தொலைதூரப் பயணங்களுக்கு பெரும்பாலான மக்கள் ரயிலையே தேர்வு செய்கின்றனர்.
தொலைதூரப் பயணங்களுக்கு பெரும்பாலான மக்கள் ரயிலையே தேர்வு செய்கின்றனர். தனியார் பேருந்துகளுடன் ஒப்பிடும்போது, ரயில் கட்டணம் குறைவாக இருப்பதுடன், பயண நேரமும் குறைவாக இருக்கும் என்பதே இதற்கான முக்கிய காரணமாகும்.
ஆன்லைன் மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது, பயணிகளுக்கு பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகின்றன. குறிப்பாக பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில், முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் எல்லா சீட்டுகளும் வெறுமனே நிறைவு ஆகிவிடுகிறது.
பல பயணிகள், இடைத்தரகர்கள் மொத்தமாக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதே, முன்பதிவில் வரும் சிக்கலுக்கான காரணம் என குற்றம்சாட்டி வருகின்றனர். இதனைத் தடுக்க, நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் 4,725 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 4,975 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இந்த சிக்கல்களுக்கு தீர்வாக, முக அடையாளம், கைரேகை சரிபார்ப்பு மற்றும் கிளவுட் கம்ப்யூட்டிங் போன்ற நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, முறைகேடுகளை தவிர்க்க ரயில்வே பாதுகாப்புப் படை திட்டமிடுகிறது. மோசடிகளை உடனுக்குடன் கண்டறிந்து தடுக்க Machine Learning முறைவும்இடம் பெறுகிறது.
இந்திய ரயில்வே சட்டத்தின் பிரிவு 142(1) படி, ரயில்வே ஊழியர் அல்லது அங்கீகரிக்கப்பட்ட முகவர் தவிர வேறு யாரும் பயணச்சீட்டு விற்பனை செய்யக்கூடாது. இந்த விதிமுறையை மீறுவோருக்கு அபராதம் அல்லது சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.