Zero Balance Account Plus And Minus - பெரும்பாலான வங்கிகள் தற்போதெல்லாம் குறித்த இருப்பு கணக்கில் இல்லை எனில் பிடித்தம் செய்கின்றனர், அதன் பொருட்டு பலரும் தற்போது ஜீரோ பேலன்ஸ் வங்கி கணக்கை நோக்கி அடி எடுத்து வைக்கின்றனர், அது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Zero Balance Account Plus And Minus - ஜீரோ பேலன்ஸ் அக்கவுன்ட் என்பது என்ன, அதை எப்படி துவங்குவது, அதன் சாதகங்கள், பாதகங்கள் என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
முதலில் ஜீரோ பேலன்ஸ் வங்கி கணக்கு என்பது என்ன?
ஜீரோ பேலன்ஸ் வங்கி கணக்கு என்பது உங்களது வங்கி கணக்கில் பேலன்ஸ் ஜீரோவாக இருந்தாலும் கூட, வங்கிகள் எந்த பிடித்தமும் செய்வது இல்லை, இதனால் உங்களது கணக்கில் இருக்கும் முழு பணத்தையும் உங்களால் அவ்வப்போது எடுத்துக் கொள்ள முடியும், ஆனாலும் இதற்கு ஒரு சில லிமிட்டேசன்கள் இருக்கின்றன, அது குறித்து பின்னர் பார்க்கலாம்.
சரி, எப்படி ஜீரோ பேலன்ஸ் வங்கி கணக்கு துவங்குவது?
1) ஆன்லைன், ஆப்லைன் என இரு வழிகள் இருக்கின்றன
2) ஆதார் கார்டு, பான் கார்டு, உங்களுடைய தற்போதைய புகைப்படம் உள்ளிட்ட ஆவணங்கள் மட்டும் போதுமானது.
3) ஆன்லைனில் நீங்கள் ஜீரோ பேலன்ஸ் வங்கி கணக்கு துவங்கும் போது அது ஓபன் ஆக குறைந்த பட்சம் 24 மணி நேரம் வரை ஆகலாம்.
4) நேரடியாக வங்கிக்கு சென்று துவங்கும் போது 15 நிமிடங்களில் பாஸ்புக் கைக்கு வந்து விடும்.
சரி, ஜீரோ பேலன்ஸ் வங்கி கணக்கின் சாதகங்கள் என்ன?
1) வங்கியில் குறிப்பிட்ட பேலன்ஸ் தொகை எப்போதும் இருக்க வேண்டியதில்லை.
2) வங்கிக் கணக்கில் கிடக்கும் தொகையை முழுதாக எடுத்துக் கொள்ள முடியும்.
3) சாதாரண வங்கிக்கணக்கு போல டெபிட் கார்டுகள் உள்ளிட்ட சேவைகளை எல்லாம் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
4) டெபிட் கார்டுகளுக்கு வருடாந்திர சார்ஜ்கள் பிடிக்கப்படுவதில்லை.
5) தங்க நகைக்கடன் பெற்றுக் கொள்ள முடியும்.
சரி, ஜீரோ பேலன்ஸ் வங்கி கணக்கின் பாதகங்கள் என்ன?
1) 50,000 ரூபாய்க்கு மேல் டெபாசிட் செய்ய முடியாது.
2) கிரெடிட் சேவைகள் பயன்படுத்த முடியாது.
3) லோன் சேவைகள் கிடைக்காது.
4) அவசரத்திற்கு பெரிய டிரான்ஸ்பர்களோ, கிரெடிட்களோ பெற முடியாது.
" மொத்தத்தில் ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்ட் என்பது முதியோர்கள், பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள், படிப்புக் காலங்களில் இருக்கும் இளைஞர்கள் ஆகியோர்களுக்கு சாதகம், பெரிதாக பரிமாற்றம் ஏதும் செய்ய முடியாது அது பாதகம் "