துருக்கியில் உள்ள கொரோக்லு மலைப்பகுதியில் அமைந்துள்ள கர்தல்காயா பகுதியில் நேற்று இரவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
துருக்கியில் உள்ள கொரோக்லு மலைப்பகுதியில் அமைந்துள்ள கர்தல்காயா பகுதியில் நேற்று இரவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
இஸ்தான்புல்லுக்கு கிழக்கே சுமார் 300 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்த இடத்தில், கிராண்ட் கார்டால் ஹோட்டல் தீக்கிரையானது.
தற்போது குளிர்கால பள்ளி விடுமுறை என்பதால், பலர் குடும்பத்துடன் விடுமுறையை கழிக்க இந்த ரிசார்ட்டுக்கு வந்திருந்தனர். அவர்கள் தூங்கிக்கொண்டிருந்த நேரத்தில், 12 அடுக்குகளைக் கொண்ட ஹோட்டலில் திடீரென தீப்பரவல் ஏற்பட்டது. தீ வேகமாக பரவியதால், உள்ளிருந்தவர்கள் தப்பிக்க முடியாமல் அவதிப்பட்டனர்.
இந்த கோர விபத்தில் 76 பேர் உயிரிழந்ததாகவும், 51 பேர் காயமடைந்ததாகவும் உள்துறை அமைச்சர் அலி யெர்லிகாயா தெரிவித்துள்ளார். அதிகாலை 3:30 மணியளவில் சமையல் பகுதியில் தீ ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. தீ மளமளவென மேல்தளங்களுக்கு பரவியது. தீ விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விரிவான விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.