Ilandhai's Health Benefits in Tamil - எளிதாக கிடைக்கும் இலந்தை பழத்தில் இருக்கும் நன்மைகள் குறித்து இந்த தொகுப்பில் முழுமையாக பார்க்கலாம்.
90ஸ் கிட்ஸ்களுக்கு இலந்தை பழம் என்றால் உயிர், அதை பழமாகவும், ஜாம் ஆகவும், இலந்தை பொடியாகவும் விரும்பி சாப்பிடுவார்கள், இன்றளவும் பப்பி ஜாம் என்று கடைகளில் விற்கப்பட்டு கொண்டு தான் இருக்கிறது, ஆனால் அந்த இலந்தையில் இருக்கும் மருத்துவ பயன்கள் குறித்து நாம் யாரும் அறிந்தது இல்லை, அத்தகைய இலந்தை குறித்தும் அதன் மருத்துவ பயன்கள் குறித்தும் இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
இலந்தை பழத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், இது செரிமானத்திற்கான நொதிகளை சுரக்க உதவுகிறது, இலந்தை பழத்தில் வைட்டமின் சி நிறைந்துள்ளது, இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. மேலும் இது தொற்றுநோய்களிலிருந்து உடலைப் பாதுகாக்கிறது, இலந்தை பழத்தில் பொட்டாசியம் உள்ளது, இது இரத்த அழுத்தத்தை குறைத்து இதய நோய்களில் இருந்து பாதுகாக்கிறது,
இலந்தை பழத்தில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகமாக உள்ளன, அவை மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகின்றன. மேலும் தூக்கத்தை மேம்படுத்த உதவுகிறது, இலந்தை பழத்தில் கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் உள்ளது. இது எடை இழப்புக்கு உதவுகிறது, இலந்தை பழத்தில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் உள்ளது, இது எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது,
சரும ஆரோக்கியத்திற்குm இலந்தை மிக மிக நல்லது. இது சருமத்தை இளமையாகவும் பொலிவாகவும் வைத்திருக்க உதவுகிறது, இலந்தை பழம் நினைவாற்றலை அதிகரிக்கும் குணம் உடையதாகும், இலந்தை பழம் இரும்புச்சத்தின் ஆகச்சிறந்த மூலமாகும். இதை தொடர்ந்து உட்கொள்வதன் மூலம் இரத்த சோகை உள்ளிட்ட இரத்தம் சம்மந்தப்பட்ட நோய்கள் வராமல் தடுக்கலாம்.