண்டும்,
2) பின்னர் Important Links என்ற பகுதியில் இருக்கும் Activate Your UAN என்ற ஆப்சனை க்ளிக் செய்யவும்,
3) பின்னர் உங்களுடைய UAN, ஆதார் எண், ஆதாரில் இருக்கும் படி பெயர் என அனைத்தையும் பதிவிடவும்,
4) உங்கள் மொபைலுக்கு ஒரு கடவுச்சொல் வரும், அந்த கடவுச்சொல்லை உள்ளிட்டு கேப்டாச்சைவை டைப் செய்யவும்,
5) பின்னர் உங்களது UAN ஆக்டிவேட் ஆகி உங்களது மொபைலுக்கு UAN நம்பர் மற்றும் பாஸ்வேர்டு டெக்ஸ்டாக வரும்.
Downloading UAN Card
1) https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/ முதலில் இந்த தளத்திற்குள் சென்று உங்கள் மொபைலுக்கு வந்த UAN மற்றும் பாஸ்வேர்டை உள்ளிடவும்,
2) பின்னர் UAN Card என்ற ஆப்சனை க்ளிக் செய்யவும்,
3) உங்களது UAN Card இணையத்தில் ஷோ ஆகும்,
4) பின்னர் அதை PDF பார்மட்டில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.