What Is Losing Deposit In Election - பொதுவாக வேட்பாளர்கள் தேர்தலில் டெபாசிட் இழந்து விட்டார் என கேள்வி பட்டு இருப்போம் அப்படி என்றால் என்ன என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
பொதுவாக தேர்தலுக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் வைப்புத்தொகை என்ற பெயரில் ஒரு குறிப்பிட்ட தொகையை கட்டி ஆக வேண்டும் என்பது தேர்தல் விதி ஆகவே இருக்கிறது, அந்த வகையில் உள்ளாட்சிக்கு போட்டியிட்டாலோ, மக்களவைக்கு போட்டியிட்டாலோ, மாநிலங்களவைக்கு போட்டியிட்டாலோ எதற்கு போட்டி இட்டாலும் வேட்பாளர் டெபாசிட் கட்டி ஆக வேண்டும்.
சரி இந்த டெபாசிட் தொகை என்பது எவ்வளவு இருக்கும் என்றால் மக்களவைக்கு போட்டி இடும் வேட்பாளர்கள் வைப்புத்தொகையாக ரூ 25,000 கட்ட வேண்டும், அதே சமயத்தில் மாநில சட்டமன்றங்களுக்கு போட்டியிடுவோர் வைப்புத்தொகையாக ரூ 10,000 கட்ட வேண்டி வரும், பட்டியல் சாதிகள் மற்றும் பழங்குடியின வேட்பாளர்கள் பாதி தொகையை வைப்புத்தொகையை செலுத்தினால் போதும்.
அதாவது மக்களவைக்கு ரூ 12,500, மாநில சட்டமன்றங்களுக்கு ரூ 5000 கட்டினால் போதும், சரி இந்த செய்திகளில் எல்லாம் வேட்பாளர்கள் டெபாசிட் இழந்து விட்டார்கள், வைப்புத்தொகையை இழந்து விட்டார்கள் அப்படி எல்லாம் செய்திகள் வருகிறதே அப்படி என்றால் என்ன என்று கேட்டால், ஒரு வேட்பாளர் குறைந்தபட்சம் பதிவான வாக்குகளில் 1/6 வாக்குகள் பெற்று இருக்க வேண்டும்.
அதாவது போட்டியிடும் வேட்பாளர் பதிவான வாக்குகளில் குறைந்தபட்சம் 16.7 சதவிகிதம் வாக்குகளை பெற்று இருக்க வேண்டும், இல்லையேல் வேட்பாளர்கள் அவர்கள் கட்டிய வைப்புத்தொகையை இழக்க நேரிடும், ஒரு வேளை 1/6 வாக்குகள் அல்லது 16.7% வாக்குகள் பெற்று விட்டால் வைப்புத்தொகை வேட்பாளர்களிடம் திருப்பி செலுத்தப்படும்.