• India
```

இனி வந்தே பாரத் ரயிலில் இலவச பயணம்.. அரசு அறிக்கை!!

vande bharat eligibility for central government employees

By Dhiviyaraj

Published on:  2025-01-18 21:52:03  |    47

மத்திய அரசு ஊழியர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன, LTC (Leave Travel Concession) எனப்படும் விடுமுறை பயணச் சலுகை ஒரு முக்கியமான திட்டமாகும்.

இந்த திட்டத்தின் கீழ், தகுதியுள்ள மத்திய அரசு ஊழியர்கள் நான்கு ஆண்டுக்கு இருமுறை சொந்த ஊருக்கோ அல்லது இந்தியாவின் எந்தவொரு நகரத்திற்கோ குடும்பத்துடன் இலவசமாக பயணம் செய்யலாம். இதற்காக சம்பளத்துடன் கூடிய விடுமுறையும் வழங்கப்படும்.

முந்தைய காலங்களில், ராஜ்தானி, சதாப்தி மற்றும் துரந்தோ போன்ற பிரீமியம் ரயில்கள் மட்டுமே கட்டணமின்றி பயணிக்க அனுமதிக்கப்பட்டிருந்தன. தற்போதோ தேஜாஸ், வந்தே பாரத் மற்றும் ஹம்சஃபர் ரயில்களும் இந்த பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.

இந்த மாற்றங்கள் செலவினத் துறை மற்றும் பணியாளர்கள் மற்றும் பயிற்சி துறை (DOPT) ஆகியவற்றின் இணைந்த ஆலோசனைக்குப் பிறகு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன. மத்திய அரசு ஊழியர்களின் பணிநிலையைப் பொறுத்து ஏசி முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்பு உள்ளிட்ட பயண விருப்பங்கள் வழங்கப்படும்.

Harmful Effects of Drinking Coca Cola
Information

Harmful Effects of Drinking Coca Cola