Visa Free Countries For Indians - பொதுவாக ஒரு பயணி ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டிற்கு பயணிக்க பாஸ்போர்ட் என்பது முக்கிய ஆவணமாக இருந்தாலும், அதற்கு அடுத்தபடியாக விசா என்னும் ஆவணமும் ஒரு முக்கிய ஆவணமாக அறியப்படுகிறது, அந்த விசா என்பது கிட்டதட்ட ஒரு நுழைவுச்சீட்டு, அனுமதிச்சீட்டு போல செயல்படுகிறது, ஒரு பயணி அந்த நாட்டில் எத்துனை நாள் இருக்க வேண்டும் என்பதை விசா தான் தீர்மானிக்கிறது.
அந்த வகையில் ஒரு நாடு எத்துனை நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்க முடியும் என்பதை பொறுத்து ஹென்லி பாஸ்போர்ட் குறியீடு என்பது, ஒரு நாட்டின் பாஸ்போர்ட்டிற்கு கொடுக்கப்படுகிறது, அப்பட்டியலில் இந்தியா 80 ஆவது இடத்தில் இருக்கிறது, அதாவது இந்திய பாஸ்போர்ட்டை வைத்துக் கொண்டு விசா இல்லாமல் ஒரு பயணி 62 நாடுகளுக்கு பயணிக்க முடியும்.
இந்தியர்கள் விசா இல்லாமல் பயணம் செய்ய முடிகின்ற 62 நாடுகள்: அங்கோலா, பார்படோஸ், பூட்டான், பொலிவியா, பிரிட்டிஷ் விர்ஜின் தீவு, புருண்டி, கம்போடியா, கேப் வெர்டே தீவுகள், கொமொரோ தீவுகள், குக் தீவுகள், ஜமைக்கா, ஈரான், இந்தோனேசியா, ஹெய்டி, கினி-பிசாவு, கிரெனடா, காபோன், ஃபிஜி, எத்தியோப்பியா, எல் சால்வடோர், ஜிபூட்டி, டொமினிக்கா, ஜோர்டான், கஜகஸ்தான், கென்யா, கிரிபட்டி, லாவோஸ், மலேசியா, மாலத்தீவு, மக்காவோ (எஸ்ஏஆர் சீனா), மடகாஸ்கர், மார்ஷல் தீவுகள், மவுரித்தேனியா, மொரீஷியஸ், மாண்ட்செராட், மொசாம்பிக், மியான்மர், நேபாளம், நியூ, தான்சானியா, செயின்ட் வின்சென்ட் மற்றும் கிரெனடைன்ஸ், செயின்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ், செயின்ட் லூசியா, இலங்கை, சோமாலியா, சீஷெல்ஸ், சியரா லியோன், செனகல், ருவாண்டா, சமோவா, கத்தார், பலாவ் தீவுகள், ஓமன், தாய்லாந்து, திமோர்-கிழக்கு, டோகோ, டிரினிடாட் மற்றும் டொபாகோ, துனிசியா, துவாலு, வனுவாட்டு, ஜிம்பாப்வே, மைக்ரோனேசியா
" நேபாளம், பூட்டான் உள்ளிட்ட நாடுகளுக்கு இந்தியர்கள் பாஸ்போர்ட்டே இல்லாமல் வெறும் இந்திய ஐடியை மட்டும் வைத்து பயணிக்க முடியும், மேற்கண்ட 62 நாடுகளிலும், விசா இல்லாமல் பயணம் செய்ய முடிந்தாலும் அங்கு தங்குவதற்கு ஒரு குறிப்பிட்ட நாட்கள் மட்டுமே அந்த நாடுகள் அனுமதிக்கும் "