• India

புதிய வரி விதிப்பின் கீழ்...எந்தெந்த பொருட்களுக்கு ஜீரோ சதவிகித ஜிஎஸ்டி...?

Zero Percentage GST List

By Ramesh

Published on:  2024-12-30 18:09:06  |    98

Zero Percentage GST List - சரக்கு மற்றும் சேவை வரி (Goods And Service Tax) என்பது உற்பத்தி பொருள்கள் மற்றும் விற்பனை பொருள்களின் மீது மத்திய, மாநில அரசுகள் தனித்தனியாக விதிக்கப்படும் வரி என்பது ஒற்றை வரியாக மாற்றப்பட்டு விதிக்கப்படும் ஒரு வரி செயல்பாடு ஆகும், இது ஒரு மறைமுக வரி, இது பொருள்களின் மீது 0%, 5%, 12%, 18%, 28% என்ற வீதத்தில் விதிக்கப்படுகிறது. 

சரி, இந்த ஜீரோ சதவிகித ஜிஎஸ்டி வரிவிதிப்பில் இருக்கும் பொருள்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம், ப்ரஷ் மில்க், தயிர், மோர் போன்ற தூய்மையான பால் வகை பொருள்கள் ஜீரோ சதவிகித வரிவிதிப்பின் கீழ் வருகின்றன, முட்டை மற்றும் இயற்கையான முறையில் எடுக்கப்படும் தேன் வகைகள் ஜீரோ சதவிகித வரிவிதிப்பின் கீழ் வருகின்றன.



இயற்கையான காய்கறிகள், பழங்கள், பிராசஸ் செய்யப்படாத டீ இலைகள் உள்ளிட்டவைகள் ஜீரோ சதவிகித வரி விதிப்பின் கீழ் வருகின்றன, பேரீட்சை மற்றும் Nuts உள்ளிட்டவைகள் ஜீரோ சதவிகித வரி விதிப்பின் கீழ் வருகின்றன, பூஜை பொருட்களும் ஜீரோ சதவிகித வரி விதிப்பின் கீழ் இடம் பெற்று இருக்கின்றன, தச்சு பொருட்களும் ஜீரோ சதவிகித வரி விதிப்பின் கீழ் வருகின்றன.

எரிப்பதற்கான பயன்படுத்தப்படும் விறகுகள், கைவினைப் பொருட்கள், கைகளால் தயாரிக்கப்படும் இசைக் கருவிகள், காபி பீன்ஸ் உள்ளிட்டவைகள் அனைத்தும் ஜீரோ சதவிகித வரி விதிப்பின் கீழ் இடம்பெற்று இருக்கின்றன, அரிசி, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசியங்களில் சிலனவும் ஜீரோ சதவிகித வரி விதிப்பின் கீழ் வருவதாக தகவல்.