இளம் வயதிலேயே உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய கிராண்ட் மாஸ்டரான டி.குகேஷ். இவர் சீனாவை சேர்ந்த டிங் லிரெனை வீழ்த்தி பட்டம் வென்று சாதனை படைத்தார். இந்த ஆண்டு இவருக்கு கேல் ரத்னா விருது வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் குகேஷ் கடந்த 2024 ம் ஆண்டு அமெரிக்க அதிபர் காட்டிலும் அதிகமாக சம்பாதித்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அது தொடர்பாக பார்க்கலாம் வாங்க.
உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற குகேஷிக்கு பரிசுத் தொகையாக 15,77,842 அமெரிக்க டாலர்கள் கொடுக்கப்பட்டது. இதன் இந்தியமதிப்பு சுமார் ரூபாய் 13.6 கோடி இருக்கும் . இதுமட்டுமின்றி குகேஷிக்கு தமிழ்நாடு அரசு ரூ.5 கோடி பரிசுத்தொகைகொடுத்தது. .மேலும் அவர் படித்த வேலம்மாள் பள்ளியில் அவருக்கு பென்ஸ் கார் பரிசாக கொடுக்கப்பட்டது. அமரிக்கா அதிபரின் மொத்த ஆண்டு வருமானம் 4,000, 000 டாலர் இருக்கும்.