What Is Systematic Withdrawal Plan - இந்த பதிவில் சிஸ்டமேட்டிக் வித்டிரால் பிளான் (SWP) பற்றி விவரமாக பார்க்கலாம்.
What Is Systematic Withdrawal Plan -வழக்கமான வருமானத்திற்காக சிலர் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வார்கள், இதில் டிவிடென்ட்களை அடிக்கடி பெற விரும்புவார்கள். மியூச்சுவல் ஃபண்ட்களில், குறிப்பாக டெப்ட் சார்ந்த திட்டங்களில், காலாண்டு அல்லது மாதாந்திர டிவிடென்ட் தேர்வுகள் இருக்கிறது.மேலும், இந்த டிவிடென்ட்கள் திட்டத்தின் இலாபத்தில் இருந்து மட்டுமே கொடுக்கப்படுகிறது, மேலும் அவை ஒவ்வொரு மாதமும் கிடைக்கும் என்ற நிச்சயமும் கிடையாது.
மேலும் மற்றொரு வழியாக, சிஸ்டமேட்டிக் பணமேடுத்தல் திட்டம் (SWP) மூலம் வழக்கமான வருமானத்தைப் பெற்றுக்கொள்ளலாம். இதற்கு, முதலில் குரோத் பிளான் திட்டத்தில் முதலீடு செய்து, உங்கள் தேவைக்கேற்ப மாதாந்திரம் பெற வேண்டிய தொகையை குறிப்பிட வேண்டும். பின்னர், ஒவ்வொரு மாதமும் குறிப்பிடப்பட்ட தேதியில், அந்தத் தொகைக்கு சமமான யூனிட்கள் பணமாக்கப்பட்டு உங்களுக்கு கொடுக்கப்படும்.
எடுத்துக்காட்டாக: ஒரு முதலீட்டாளர் ரூ.10 இலட்சம் முதலீடு செய்து, ஒவ்வொரு மாதமும் 1ஆம் தேதியன்று ரூ. 10,000 பெற விரும்புகிறார் என்றால், அந்தத் தொகைக்கான யூனிட்கள் ஒவ்வொரு மாதமும் பணமாக்கப்பட்டு அவருக்கு கொடுக்கப்படும்.
டிவிடென்ட் மற்றும் SWP-க்கான வரிக்கணக்கீடு மாறுபடும் என்பதால், முதலீட்டாளர்கள் அனைத்து விவரங்களை அறிந்து கொண்டு திட்டமிடுவது மிகவும் அவசியம்.
குறிப்பு: மாதாந்திர வருமானத்திற்கான உத்தரவாதம் இல்லை, மற்றும் எதிர்கால வருமானத்திற்கான உத்தரவாதமாக இதைப் பார்கக்கூடாது என்பது குறிப்பிடத்தக்கதாகவும்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2