இப்போது எல்லாம் மொபைல் போனை பயன்படுத்துவது அதிகமாக இருக்கிறது. UPI வசதிகள் வந்ததால் போனின் பயன்பாடு சற்று முக்கியமானதாக மாறி இருக்கிறது. இதனால் மொபைலில் டேட்களும் மிகவும் இருக்கிறது. இந்த காரணத்தால் மொபைல் போனை ஹேக் செய்கிறார்கள்.
சமீப காலமாகவே இதுபோன்ற ஹேக்கிங் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சில குறிப்பிட்ட அறிகுறிகளை வைத்து உங்கள் செல்போன் ஹேக் செய்யப்பட்டு இருக்கிறதா என்பதை எளிதாக கண்டுபிடிக்கலாம். அது தொடர்பான தகவலை பார்க்கலாம் வாங்க..
ஹேக் செய்யப்பட்ட மொபைல்கள் வேகமாக பேட்டரி காலியாகும். மேலும் ஓவர் ஹீட் (Overheat) ஆக வாய்ப்பு அதிகம்.
உங்கள் தகவல்கள் இணையத்தின் மூலம் திருடப்படும் வாய்ப்பு உள்ளது. திடீர் செயலிகள், மெதுவான செயல்பாடு இருக்கும். பயன்படும் செயலிகள் மெதுவாக வேலை செய்யலாம் அல்லது திறக்க அதிக நேரம் எடுத்துக்கொள்ளலாம்.
உங்கள் மொபைல் கேமரா, மைக் போன்றவை தானாக செயல்படும். புதிய செயலிகள் திடீரென அனுமதி கேட்கலாம். அதனால் கவனமாக இருக்க வேண்டும். இந்த அறிகுறிகள் இருந்தால், உடனடியாக மொபைலை ஸ்கேன் செய்யவும் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்த வேண்டும்.