Windows Copy Paste Problem Fixed - திடீர்னு லேப்டாப் அல்லது கம்ப்யூட்டர்ல Copy,Paste Work பண்ணாம போயிடுதா, அதுக்கான தீர்வு தான் நாம இப்ப இந்த தொகுப்புல பார்க்க போறோம்.
Windows Copy Paste Problem Fixed - ஒரு சிலர் வேலைக்காக எப்போதும் லேப்டாப் அல்லது கம்ப்யூட்டர இணையத்துலயே கனெக்டிவா வச்சிருப்பாங்க, அந்த சமயத்துல திடீர்னு Windows ஆட்டோ அப்டேட் ஆகிடும், அப்படி அப்டேட் ஆகுறப்போ ஒரு சிலருக்கு சில பிரச்சினைகள் வரும், அவ்வாறாக ஒரு சிலருக்கு Copy,Paste Work பண்ணாம போயிடும், அதுக்கான தீர்வு தான் நாம இப்ப இங்க பார்க்க போறோம்.
Copy, Paste Work பண்ணல என்ன செய்யலாம்?
1) முதல்ல கம்ப்யூட்டர Restart பண்ணி பாருங்க, இதுலயே நிறைய பேருக்கு Work பண்ணிடுது,
2) Restart பண்ணியும் Work பண்ணலன்னா, CTRL + SHIFT + ESC மூனு பட்டனையும் ஒரே நேரத்துல பிரஸ் பண்ணா டாஸ்க் மேனேஜர் ஓபன் ஆகும், அதுல Process ல Windows Explorer ஆப்சன Right Click பண்ணி Restart கொடுங்க,
3) அப்படியும் Work ஆகலன்னா, C -> Windows -> System32 போயிட்டு rdpclip.exe அப்படின்னு Serach பண்ணுங்க,
4) rdpclip.exe னு ஒரு File இருக்கும் அந்த File மேல Right Click பண்ணிட்டு Run As Administratorனு கொடுங்க,
5) அதுக்கப்புறம் அதே Folder குள்ள dwm.exeனு Search பண்ணுங்க, அந்த File மேலயும் Right Click பண்ணிட்டு Run As Administratorனு கொடுங்க,
6) அப்புறம் கம்ப்யூட்டர Restart பண்ணிடுங்க, மேக்சிமம் இதுல Work பண்ணிடும்.
சரி, இதுலையும் Work பண்ணலன்னா?
1) Normal Winows Searchல போயிட்டு Cmd கொடுத்திட்டு Command Prompt ய Right Click பண்ணிட்டு Run As Administratorனு கொடுத்து ஓபன் பண்ணிக்கோங்க,
2) cmd /c "echo off | clip" அப்படின்னு கொடுத்து Enter பண்ணுங்க,
3) Again Restart பண்ணுங்க, பிரச்சினை சரி ஆகிடும்.
" மேல இருக்கிற Solution ல ஒன்னு Work ஆகலன்னா கூட இன்னொன்னு கண்டிப்பா Work ஆகும், ஒன்னு ஒன்னா பண்ணி பாருங்க, நிச்சயம் Copy, Paste பிரச்சினை சால்வ் ஆகிடும், நிச்சயம் இதுல ஏதாச்சு ஒன்னு உங்களுக்கு 100% தீர்வு கொடுக்கும் "