Why Gold Rates Change Daily - உலகளாவிய அளவில் தங்கம் மட்டும் தினம் தினம் விலை மாறிக் கொண்டே இருக்கிறது அதற்கான காரணம் என்ன என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
இன்றைய தினத்தில் ஒரு கிராம் ஆபரண தங்கம் என்பது கிராமிற்கு ரூ 7,890 ரூபாயாக இருக்கிறது, ஒரு பவுன் ஆபரணத்தங்கம் என்பது 63,120 ரூபாயாக இருக்கிறது, கடந்த ஆண்டு இதே மாதத்தில் இதே தேதியில் (15-12-24) ஒரு கிராம் ஆபரணத்தங்கம் ஆனது ரூ 6,027 ஆக இருந்த நிலையில் இந்த வருடம் கிராம் ரூ 7,890 ஆக இருக்கிறது, கடந்த வருடத்தை காட்டிலும் கிராமிற்கு 1863 ரூபாய் உயர்ந்து இருக்கிறது,
இது ஒரே வருடத்தில் ஆன மாற்றம், ஏன் தங்கம் மட்டும் தினசரி விலை மாறிக் கொண்டே இருக்கிறது, ஏன் தங்கத்திற்கு மட்டும் தினம் தினம் விலை மாற்றம் செய்து கொண்டே இருக்கின்றனர் என பல கேள்விகள் வாடிக்கையாளர்களுக்கு இருக்கலாம், அதற்கு காரணம் என்று ஒன்றே ஒன்றை சொல்லி விட்டு நகர்ந்து விட முடியாது, தங்கத்தின் விலை உயர்வுக்கு பல காரணங்கள் இருக்கின்றன.
முதலாவதாக அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு குறையும் போதெல்லாம் தங்கத்தின் விலை சந்தையில் உயரும், இந்தியாவில் கலாச்சார ரீதியாக பண்டிகைகள், திருமணங்கள் என அனைத்திற்கும் தங்கம் வாங்குவது வழக்கம், தங்கத்தின் தேவை இங்கு அதிகம் இருப்பதால், தங்கத்தை எங்கு கொள்முதல் செய்கிறோமோ அவர்கள் நிர்ணயிப்பதே விலையாக இருக்கிறது.
பெரும்பாலான முதலீட்டாளர்கள் தங்கம் ஒரு பாதுகாப்பான முதலீடு என கருதி தங்கத்தின் மீது முதலீடு செய்வதாலும் தங்கத்தின் விலை உயருகிறது, கடைசியாக போர், உலகளாவிய அரசியல் நிகழ்வுகள், உலகளாவிய பொருளாதார நெருக்கடிகள் இவைகளும் தங்கத்தின் விலையை இந்திய சந்தைகளில் தாறுமாறாக உயர்த்தும் காரணிகளாக இருக்கின்றன.
" தங்கத்தின் விலையை ஏதாவது ஒரு காரணி நிர்ணயிக்கிறது என்றால் விலை மாற்றத்தை தவிர்க்கலாம், இந்த காரணிகள் எல்லாமே சுழற்சியாக அரங்கேறுபவை என்பதாலே தங்கத்தின் விலை தினம் தினம் மாறிக் கொண்டே இருக்கிறது "