அமெரிக்க அரசு பயணத்திற்காகத் தவிர்க்க வேண்டிய 20 நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த நாடுகளில் உயிருக்கு அச்சுறுத்தல், பயங்கரவாத ஆபத்து, அரசியல் நெருக்கடி மற்றும் போர் நிலைமை போன்ற காரணங்களால் அமெரிக்கர்கள் பயணிக்க கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
போர் மற்றும் உள்நாட்டு குழப்பம் காரணமாக உக்ரைன், ரஷ்யா, சிரியா, ஏமன், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் பயணிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.
பயங்கரவாத அச்சுறுத்தல் காரணமாக சோமாலியா, லிபியா, ஈராக் போன்ற நாடுகளும், அரசியல் குழப்பம் மற்றும் பாதுகாப்பு பிரச்சினை காரணமாக வெனிசுலா, பெலாரஸ், லெபனான் நாடுகளில் பயணிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், அழுத்தமான ஆட்சியியல் கட்டுப்பாடுகளால் உயிருக்கு ஆபத்து என்பதற்காக வட கொரியா செல்ல எச்சரித்துள்ளது.
பயணத்தை திட்டமிடுவதற்கு முன்பு பயணத் தடைகள் மற்றும் பாதுகாப்பு வழிமுறைகள், நாட்டின் தற்போதைய நிலைமை ஆகியவற்றை சரிபார்க்க அமெரிக்க அரசு அறிவுறுத்தியுள்ளது.