Udyogini Scheme Tamil - பெண் தொழில் முனைவோர்களுக்கு, 30 சதவிகிதம் மானியத்துடன், மூன்று இலட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்கும் ஒன்றிய அரசின் கடன் திட்டம் குறித்து இத்தொகுப்பில் பார்க்கலாம்.
Udyogini Scheme Tamil - பொதுவாக தேசத்தில் ஆண் தொழில் முனைவோர்கள் போல, பெண்களும் தற்போது தொழில் துவங்க ஆசை கொள்கின்றனர், டீ கடை முதல் டெக் நிறுவனம் வரை பல துறைகளில் பெண்களும் தற்போது சாதித்து வருகின்றனர், அந்த வகையில் பெண் தொழில் முனைவோர்கள் பலரும் கையில் திட்டங்களை வைத்துக் கொண்டு பணமில்லாமல் தவிக்கின்றனர்,அவர்களுக்காகவே ஒன்றிய அரசு ஒரு புதிய கடன் திட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறது, அது குறித்து இங்கு பார்க்கலாம்.
உத்யோகினி திட்டம் என்பது பொதுவாக ஒரு எளிய குடும்பத்தில் இருந்து தொழில் முனைய நினைக்கும் ஒரு பெண் தொழில் முனைவோருக்கு ஒன்றிய அரசு அறிமுகப்படுத்தி இருக்கும் ஒரு கடன் உதவி வழங்கும் திட்டம் ஆகும், இத்திட்டத்தின் மூலம் தொழில் துவங்க நினைக்கும் பெண் தொழில் முனைவோர்களுக்கு 30 சதவிகிதம் மானியத்துடன், மூன்று இலட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படுகிறது, இந்த கடனுக்கு கொலட்ரல் ஏதும் தேவையில்லை.
சரி, கடனை எப்படி பெறுவது?
நேரடி வங்கிக்கடன் தான், முதலில் ஆதார் கார்டு, பான் கார்டு கையில் இருக்க வேண்டும், பின்னர் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு BPL கார்டு அதாவது Below Poverty Line கார்டு என்றதொரு கார்டு வழங்கப்படும், அது இருந்தால் வருமானச்சான்றுக்கு பதில் அதை பயன்படுத்திக் கொள்ளலாம், இல்லையேல் தனியாக வருமானச்சான்றிதழுக்கு பதிவு செய்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
குடும்பத்தின் வருமானம் வருடத்திற்கு 1.5 இலட்சத்திற்குள் இருக்க வேண்டும், அவர்கள் மட்டுமே இந்த கடனுக்கு தகுதி ஆனவர்களாக கருதப்படுகிறார்கள், இத்திட்டத்தின் கீழ் டெய்லரிங், நூலகம், பேக்கரி, பலசரக்கு உள்ளிட்ட 88 தொழில்கள் ஆரம்பிக்க வங்கிகள் மூலம் கடன் வழங்கப்படுகிறது, மாற்றுத்திறனாளிகள், விதவைகளுக்கு எந்த வித ரெஸ்ட்ரிக்சனும் இல்லாமல் லோன் வழங்கப்படுகிறது.