அமெரிக்காவின் 47-வது ஜனாதிபதியாக சமீபத்தில் டொனால்டு டிரம்ப் பதவியேற்றார். தனது முதல் ஆட்சிக் காலத்திலேயே பல்வேறு அதிரடிகள் காண்பித்த டிரம்ப், இம்முறை ஆட்சியின் தொடக்கத்திலேயே அதனைச் செய்யத் தொடங்கினார்.
அமெரிக்காவின் 47-வது ஜனாதிபதியாக சமீபத்தில் டொனால்டு டிரம்ப் பதவியேற்றார். தனது முதல் ஆட்சிக் காலத்திலேயே பல்வேறு அதிரடிகள் காண்பித்த டிரம்ப், இம்முறை ஆட்சியின் தொடக்கத்திலேயே அதனைச் செய்யத் தொடங்கினார். தினம் தினம் பல்வேறு அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்து வரும் டிரம்ப், தற்போது அந்நாட்டு அரசு அதிகாரிகளின் சலுகைகளில் கைவைக்கத் தொடங்கியுள்ளனர்.
ஏற்கனவே, கொரோனா தொற்று காரணமாக வீட்டில் இருந்து பணிபுரியும் திட்டத்தை ரத்து செய்த அவர், அரசு ஊழியர்கள் வாரத்தில் 5 நாட்கள் கட்டாயமாக அலுவலகத்துக்கு வரவேண்டும் என்கிற உத்தரவையும் பிறப்பித்தார். தற்போது அடுத்த அதிரடியாக, அரசு ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் நடவடிக்கையைத் தீவிரப்படுத்தியிருக்கிறார். இதற்காக விருப்ப ஓய்வு திட்டம் ஒன்றை டிரம்ப் அரசு அறிவித்துள்ளது.
அதன்படி, அமெரிக்க பணியாளர் மேலாண்மை ஆணையம் அமெரிக்க அரசில் பணிபுரியும் சுமார் 20 லட்சம் அரசு ஊழியர்களுக்கு இ-மெயில் ஒன்றை அனுப்பியிருக்கிறது. அதில், "டிரம்ப் தனது அரசு நிர்வாகத்தை சிறப்பாகச் செயல்பட வைக்க விரும்புவதாகவும், அதற்கேற்ப சிறந்து விளங்கும், அதேநேரம் விசுவமாக இருக்கும் அரசு ஊழியர்கள் தனது நிர்வாகத்தில் இருக்க வேண்டும்" என விரும்புகிறார்.
மேலும், அரசு ஊழியர்களின் எண்ணிக்கையைக் கணிசமாகக் குறைக்கவும் முடிவு செய்திருக்கிறார். இந்நிலையில், டிரம்ப் நிர்வாகத்தில் பணியாற்ற விரும்பாத அரசு ஊழியர்கள் தங்களின் வேலையை ராஜினாமா செய்து, வேறு வேலையைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வாய்ப்பு வழங்கப்படுகிறது.
எனவே, அரசு வேலை வேண்டாம் என்றால், 'ராஜினாமா செய்கிறேன்' என இ-மெயிலில் பதிலளித்தாலே போதுமானது. அவ்வாறு ராஜினாமா செய்யும் அரசு ஊழியர்களுக்கு 8 மாத சம்பளம் முழுவதுமாக வழங்கப்படும்.