அமெரிக்காவில் விமானம் மற்றும் ராணுவ ஹெலிகாப்டர் வானில் மோதி நிகழ்ந்த பயங்கர விபத்தில் இதுவரை 19 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்கள் இன்னும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கன்சாஸ் மாகாணத்திலிருந்து, வாஷிங்டன் நகரில் உள்ள ரீகன் தேசிய விமான நிலையத்திற்குச் செல்லும் விமானம், 60 பயணிகள் மற்றும் 4 ஊழியர்களுடன் புறப்பட்டு சென்றது. ஆனால், அமெரிக்க நேரப்படி இரவு 9 மணியளவில், ரீகன் விமான நிலையத்தின் 33ஆவது ஓடுபாதையில் தரையிறங்க முற்பட்டபோது, 3 வீரர்களுடன் பறந்து கொண்டிருந்த அமெரிக்க ராணுவ ஹெலிகாப்டருடன் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதியது.
இந்த கோர விபத்தில், விமானம் மற்றும் ஹெலிகாப்டர் இரண்டும் வெடித்து போடோமேக் நதியில் விழுந்தன. தகவல் அறிந்து விரைந்து வந்த மீட்புப் படையினர், உயிரிழந்தவர்களின் உடல்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதுவரை 19 பேரின் உடல்கள் மட்டுமே கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள பயணிகள் உயிருடன் இருப்பதற்கான வாய்ப்பு குறைவாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விபத்து தொடர்பாக தகவலறிந்த அமெரிக்க அதிபர் டிரம்ப், மீட்புப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என உடனடி உத்தரவிட்டதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. மேலும், இந்த துயர சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடைபெறுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.